1. செய்யும் தொழிலே தெய்வம்
நாம் ஒரு
வியாபாரம் செய்து வருகின்றோம். அப்படி நாம் வியாபாரம் செய்து வரும் காலத்தில், “எங்களிடம்
பொருள் வாங்கிச் செல்வோர்களின் குடும்பத்தினர்
அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அவர்களுடைய
குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்”
என்று எண்ண வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் இரத்த
நாளங்களில் கலந்து, எங்கள் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று
ஏங்கவேண்டும்.
பின், நாம் வியாபாரம்
செய்யும் பொருள்களை நமது கண்ணால் பார்த்து,
இந்தப்
பொருள்களைப் பயன்படுத்தும்
குடும்பத்தார் அனைவரும்
மகரிஷிகளின்
அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்து,
தெய்வீக
அன்பும், தெய்வீகப் பண்பும், தெய்வீக
அருளும் பெறக்கூடிய
அருள்
குடும்பமாக வளரவேண்டும் என்று எண்ணவேண்டும்.
இவ்வாறு
எண்ணினோம் என்றால், இதன் உணர்வுகள் நமது உயிரில் மோதி, நமக்குள்
உமிழ்நீராக மாறுகின்றது.
இந்த உணர்வின் உமிழ்நீர் நமது சிறு குடல் பெருங்குடலுக்குச் சென்று இரத்தமாக மாறுகின்றது. நாம் எடுத்துக் கொண்ட நல் உணர்வுகளால் நமக்கு நன்மையாகின்றது.
இந்த உணர்வின் உமிழ்நீர் நமது சிறு குடல் பெருங்குடலுக்குச் சென்று இரத்தமாக மாறுகின்றது. நாம் எடுத்துக் கொண்ட நல் உணர்வுகளால் நமக்கு நன்மையாகின்றது.
ஒவ்வொரு பொருளிலும் காந்தப்புலன் உண்டு. நமது நல் உணர்வின் ஏக்கப் பார்வையின் தன்மை கொண்டு, நாம் அங்கே தெய்வமாக மாறுகின்றோம்.
செய்யும் தொழிலே தெய்வம்.
இப்பொழுது, நாம் அங்கே தெய்வமாகின்றோம்.
2. நம் வியாபாரம்
பெருக என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய
கடைக்கு, தங்களுக்குச் தேவையான சரக்குகளை வாங்குவதற்கு எத்த்னையோ
பேர் வருகின்றனர். வருகின்ற வாடிக்கையாளர்களின் குடும்பங்களில் எத்தனையோ
சிக்கல்கள் இருக்கும், எத்தனையோ பிரச்னைகளுடன் வருவார்கள்.
ஒவ்வொரு
குடும்பத்திலும், உணர்வுகள் எத்தனையோ மாற்றமான நிலைகளில் இருக்கும். அப்போது, அவர்களுடைய
கவலைகளுடன் சரக்கு வாங்குவதற்காக நம்முடைய கடைக்கு வருகின்றனர்.
வந்தவரகள், தம்முள்
எடுத்துக் கொண்ட கஷ்ட உணர்வுகள் கொண்டு, “நம்மிடம் இந்தச் சரக்கு வேண்டும்” என்று கேட்பார்கள்.
உதாரணமாக, நம்முடைய கடையில் சரக்குக் கேட்பவர்கள் சந்தோஷமாகக் கேட்பதையும் பார்க்கலாம், சோர்வாகக் கேட்பதையும் பார்க்கலாம்.
உதாரணமாக, நம்முடைய கடையில் சரக்குக் கேட்பவர்கள் சந்தோஷமாகக் கேட்பதையும் பார்க்கலாம், சோர்வாகக் கேட்பதையும் பார்க்கலாம்.
வீட்டில் கஷ்டமாக
இருக்கும் பொழுது, இங்கே வந்து
சோர்வாகக் கேட்பார்கள். இது போன்ற நேரங்களில், நாம் மற்றவர்களுடைய உணர்வுகளை நுகர நேருகின்றது. மற்றவர்களுடைய
கவலையான வேதனையான உணர்வுகள் நம்முள் வந்து விடுகின்றன.
இப்படி, பிறருடைய வேதனை உணர்வுகள் நம்மை அறியாது நமக்குள் வந்து சேரும் நிலையில், அந்தத் தீய உணர்வுகளை, உடனுக்குடன் நம்மிடமிருந்தது நீக்கும் சக்தி பெறவேண்டும்.
அதற்கு முன்னால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் இரத்த நாளங்களில்
கலந்து, எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்
பெறவேண்டும், என்று அருள் உணர்வின் வலுவை, நம்முள் அதிகரித்துக்
கொள்ள வேண்டும்.
அருள் உணர்வுகள்
நம்முள் வலுவான நிலையில் இருக்கும் பொழுது, மற்றவர்களுடைய வேதனை உணர்வுகள் நம்முள் வராதபடி தடுத்து, நம்மை நாம்
பாதுகாத்துக் கொள்ள முடியும்.
விஞ்ஞானிகள்
ரோபாட் என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த இயந்திரம் தவறான, குற்ற
உணர்வுகளுடன் வரும் மனிதர்களைக் கண்டு எச்சரிக்கை செய்கின்றது.
இது போன்று, துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை, நமக்குள் சேர்த்து வலுவாக்கும் பொழுது, மற்றவர்களின்
வேதனையுணர்வுகளை நம் அருகில் வரவிடாது தடுத்து, தீய உணர்வுகளைத் தள்ளிவிடுகின்றது.
நம்மிடம் பொருள்கள் வாங்குபவர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் மனதார நினைத்துப்
பொருள்களைக் கொடுங்கள்.
அப்பொழுது
அருள் உணர்வுகள் உங்களில் வலுப் பெற்று,
உங்களிடம் பொருள் வாங்குபவர்களும் நன்மை
அடைகின்றார்கள்.
வியாபாரமும் நன்றாக நடைபெறுகின்றது.
நீங்கள்
எண்ணும் உணர்வு, உங்களுக்கு நன்மை தருகின்றது.