ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2025

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்


சில மலைப் பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று அக்காலங்களில் அகஸ்தியன் அமர்ந்த பாறைகளை…”
1.பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற இடங்களையும்
2.தலைக்காவிரியில் அகஸ்தியன் சுழற்சி வட்டம் ஜாஸ்தி… அந்த இடங்களையும்
3.இமயமலையில் அவன் சுழன்ற இடங்களையும் அகஸ்தியன் வந்து சென்ற இடங்களையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகளாக அவன் வெளிப்படுத்தியது இன்றும் அங்கே உண்டு.
 
ஆனால் சாகாக்கலை என்று மந்திர ஒலிகளால் செயல்பட்டவர்கள் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்திருந்தாலும் அது எல்லாம் அழிந்து விடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலையில் விஷத்தன்மையே படர்கின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்.
 
வேகாநிலை அடைந்த மகரிஷிகள் உயிர் ஒளியின் துடிப்பாக எப்படி இருக்கின்றதோ…? அதைப் போல தன் உணர்வினை உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக நஞ்சினை அடக்கி ஒளியாக்குகின்றார்கள்.
 
வைரம் ஞ்சினை அடக்கி ஒளிச்சுடராக இருப்பது போன்று
1.உடலில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும்
2.வாழ்க்கையில் வரும் ஞ்சான உணவுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
3.அந்த ஞானி விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் அடுக்கடுக்காகப் பரப்பி…” நஞ்சினை ஒடுக்கி
4.இந்த உணர்வின் தன்மையை மேலோங்கச் செய்து இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
5.துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
6.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி அதனின் துணை கொண்டு ஒளியின் சிகரமாகி
7.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அந்தத் துருவத்தில் வரும் உணர்வையே ஒளியாக மாற்றி
8.எந்த துருவத்தின் வழியில் ஈர்ப்பாகச் சக்திகளை எடுத்தானோ பூமிக்குள் வரும்ந்த நஞ்சினை மற்றது விளையாது
9.அதையே தனக்குள் ஒளியின் சிகரமாக மாற்றி அமைத்து இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றான்
10.அகஸ்தியன் துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக என்று…! இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.
 
அவனைப் பின்பற்றிவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கிறார்கள்…? என்பதையும் காட்டுகின்றார்.
 
மனிதனின் நிலைகளில் முழுமை பெற்று உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரமாக எவ்வாறு அங்கே சென்றடைந்தார்கள்…?” என்று உணர்த்திவிட்டு அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும் என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.