1.என் உடலுக்குள் ஆவி (பேய்) பிடித்து என்னை ஆட்டிப் படைக்கின்றது.
2.என்னைக் கடுமையான துன்பத்திற்குள் ஆழ்த்துகின்றது.
3.என் நல்ல சிந்தனைகளைக் குறைக்கின்றது
4.பில்லி சூனியம் செய்து என்னைச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள்
என்பார்கள்.
யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி இந்தத் தியானப் பயிற்சியை...
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
பெறவேண்டும் என்று எடுத்துக் கொண்டால் “பில்லி சூனியம் ஏவல் என்ற பேச்சுக்கே
இடமில்லாது செய்ய முடியும்...!”
எந்த உணர்வுடன் அந்த ஆன்மா தன் உடலை விட்டு வெளியேறியதோ “அந்த ஒரு
நினைவில் தான்” அது இருக்கும். அதற்கு மேற் கொண்டு வளராது. தன்னை மாற்றவும் தெரியாது.
தன் உணர்வின் ஆற்றலைத்தான் நம் உடலுக்குள் இருந்து செயலாக்கும்.
அதனுடைய இயல்பை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தியை நம்
உடலுக்குள் வலுவேற்றிக் கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்திகளை நம் உடலுக்குள் ஜீவித்துக்
கொண்டிருக்கும் அந்த இன்னொரு ஆத்மாவிற்குள் ஊடுருவிச் செலுத்தி அதற்கும் ஞானத்தைப்
“போதிக்க முடியும்...!”
அந்த மெய் ஞானிகளின் பால் நம் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி
1.நமக்குள் ஆட்டிப் படைக்கும் இன்னொரு ஆத்மா அது எதுவாக
இருந்தாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த ஆன்மா பெற வேண்டும் என்ற உணர்வை
3.அடிக்கடி நினைவு கூர்ந்தாலே போதுமானது.
(ஒரு நாளைக்கு ஐம்பதிலிருந்து நூறு முறையாவது)
அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை உடலிலிருக்கும் அந்த ஆன்மாவிற்கு ஊட்டப்படும்
பொழுது அதனுடைய வீரியத் தன்மை ஒடுங்கும்.
மகரிஷிகளின் அருள் ஞானம் எங்கள் உடலிலுள்ள ஆன்மாவும்
பெறவேண்டும் என்று அதற்குக் கொடுக்கும் பொழுது
1.நமக்குள் நின்றே அந்த ஆன்மா மெய் ஞானத்தைப் பெறும் தகுதி பெற்று
2.நம்முடன் ஒத்துழைக்கும் தன்மையாக இணைந்து வாழும் தன்மை பெறுகின்றது.
இதைப் போன்று அறியாது இயக்கும் நிலைகளிலிருந்து ஒவ்வொரு நொடியிலேயும்
உங்களைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் மெய் ஞானிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலேயும்
பதியச் செய்கின்றோம்.
ஆகையினால் இதைப் படித்துணர்ந்தோர் அனைவருமே “ஈஸ்வரா...!” என்று
புருவ மத்தியின் உங்கள் உயிரை எண்ணி விண்ணிலிருக்கும் மகரிஷிகளின் பால் கண்ணின்
நினைவைச் செலுத்துங்கள்.
பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள்
உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்
என்று அதை இழுத்து ஏங்கிச் சுவாசியுங்கள். கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள்
செலுத்துங்கள்.
அடுத்து
1.எங்கள் பேச்சுக்குள் இனிமை பெறவேண்டும்
2.எங்கள் செயல் அனைத்தும் நலம் பெறவேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் வளம் பெறவேண்டும்
4.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் என்ற
5.இந்த நல் உணர்வுகளை உங்களுக்குள் படைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வாறு படைத்த உணர்வலைகளை மூச்சலைகளாக நீங்கள் வெளிப்படுத்தும்
பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பெருக்கும்.
மீண்டும் அதே நினைவலைகளை நாம் கூட்டும் பொழுது நமக்கு அது “பெரிய
பாதுகாப்புக் கவசமாக” மாறும். நல் உணர்வைத் தோற்றுவிக்கும் நிலையாக நம்
சந்தர்ப்பங்கள் அமையும்.
ஆகவே இதனால் நமக்கும் நல்லதாகும். நம்மைச் சார்ந்தோரையும் நலம்
பெறச் செய்யும் சக்தியாகப் படர்ந்து அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்ய இது உதவும்.