ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2026

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”


ராமன் மனதைக் குவித்து எப்படிச் சிவலிங்கமாகப் பூஜித்தானோ இதே போன்று நாம் எண்ணம் கொண்டு உணர்வின் தன்மைகளை ஒன்று சேர்க்கும் போது “இராமலிங்கம்…” என்று உயிரின் தன்மை எண்ணத்தால் உணர்வை ஒளியாக மாற்றியது என்று சொல்வார்கள்.
 
ஏனென்றால் எல்லாவற்றிற்கும் காரணப் பெயர் வைத்துத் தான் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
1.இராமலிங்கம் என்று சொன்னாலே நம் எண்ணங்கள் ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் ராமன்…”
2.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மை நாம் பெறும் பொழுது தான் ராமன்.
 
ராமனின் பக்தன் யார்…? ஆஞ்சநேயன். தனை நாம் எண்ணுகின்றோமோ இந்தச் சொல்லைச் சொல்லும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் உங்களுக்குள் வாயுவாகப் புகுகின்றது.
 
இராமனின் பக்தன் வாயு புத்திரன் அவன் ஒரு மந்திரி என்ற நிலைகளில் இந்த உணர்வின் தன்மை நீங்கள் சொல்லும் பொழுது பிறருடைய உடலில் இதைப் புகச் செய்தால் அவருடைய அறியாமையைச் நீக்கச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.
 
1.இவ்வாறு நம் சொல்லுக்குள் தியானம் எடுத்த உணர்வுகள் கேட்போர் செவிகளில் பட்டபின்
2.கண் கவர்கின்றது அவருடைய ஆன்மாவாக மாற்றுகின்றது
3.உயிரில் உள்ள காந்தம் கவர்கின்றது. இந்த உணர்ச்சி உடல் முழுவதும் படர்கின்றது.
 
ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் தீமையை நீக்கும் உணர்வுகளைப் பரவச் செய்யும் பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஞானமாக அந்த எண்ணங்கள் வருகின்றது.
 
அந்த எண்ணமும் சரி நமக்குள் எடுத்துக் கொண்ட அணுக்களும் சரி நம் உடலும் சரிஅந்த உணர்வுக்கொப்பத் தான் நம்முடைய செயல்களாகும் சொல்லும் வரும்.
 
ஆகையினால்
1.இந்த வழியில் நாம் அனைவரும் உலகுக்கே வழிகாட்டியாக
2.குரு வழியில் அகஸ்தியன் சென்ற பாதையில் நாம் சென்று இருளை அகற்றி
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்கி நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாற வேண்டும்.
 
நமது பேச்சும் மூச்சும் பார்வையும் பிறருடைய தீமைகளை அகற்றச் செய்ய வேண்டும். நம் பேச்சும் மூச்சும் பிறரை நல்ல சிந்தனைகளைச் சிந்திக்கும்படி நல்ல உணர்வுகள் வளரும்படிச் செய்ய வேண்டும்.
 
நாம் பார்க்கும் பார்வை அவர்களை நலம் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும். அவர் வாழ்க்கையில் வளம் பெறும் நிலையாகச் செயல்பட வேண்டும்.
 
நமது பார்வை பிறருடைய தீமைகளையும் நோய்களையும் போக்கும் சக்தியாகப் பெற வேண்டும்.
1.அவருடைய நோயின் உணர்வு சங்கடத்தின் உணர்வு நமக்குள் புகாது
2.”தடுத்து நிறுத்தும்…” அந்த அருள் சக்தியாக நீங்கள் மாற வேண்டும்.
 
எனக்கு குரு கொடுத்த அருள் சக்தியை உங்களுக்கும் பெறச் செய்கின்றேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
அவ்வாறு வளர்ந்து என்றென்றும் ஏகாந்தமாக எந்த எதிர்ப்பும் இல்லாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
 
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளி அருள் வழிப்படி
1.எனக்குள் அந்த ஞான வித்தை வளர்த்து
2.அந்த ஞானத்தின் வித்தைத் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்தது.
3.நாம் அனைவரும் அதன் வழி நாம் செல்லும் போது பேரருளாக மாறுகின்றோம்.
4.பேரருளாக மாறும் பொழுது பேரொளியாக மாறுகின்றது.
5.பேரொளி என்ற நிலை வரும் போது பேரிருளையும் மாற்றும் சக்தி வருகிறது.
 
இதை நாம் தொடர்ந்து வழிப்படுவோம் அருள் ஞானத்தைப் பெருக்குவோம் அருள் வழி வாழ்வோம் என்ற இந்தப் பிரதிக்ஞையை…” நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி பெறச் செய்யக்கூடிய உணர்வுகளை நாம் பெருக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு தெருவிலும் அமைதி பெறச் செய்ய வேண்டும் சொல்லால் அல்ல
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
3.அந்த உணர்வலைகளை நாம் மூச்சலைகளாகப் பரப்ப வேண்டும்.