ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2026

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்


1.தீமைகளை வென்றவன் அருள் ஞானி.
2.அதை வைத்து நமக்குள் உருவாகும் தீமைகளைக் கொல்ல வேண்டும்.
 
ஒன்றை ஒன்று புசித்துத் தான் ஒவ்வொன்றும் வாழ்கின்றது. ஆடு சாந்தமாந உணர்வாக இருந்தாலும் புலி அதைக் கொன்று புசிக்கத்தான் செய்யும்.
 
இதைப் போல நமக்குள் நல்ல உணர்வுகள் இருப்பினும்
1.நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகளால் உடலுக்குள் டி.பி.நோய் வந்து விட்டால்
2.உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று புசிக்கத் தான் செய்யும்
3.எலும்புகள் இருக்காது காணாமல் போய்விடும்.
 
ஆக நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் உடலில் இவ்வாறு உருவாகி விட்டால் அதைக் கொன்று புசித்து விடும்.
 
மனிதனில் விளைந்த வேதனையான தீமையான மூச்சலைகள் அங்கே தாவர இனங்களில் பட்டு நாம் எதைப் புசித்தோமோ அதைக் கொன்று நமக்கு உணவில்லாத படி செய்து அந்த இனத்தைக் கொன்று விடுகின்றது.
 
அதாவது நம் உடலுக்குள் மட்டுமல்ல தாவர இனத்திலும் இதைத்தான் கொல்கிறது.
 
அக்ரிகல்ச்சரில் தென்னை மரத்திலே அதனுடைய கருவுலகை எடுத்து அதிலுள்ள சாறை எடுத்து அதிலே தீமை விளைவிக்கும்
1.“ஓலைக் கருகல்” என்ற நிலையில் அந்தச் சத்தினை உறிஞ்சிச் சாப்பிடும் கொசுக்களையோ பூச்சிகளையோ கொல்ல
2.விஞ்ஞானிகள் மற்ற உணர்வைச் சேர்த்து அதிலே கருவை உண்டாக்குகின்றார்கள்.
 
விஞ்ஞான அறிவு கொண்டு மரத்திலே இணைத்த பின் இது படர்ந்து ஓலைகளின் சத்தை எடுக்கும் ஆனால் அதே சமயத்தில் ஓலைச் சத்தைத் தின்று கொண்டிருக்கும் பூச்சிகளையும் கிருமிகளையும் இது கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
 
அது செத்த பிற்பாடு தான் இதுவும் போகும்… பின் மடியும்…!
 
அதே மாதிரித் தான் அந்த மகரிஷிகள் உணர்வின் சத்தை அந்த மெய் ஞானிகள் அருள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டு உடலில் விளைய வைத்த பின்
1.மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வின் அணுக்களை எது கொன்று புசிக்கின்றதோ…”
2.அது இருக்கும் வரையிலும் அருள் ஞானிகள் உணர்வு அதைக் கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
3.பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்தே இருக்கும்.
 
விஞ்ஞானத்திற்கு மெய் ஞானத்திற்கும் உள்ள நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
உணவுக்காக விஞ்ஞானி அவ்வாறு செய்கின்றான். ஆனால் என்றும் நிலையான சரீரத்தை அதாவது “நம்மை ஒளியின் சரீரமாக…” நிலைக்கச் செய்கின்றான் மெய் ஞானி.