தியானம் எடுத்தவர்கள் அனைவருமே
ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
ஒரு மீன் தன் உணர்வின் தன்மை
அதாவது தனக்குத் தேவையான “காந்தப் புலன்” குறையப்படும் பொழுது எதிர் நீச்சலாகித் தனக்குள்
அந்தக் காந்த ஆற்றலைப் பெற்று தன் உணவுக்காகத் தேடிச் சென்று தன் வலுவின் தன்மைகளைக்
கூட்டிக் கொள்கின்றது.
அதைப் போன்று தான்
1.நம் வாழ்க்கையில் ஏற்படும்
(நம்மை ஆழ்த்தும்) துன்பக் கடலான நிலைகளிலிருந்து
2.அந்தத் துன்பத்தை நீக்கிவிட்டு
3.இன்பக் கடலான அந்த மெய் ஒளியைக்
காணும் நிலைகளுக்கு
4.”நீந்திச் செல்லும் ஆற்றல்
தான்…!” யாம் உபதேச வாயிலாக வாக்காகக் கொடுக்கும்
5.”ஆத்ம சுத்தி” என்ற சக்தி வாய்ந்த
ஆயுதம்….!
6.கடல் அலைகளிலிருந்து விலக்கிச்
செல்ல உதவும் துடுப்பு போல அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நம் உடலுக்குள் இருக்கும் தீமைகளை நீக்க… நமக்கு
அடிக்கடித் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் மனக் குடைச்சல் மன வேதனை மனோ வியாதி
இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க இந்த ஆத்ம சுத்தியைப் பயன்படுத்துங்கள்.
ஏனென்றால் உடல் உபாதை இருந்தாலும்
“மனோ வியாதி…!” மிகக் கடினமானது.
1.சிந்தனையற்ற நிலைகள் கொண்டு
நம்மைக் கலங்கச் செய்து கொண்டிருக்கும்
2.இந்தத் தீய சக்தியின் தன்மையை
நாம் எதிர் நீச்சலாகி நீக்கும் தன்மைக்கு
3.யாம் கொடுக்கும் (ஞானகுரு)
இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.
ஏனென்றால் விஞ்ஞான உலகில் அழிந்து
கொண்டிருக்கும் மனித எண்ணத்தின் உணர்வலைகள் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு இருள் சூழ்ந்த
நிலைகள் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் விஷத்தின் தன்மையிலிருந்து
1.நம் அனைவரையும் மீட்ட…. “ஏதோ
நம்முடைய சந்தர்ப்பம்…!”
2.நம் குருநாதரின் அருளாற்றலின்
துணை கொண்டு
3.சப்தரிஷிகளின் அருளாற்றலை அறிந்துணர
முடிந்தது,
சப்தரிஷிகள் அவர்களுக்குள் விளைய
வைத்து வெளிப்படுத்திய உணர்வின் ஆற்றல்கள் அனைத்தும் மகாபாரதம் கந்த புராணம் சிவ புராணம்
போன்ற காவியங்கள் மூலம் சாதாரண மக்களும் புரிந்து எடுத்துக் கொள்வதறாகக் கொடுகப்பட்டது
தான்.
அதே சமயத்தில் அவர்கள் ஒளியின்
சரீரமாக நின்று வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் அனைத்தும்
இந்தப் பூமியிலே தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றது.
அந்த மாமகரிஷிகளின் உணர்வுகளை
ஒவ்வொருவரும் நுகர்ந்து அந்த ஆற்றல்மிக்க சக்தியை நாம் பெற்று
1.அவர்கள் காட்டிய நிலைகள் விஜய
தசமி என்ற
2.”ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்
என்ற சபதம் எடுப்போம்….!”