
தெய்வீக அன்பைத் தான் நாம் வளர்க்க வேண்டும்
பாசத்தால் நாம் அதிகமாக வேதனையைத் தான் நுகர்கின்றோம்… எதை…? விஷத்தை…!
1.எவர் மேல் பாசம் அதிகம் ஆகின்றதோ
2.அப்போது வேதனை என்ற நஞ்சையும் அதனுடன் இணைத்துக் கூடவே
சாப்பிடும்.
நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் அவன்
சேர்ந்து சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் நமக்குள் கலந்துவிடும்.
அவனை எண்ணி எண்ணி இந்த உடலே கரைந்து விடும். விஷத்தைச் சாப்பிட்டால்
எப்படியோ இந்த உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அந்த நோயின்
தன்மை பேயாகவே மாறுகிறது.
1.இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற
இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்
2.உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் ஒரு உடலுக்குள் பேயாகப்
போய் நோயாகவே உருவாக்கிவிடும்.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.உங்கள் உயிருடன் எப்பொழுதெல்லாம் ஒன்றுகின்றீர்களோ
3.அந்தச் சக்தியை அப்பொழுது நீங்கள்
பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
4.அதற்குத்தான் இந்த உபதேச வாயிலாக ஆழமாக ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.
விரயமில்லாதபடி எந்த நிமிடமும் நீங்கள் மகரிஷிகளின்
அருள் சக்தியை எடுக்கலாம்.
யாம் கொடுக்கக்கூடிய சக்தியை நீங்கள்
அனைவரும் பெற்று நீங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக்
கிடைக்கச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை
உங்களுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில்
1.உங்கள் பார்வை உங்கள் சொல் உங்கள் மூச்சு காற்றலையில்
பரவினாலும்
2.யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும்
என்று எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.