ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 23, 2025

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?


குருக்ஷேத்திரப் போர்…! ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள் அது உடலுக்கு குரு.ம் என்பது பிரணவம்…. அதாவது நாம் எண்ணுவது ஜீவன் பெறுகின்றது.
 
ஆகவே… உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.குருக்ஷேத்திரத்தில்… உயிரிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று க்கத்துடன் இருங்கள்.
 
நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாகப் பெற்று யாம் உபதேசித்த ஆற்றல்மிக்க சக்தியை… “நீங்கள் எண்ணிய போது எண்ணிய நிலைகள் கொண்டு…” உங்களுக்குள் கிடைக்கச் செய்கின்றேன்.
 
உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்தத் துன்ப உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தான் பணியச் செய்வதேமது ஆசி.
 
ஆகவே அந்த உணர்வுடன் நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி விண்ணிலே நினைவைச் செலுத்தி உயிரிடம் வேண்டுங்கள்.
 
அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் டர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயல் புனிதம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் பார்ப்போர் அனைவரும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இதை மட்டும் எண்ணி ஆசி பெறுங்கள்.
 
உங்களுக்குள் துன்பத்தைட்டும் சக்திகள் அனைத்தும் தாள் பணிந்து
1.உங்களுக்குள் ஒத்துழைத்து உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு வழிகாட்டியாக அது அமையட்டும்.
2.எது…?
3.எதுவும் கெட்டது அல்ல…! உங்களுக்குள் வலுவூட்டவும் வழிகாட்டியாகவும் அது இருக்கும்.
 
கெட்டது என்று அது தான் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் நீக்கிவிட்டுச் செல்ல விரும்புகின்றோம். கெட்டது என்று அது வழி காட்டினாலும் அந்த உணர்வு எனக்குள் சேர்ந்து விடுகின்றது.
1.ஆனால் வழிகாட்டி நிலைகளும் எனக்குள் அது பணிந்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
2.ஆக… வழிகாட்டிய அந்த விஷமே என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.
3.ஆகையினால் தான் அத்தகைய நிலைகளை “ஆசீர்வாதம்…” என்பது
4.உயர்ந்த சக்தியாக ஞானத்துடன் கூடிய மெய் வழி பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்…” என்று ஆசி கொடுக்கிறேன்.
 
அந்த வழியில் ஆசி வாங்கிப் பழகுங்கள்.