ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2018

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உடலான இந்திரலோகத்தில் (இரத்தநாளங்களில்) நடக்கும் நிகழ்ச்சிகள்…!


நமக்குச் சம்பந்தமில்லாதபடி ஒருவர் கோபப்படுகின்றார் என்று அதைப் பார்க்கின்றோம். பார்த்ததும் அவர் மேல் வெறுப்பும் கோபமும் ஆத்திரமும் வருகின்றது. “இப்படிச் செய்கின்றாரே…!” என்ற வேதனை நமக்குள் கலந்துவிடுகின்றது.

இதைப் போல கோபம் வேதனை என்ற உணர்வுகள் விளைந்து அது இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இத்தகைய உணர்வின் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகின்றது.

உடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளை அது வீணாக்குகின்றது. எப்படி..?

கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ ஆத்திரப்படுவோரையோ நுகர்ந்திருந்தால் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
1.இரத்தத்தில் கருவாகி முதலிலே முட்டையாகின்றது.
2.முட்டையான பின்பு தொடர்ந்து அதே உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகர்ந்தால்
3.அந்த முட்டையின் இனக் குஞ்சாக அணுவாக மாறுகின்றது
4.அணுவான பின் எதனால் அணுவானதோ அதே உணர்வைக் கவர்ந்து தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது
5.பெருக்கிய பின் பக்கத்திலிருக்கும் நல்ல அணுக்களை வளரவிடாது உடலைப் பலவீனப்படுத்துகின்றது

ஆனால் கருத்தன்மை அடையவில்லை என்றால் நுகர்ந்த உணர்வின் விஷத்தின் தன்மை இதே இரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்குள் சென்று அதை வீணாக்கும் உணர்வுகளைத் தொடர்ந்து விடுகின்றது. அதாவது
1.இரத்தத்தில் அணுவாக உருவாகாதபடி அந்த முட்டை வெளியே சென்றால்
2.அழுகிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து
3.உடல் முழுவதும் சென்று எந்த உறுப்பில் கலக்கின்றதோ
4.அந்த உறுப்பை வீணாக்கிவிடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் உடலுக்குள் சென்று பலவிதமான உறுப்புகளைக் கெடுக்கும் அணுக்களாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான் இந்த  உபதேத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
1.உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்
2.உங்கள் உடல் முழுவதும் படரச் செய்கிறோம்
3.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்கின்றோம்.

அகஸ்தியன் ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வை நினைவூட்டி அந்த அகஸ்தியனின் உணர்வை ஈர்க்கும் சக்தியை அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தத்தில் பெருகப் பெருக அது கருத் தன்மை அடைந்து ஒளியான அணுக்களாகப் பெருகும். ஒளியான அணுக்கள் பெருகினால் நோயை உருவாக்கும் அணுக்களை ஒடுக்கி உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்யும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம்…!