ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2018

நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்...! நம்முடைய பாசம் அதன் மீது தான் இருக்க வேண்டும்...!


உதாரணமாக நம் நண்பர் தன் குடும்பத்திற்குள் சண்டையிட்டு அவர்கள் அறியாதபடி மருந்து குடித்தோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையில் “தற்கொலை செய்து கொள்கிறார்...!” என்று வைத்து கொள்வோம்.

அந்த நண்பரிடத்தில் பாசமாகப் பழகி இருக்கும் போது அந்த நண்பனின் எண்ணம் ஓங்கி இருந்தால் அந்த உயிராத்மா நம் உடலுக்குள் வந்துவிடும். (பிறிதொரு ஆன்மா இல்லாத மனிதரே கூட இல்லை என்று சொல்லலாம்... தெரிந்து கொள்ளுங்கள்..!)

அவர் உயிரோடு இருக்கும் போது என்ன செய்தாரோ அந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் வந்து அதே நிலையைச் செய்யச் செய்யும். நம்முடைய செயல்களில் தடுமாற்றம் ஆகும்.

நாம் செய்த உதவியின் தன்மையிலே அந்த நண்பன் தன் குடும்பத்தில் தனக்கு இடைஞ்சலாகும் போது
1.“என்னுடைய நண்பன் எனக்கு நன்மை செய்தான்..! என்ற எண்ணத்தில்
2.அவன் மரணமடைவானேயானால் அந்த உயிராத்மா இங்கே வந்து
3,நமக்குப் பல தொல்லைகள் கொடுக்கத் தொடங்குகின்றது.

அதைப் போன்ற நிலைகளில் பிறிதொரு ஆன்மா உடலுக்குள் வந்துவிட்டால் அது வெளியிலே செல்வது மிகக் கடினம். இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடலில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது அதிகமாக இந்த எண்ணத்தை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் நம் உடலுக்குள் இன்னொரு ஆத்மா இருந்தாலும் அதனின் செயலை அடக்க முடியும்.

விருப்பு வெறுப்பு என்ற நிலைகளில் அன்பின் காரணமாகவும் வெறுப்பின் காரணமாகவும் எல்லோருடனும் தான் நாம் பழகி இருக்கிறோம்.

இதை போல ஆத்மாக்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்
1.கோபக்காரர் இரண்டு பேர் இருந்தால் கோபமான உணர்வு இரண்டும் ஒன்று சேரும் போது
2.இதைப் பிரித்துக் காண முடியாது.

முதலில் கொஞ்சக் கோபக்காரராக இருப்பார். ஆனால் அந்த வெறுப்பின் தன்மை ஓங்கி வளர்ந்து இன்னொரு ஆத்மாவின் நிலைகள் வந்த பின் “மிகுந்த கோபக்காரராக” மாறிச் செயல்படத் தொடங்குவார்.

நம்மை அறியாமலேயே நம்மை ஆட்டிப் படைக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டுக் கொள்ள ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.தவறு செய்யாமலேயே பிறிதொரு ஆத்மா நமக்குள் வந்துவிடுகிறது.
2.நல்ல ஆத்மா உடலுக்குள் வந்தாலும் வேதனையாகின்றது.
3.ஏனென்றால் அவர்களும் வேதனையோடு தான் இறக்கின்றார்கள்.

சரியான வளர்ச்சி இல்லாமல் இறந்த ஆத்மாக்கள் நம் உடலுக்குள் வந்தால் அவர்கள் உடலில் எந்தக் குணங்களை விளைவித்துக் கொண்டார்களோ அதன் நிலைகளில் நம் உடல்களில் செயல்படுத்தி விடுகின்றது.

அதற்காக வேண்டித்தான் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும் பழக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

அதன் மூலம் நீங்கள் சப்தரிஷி மண்டலத்துடன் உங்களுக்கு நேரடித் தொடர்பு ஏற்படுகின்றது. அந்தத் தொடர்பின் மூலம் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தி நீங்கள் இந்தத் தியானம் செய்யச் செய்யச் செய்ய....
1.நமக்குள் இன்னொரு ஆத்மா இருந்தாலும் (அல்லது வந்தாலும்)
2.நம்முடைய சக்தி ஓங்கி வளர்ந்து
3.உடலில் இருக்கக்கூடிய இன்னொரு ஆத்மாவுடைய செயல்களைத் தடைபடுத்திவிடும்.

எந்தச் சப்தரிஷி மண்டலத்தை எண்ணி நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த உடலுக்குள் சேர்த்துச் சேர்த்து விளைய வைத்துக் கொண்டோமோ இறந்த பின் நம் உயிராத்மா விண்ணை நோக்கிச் சென்று நேரடியாக அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் கலக்கின்றோம்.

மனிதனின் கடைசி எல்லை அது தான்...!