இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி மூன்று
சாம்ராஜ்யத்தையும் எப்படி அடக்க
வேண்டும் என்று வியூகத்தை
வைத்துக் கவர்ந்து கொள்கின்றார்.
அந்த உணர்வுகள் கொண்டு
அவர் உடலை உருவாக்கியவர். அந்தச் சக்தியின் தன்மை கொண்டு வியூகத்தை வைத்து அடுத்த
போர் முனைக்குச் சென்று வெற்றி பெறுகின்றார்.
வெற்றி பெற்றதற்குத்தான் “என்னை வெற்றியில் ஜெயித்துக் கொடுத்தது கைகேயி” -
என்ற அந்த உணர்வுகள்
அந்த உடலாக பிரம்மமானது.
அந்த குருவின் வழிப்படி வந்தபின் சந்தோஷப்படுகின்றான். உனக்கு
என்ன வேண்டும் என்று கைகேயிடம்
கேட்கிறான் தசரதன்.
ஜெயித்தவுடனே
நாம் என்ன செய்கிறோம்? சூதாட்டத்துக்குப் போகிறோம், ஜெயித்தபின்பு ஜெயித்துவிட்டேன் என்ற
உணர்வில்
எல்லோருக்கும் வாங்கிக் கொடுக்கின்றோம்.
அடுத்தாற்படி
தோற்றுப் போய்விட்டால் என்ன
செய்கிறோம்? ஒரு தரம்
ஜெயித்தால் சந்தோஷம் வருகின்றது. இரண்டாவது
தடவை தோற்றவுடனே இதெல்லாம்
போய் விடுகின்றது. கையில்
காசு இல்லை.
இதே மாதிரித்தான் இந்த உணர்வுகள் நம்
உடலிலே இவ்வழியில் இயக்குகின்றது என்பதனை உணரத்துவதற்காக அங்கே ஜெயித்துவிட்டேன் என்பதற்காக
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்கின்றான் யார்?
தசரதச்
சக்கரவர்த்தி.
யாரிடம்?
ஜெயித்துக் கொடுத்த அந்த மனைவியிடம் சக்தியிடம்
இன்னும் உனக்கு வேண்டுமா?
நீ வெற்றி பெற்றதுக்கு
இன்னும் எத்தனை வழிகளைக் காண்பித்தாலும்
அதற்கெல்லாம் நான் செய்து கொடுக்கிறேன்.
நான் சமயம் வரும்போது
கேட்கிறேன் என்று
சொல்கிறது கைகேயி.
அந்த வித்து
முதலில் கருவாகி
உருவாகிவிடுகின்றது. அதற்குப் பின் தான் முளைத்து வருகின்றது. உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
தான் எண்ணிய
திட்டப்படி வசிஷ்டர் -
கவர்ந்து கொண்ட உணர்வுகள்
பிரம்ம குருவாகிறது.
அது உருவாகி
அதன் எண்ணப்படி அது சக்தியாகின்றது.
பிரம்ம குருவின் மனைவி யார்?
அருந்ததி.
அருந்ததி என்று தெளிவாகக் கூறி
இணைந்து கொண்ட இந்த சக்திகள் எப்படி இயங்குகிறது?
இராமயணத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.
பத்தாவது நிலையை அடையக்கூடிய
இந்த சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருப்பது தசரதச் சக்கரவர்த்தி,
அவன் நாளொரு
மேனியாக இந்த வாழ்க்கையில்
எண்ணியதை
எதை
எல்லாம் பெற வேண்டும்
என்று விரும்புகின்றானோ
அது எல்லாம்
வசிஷ்டர் கவர்ந்து கொண்ட உணர்வு.
இந்த உணர்வின்
தன்மை தன் உடலாகி
அது தன் சக்தியாகி
மனித உடலில் எண்ணிலடங்காத மனைவியாக
(சக்திகளாக) இருக்கின்றது.
யாருக்கு?
தசரதனுக்கு. இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.
இந்த உடலுக்கு
பத்தாவது நிலையை அடையும்
இந்த உயிருக்கு இந்த உடலைக் காக்க அத்தனை சக்திகளும் நம் உடலிலே உண்டு என்று ரொம்ப அழகாக
வர்ணித்துக் காட்டுகிறார்கள்.
இராமாயணத்தில் இவ்வளவு தெளிவாக நமக்கு வழிகாட்டுகின்றார்கள்.
இராம நாமத்தை எண்ணிக் கொண்டேயிருந்தால்
இராமன் கொடுப்பான் என்று இது ஒன்றிலே தான் நிற்பார்கள்.
இராமாயணத்தைக் கேட்கும் போது சத்தம்
போட்டால் ஏண்டா சத்தம்
போடுகின்றாய் என்று இந்த வம்புகள்
அதைத்தான் கவர்கின்றது.
ஆக எழுத்தைத்தான் கவர்கின்றது. உணர்வைக் கவரவில்லை.
நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கண்ணிலே
எண்ணும்போது தான் இதன்
மேலே வருகின்றது. ஆனால்,
அதே சமயத்தில் செவி வழி ஒரு உணர்ச்சிகள் வரப்படும்போது இதை மறக்கின்றது.
இந்தப் போரும் நடந்துக்கொண்டேதான் உள்ளது.
ஞானிகள் எவ்வளவு தெளிவாகக் கூறினாலும் நாம் என்ன செய்கின்றோம்?
தசரதச் சக்கரவர்த்தி
இந்த சாம்ராஜ்யத்தையும் இதை நாம்
எல்லோரும் போற்ற வேண்டும்
என்பது அடிமையாக்கினால்
நானே பெரியவன் என்ற அகந்தையும் தனக்குக் கீழ் அடிமைப்படுத்த
வேண்டும் என்ற உணர்வின் தன்மை கொண்டு வியூகத்தை வளர்க்கின்கிறான்.
ஆக,
அவன் போர் செய்யும்
போது என்ன செய்கின்றது?
அதன் மேல் தான்
குறி செல்கின்றது. மற்றவர்களை வேதனைப்படுத்தும் உணர்வுகள் அவன்
உடலில் பிரம்மமாகி அருந்ததியாக இயக்குகின்றது. அது தான் கைகேயி.
இவன் உடல் என்ன
செய்தது? உடலுக்குள் மற்ற நல்ல
குணங்களை அடக்கி தனக்குள்
எடுக்கின்றது என்பதனை இங்கே காட்டப்படுகின்றது.
போரில் ஜெயித்து
வந்த பின் தன் உள் மனதிற்குள்
என்ன நடக்கின்றது என்று இராமாயணத்தில் காட்டுகின்றான்.
அதை அங்கே கூனி என்ன சொல்கிறது? தான் வெற்றி பெற்ற
உணர்வின் தன்மை வரப்படும்போது
இங்கே உன் மகனுக்குத்தான் பட்டம் சூட்ட வேண்டும்
என்று அந்த கூனி
கைகேயிக்கு உணர்த்திக்கொண்டே
உள்ளது.
ஏனென்றால், (கைகேயி) உன் தந்தை வீட்டில் நான் இருந்தேன்
அங்கே சாப்பாடு சாப்பிட்டேன். உன்னைப் பாதுகாக்க என்னை அனுப்பி வைத்தார்கள்.
ஆகவே
இங்கே உன் கூடவே இருந்து நான் இப்பொழுது உனக்குச்
சொல்கிறேன். நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்
என்று கைகேயிடம்
சொல்லும் போது அந்த
உணர்ச்சிகளை எப்படி அங்கே அவ்வளவு
தெளிவாக இராமாயணத்தில் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை நன்றாகப் படித்துப் பாருங்கள்.
கூனி
சொல்லும் அந்த உணர்வுகள்படி தன் மகனுக்குப்
பட்டம் சூட்ட வேண்டும்
என்ற உணர்வுகளை கைகேயி வளர்த்துக் கொள்கின்றது.
எங்கே மற்றவர்களை இம்சை செய்து
எல்லா சாம்ராஜ்யத்தையும் ஆள வேண்டும்
என்ற உணர்வை இந்த தசரதன் வளர்த்தானோ இந்த உடலுக்குள் இந்த சாம்ராஜ்யத்தை அடக்கிடும் நிலையாக வருகின்றது.
மற்ற சாம்ராஜ்யத்தை எப்படி
எல்லாம் நொறுக்கி தான் வெற்றி பெற
வேண்டும் என்ற உணர்வைக்
கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப இயக்கினானோ
அவன்
உடலுடன் இயக்கி உயிரான நிலைகள் அவன் சக்தியாக
இயக்கி
இவன்
உடலுக்குள் போர் முறைகள்
எப்படி வருகின்றது என்பதைத்தான்
இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.
தசரதனுக்கு கடைசியில் மனப்போர்
வருகின்றது.
எண்ணங்கள்
கொண்டு உணர்வானாலும் அணுவின்
தன்மை வந்த பின் உணர்வு சுவாசத்த உணர்வுக்குள் மோதல்கள் எப்படி?
இந்த உடலிலே மனக்
கலக்கங்கள், சஞ்சலங்கள், வெறுப்புகள்,
வேதனைகள் எல்லாம் வருகின்றது.
செல்வம்
இருக்கும் இங்கே நிம்மதி
இருக்கின்றதா?
அந்த சாம்ராஜ்யத்தை வெற்றிப் பெறச்செய்தான். அதே உணர்ச்சிகள்
இங்கே கூனி என்ன
செய்கின்றது?
அடுத்தவனுக்கு
- இராமனுக்குப்
பட்டம் சூட்டப்பட்டது என்றால் நீ
வேலைக்காரியாக ஆகிவிடுவாய். இந்த உள்
மனது எப்படி உணர்த்துகின்றது என்று
காட்டுகின்றார்கள். (நாமும் பார்க்கலாம் நமக்குள்).
உணர்வுக்கு உருவமாக்கி காவியமாத் தீட்டி
கருத்தினை
மக்களுக்குத் தெளிவாகக் கூறிய இந்த உபாயத்தை
அவரவர்
இஷ்டத்துக்குத் தெளித்து
விட்டனர்.
உண்மையின் மூலக்கூறை அறிய முயற்சிக்கவே இல்லை. இந்த உடலின்
இச்சைக்குத்தான் பெற முடிந்தது.
எப்படி சாம்ராஜ்யத்தை
அடக்க வேண்டும் என்ற உணர்வைப்
பெற்றானோ அதன் உணர்ச்சிதான்
இவன் உடலில் தசரதச்
சக்கரவர்த்திக்கு வருகின்றது.
நல்லவனை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான்.
தன் உடலுக்குள்ளே மற்றவர்களைத் துன்புறுத்திய உணர்வுகள் இங்கே இவன் உயிருடன்
வளர்ந்து இங்கே பத்தாவது
நிலையை அடைந்து மனிதனாகத்தான் இருக்கின்றது.
இவை எல்லாம்
இணைந்து வரப்படும்போது என்ன ஆகும்?
இரண்டு மனைவி
இருக்கிற ஒரு வீட்டில் சக்களத்திப் போராட்டங்கள் நடக்கின்றது. இந்த உயிருடன் சேர்த்து பலவிதமான உணர்வுகள் கொண்டு இந்த
உடலுக்குள் வரப்படும்போது போராட்டம் அது எப்படி இருக்கும்?
ஒரு கணவனுக்கு
இரண்டு மனைவி இருந்தால்
எப்படி இருக்கும்? அதே சமயத்தில் மூன்று மனைவி
இருந்தால் எப்படி
இருக்கும் என்று பாருங்கள்.
அதைப் போன்று
தான் உயிர் என்ற
நிலை வரப்படும்போது இதனுடன் சேர்த்து இத்தனை சக்தியையும்
சேர்த்துத் தான் இந்த உடலையே
இயக்குகிறது. அதனதன் உணர்வுகள்
அதனதனைப் பெறுகின்றது. எதன் உணர்வு எது வலுப் பெறுகின்றதோ அதன் வழிதான்
நடக்கின்றது.
இங்கே இராமனுக்குப்
பட்டாபிஷேகத்தைச் செய்ய வேண்டும்
என்று முடிவு எடுக்கின்றான்
தசரதன்.
இராமனோ அன்பு
கலந்தவன், அரவணைக்கும் குணம் கொண்டவன்,
பண்பு கொண்டவன், பரிவானவன், அணைவரையும்
அரவணைத்துச் செல்லக்கூடிய
பொறுப்புடையவன், பொறுமையுள்ளவன்,
சிந்திப்பவன்.
இப்படிப்பட்ட நிலைகளில் இராமன் இருப்பினும்
அவனுக்குப் பட்டம் சூட்ட இங்கே விரும்பவில்லை
அவன் பட்டம்
சூட்டி விட்டால் என் மகன்
வேலைக்காரனாகி விடுவான் நானும் வேலைக்காரியாகிவிடுவேன் என்ற உணர்வுகள் இங்கே கைகேயிக்குத் தோன்றுகின்றது.
கைகேயின் எண்ணம் என்ன? அடுத்த ராஜ்ஜியம் வளர்ந்து விட்டால் தன்னை அடக்கி
விடுவான்
ஆனால், அவனுக்குள் அவனை வலுவிழக்கச் செய்தால்
தனக்கு இந்த சாம்ராஜ்யம்
சொந்தமாகிவிடுகின்றது.
அவன் (தசரதன்) எண்ணிய உணர்வின்
சக்தி அவன் மனைவியாக வருகின்றது.
இந்த சாம்ராஜ்யத்தை ஆள அதைச்
செய்தான் இவனுக்குள் இருக்கும் சாம்ராஜ்யத்தை
இதுவே வந்து ஆளச் செய்கின்றது.
யாரை?
மற்றவர்களை துன்பப்படுபவர்களைப் பாரத்து ரசித்தான். ஆனால்
இவன் உடலுக்குள் என்ன நடக்கின்றது?
இந்த மனப் போராட்டம் நடக்கின்றது.
போரில் ஜெயிக்க வைத்ததற்கு
அன்று எனக்கு
இரண்டு வரம் கொடுத்தீர்களே, அதை
இப்பொழுது தருகிறீர்களா? என்று கைகேயி தசரதச் சக்கரவர்த்தியிடம் கேட்கிறாள்
கேட்டவுடனே, “நீ தாராளமாகக்
கேள். உனக்கு இல்லாததா..,?”
என்று சொல்கிறான்.
இராமன் காட்டுக்குச்
செல்ல வேண்டும் கைகேயி ஏன் எப்படிக் கேட்கிறாள்?
அவன் மூத்த மகன்
என்பதால் நியாயப்படி
அவனுக்குத்தான் பட்டம்
சூட்டவேண்டும். அவன் இருந்தால் இளையவனுக்குப் பட்டம் சூட்ட
முடியாது.
இளையவனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று பரதனிடம் இதைச் சொன்னால்
ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று தாய்க்குத் தெரியும்.
ஏனென்றால், பரதன் நல்லவர்கள் கூடப் பழகியவன்.
இந்த தீமையின் தன்மை தாயிடம்
ஒட்டவில்லை. இந்த உணர்வின்
தன்மை இங்கே விளைகின்றது.
ஆகவே, இதன்
வழி தான் சொன்னால்
ஏற்றுக் கொள்ள மாட்டான் தன்னையே
எதிர்ப்பான். நல்லவனுடன் சேர்க்கையில் இருக்கும் போது தீமையின் உணர்வுக்கு இதற்கு ஒப்புக்கொள்ளமாட்டான்.
உணர்வுகள்
இந்த உடலுக்குள் நுகர்ந்து எப்படி போர்மறைகள்
நடக்கிறது என்ற நிலையைத்
இராமாயணத்தில் தெளிவாகச்
சொல்கிறார்.
ஆகையினால் சிந்திக்கின்றாள் கைகேயி. பரதனைத்
தன் தாய்
வீட்டுக்கு அனுப்புகிறது. அந்தத்
தாயின் வீட்டுக்கு சென்ற பின்
அங்கு அமைதியாக இருக்கிறான்.
பாட்டன் வீட்டுக்குப் பரதனை அனுப்பியபின்
அவன் இல்லாத அந்த நேரத்தில்
தசரதச் சக்கரவர்த்தியிடம்
கைகேயி கேட்கிறது.
இதை உங்களுக்கு
விளக்கமாகக் கொடுத்துச் சொல்கிறேன். இன்னும் ஏராளமாக
இருக்கிறது. இந்த விளக்கம்
கொடுக்கப்படும்போது ஒரு அணுவின் தன்மை எவ்வாறு செயல்படுகிறது? என்பதனை நீங்கள் புரிந்துகொள்ளவும் முடியும்.
ஒவ்வொரு சந்தர்ப்பம்
கொடுக்கும் போதும் இதை
எல்லாம் இணை சேர்த்து வளர்த்துக் கொண்டபின் இந்த
உணர்வின் ஞானங்களை நீங்கள்
பெறக்கூடிய தகுதியை உருவாக்க
வேண்டும். ஏனென்றால், பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.
நமக்குள்
எத்தனை போர் முறைகள்
ஒவ்வொரு நொடியிலேயும் வருகின்றது?
அதை சமாளிக்கக்கூடிய சக்தியும்
அதற்குண்டான அருள் ஞானமும் உங்களுக்குத் தேவை.
அதற்குத்தான் உங்களுக்கு இந்த விளக்கங்களை எல்லாம் கொடுத்து வருகின்றோம்.