எம்மிடம் (ஞானகுரு) கேட்கும்
பொழுது என் உடம்பில் இந்த நோய்கள் இருக்கின்றது. அது நிவர்த்தியாகி எனக்கு உடல் நன்றாக
வேண்டும். என்று கேளுங்கள்…! என்று பல தடவை சொல்லியிருக்கின்றேன்.
ஒவ்வொரு சமயமும் சொல்கின்றேன்.
அதைக் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்.
முதலில் ஒருவரிடம் இதைச் சொன்னாலும்
அதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அடுத்து வருபவர்களும்
1.ஐயோ…! என் கஷ்டம் என்னை விட்டுப்
போக மாட்டேன் என்கிறது.
2.என் பிள்ளை சொன்னபடி கேட்க
மாட்டேன் என்கிறான்
3.என் தொழிலில் வியாபாரம் சரியாகவில்லை
என்று இப்படித்தான் பதறிப் போய்க் கேட்கிறார்கள்.
அப்போது இந்த மாதிரி அவர்கள்
சொல்வதன் காரணம் என்ன…? என்று கேட்டீர்கள் என்றால் அவர்களுக்குள் இருக்கும் அந்தக்
கஷ்டமான உணர்வுகள் “நல்லதைக் கேட்க விடமாட்டேன் என்கிறது…!” என்பதற்காக வேண்டிச் சொல்கிறேன்.
ஏனென்றால் அந்தக் கஷ்டத்தையும்
நஷ்டத்தையும் மட்டும் தான் நமக்குள் ஓங்கி வளர்த்து இருக்கின்றோம்.
பாலுக்குள் சீனி காபித்தூள் போட்டால்
நல்லா வாசனையாக இருக்கிறது. காரம் போட்டால் என்ன செய்யும்…? ஐயோ…காரம்…! ஐயோ…காரம்…!
என்ற நிலைகள் தான் வரும்.
அந்த மாதிரி அடுத்தவர்கள் சொன்ன
கஷ்டத்தை எல்லாம் கேட்டு அந்தக் கஷ்டத்தைத் தான் உங்களால் முன்னாடி சொல்ல முடிகின்றதே
தவிர நிவர்த்திக்கின்ற நல்ல எண்ணம் வரவில்லை. ஆனால் தவறு நீங்கள் செய்யவில்லை.
சில நேரங்களில் சாமி (ஞானகுரு)
கோபமாகச் சொல்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள். கோபமல்ல அது…! அப்போது என்ன செய்கின்றோம்…?
ஒரு கனமான சாமானைத் (பொருளை)
தூக்க முடியவில்லை. நான் தம் கட்டித் தூக்குகின்றேன். அந்த மாதிரி
1.வரக்கூடிய சிக்கலை… உங்களால்
சமாளிக்க முடியவில்லை…!
2.அந்த நேரத்தில் “நான் இதை வேகமாகச்
சொல்லும் போது…! பதிந்து விடுகின்றது.
3.பார்…! சாமி சொன்னார் அல்லவா…!
என்று அந்த நேரத்தில் “என்னை” நினைக்க வேண்டியது வரும்.
4.ஞானிகளைப் பற்றி உங்களிடம்
பதிவாக்கியது ஞாபகத்திற்கு வரும்.
5.உடனே உங்கள் கஷ்டங்களையும்
துயரங்களையும் விட்டுவிட்டு
6.அந்த நல்லதைப் பெறவேண்டும்
என்ற எண்ணம் வலுவாக வரும்.
7.அப்படி அதை எண்ண வைப்பதற்காக
வேண்டித்தான் இதைச் செய்வது.
8.குருநாதரிடம் போய்க் கேட்கிறோம்
அவர் கோபிக்கின்றார் என்று எண்ண வேண்டியதில்லை.
நாம் இந்த மாதிரி நாம் இருந்தோம்.
ஆகையினால் “சாமி தான் கோபித்தாரே… நாம் எப்படியும் இதைத் திருந்த வேண்டும்…!” என்று
நீங்கள் எண்ணினால் அந்த ஞானிகளின் உணர்வு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.
நான் கோபிப்பது என்று அல்ல. உங்களிடம்
அழுத்தமாகச் சொல்லி உங்கள் உடலில் பதிவு செய்வதற்காக வேண்டித்தான் அவ்வாறு செய்வது.
ஒரு வேப்ப மரம் அதனிடம் இருக்கக்கூடிய
மணத்தால் அருகில் ஒரு ரோஜாப்பூ மணம் வந்தாலும் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது. தன்
இனமான கசப்பின் சத்தை அந்த மணத்திற்குள் இருக்கக்கூடிய உணர்வை வைத்துக் காற்றிலிருந்து
இழுத்து தனக்குள் பெருக்கிக் கொள்கின்றது.
பெருக்கிக் கொண்டு கசப்பின் வாசனையை
வெளிப்படுத்துகின்றது. அதாவது…. அந்த கசப்பை எடுத்து வளர்த்து கொண்ட பின்புதான் அந்த
வாசனையைக் கொடுக்கின்றது.
அந்த மாதிரித் தான் உங்களிடம்
இருக்கும் கசப்பான குணங்களை மாற்ற வேண்டும் என்று சொன்னால்
1.எதை… எப்படி எண்ண வேண்டும்…?
என்று உங்களிடம் நான் சொல்ல வேண்டும்.
2.அந்த அருளை எடுத்துத் தான்
நான் உங்களிடம் பேச வேண்டும்.
3.அது இல்லை என்றால் உங்களிடம்
பேச முடியாது.
4.ஆகவே நீங்கள் எல்லாம் நன்றாக
இருக்க வேண்டும் என்று எண்ணி.
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
6.அந்த உணர்வை என்னிடம் எடுத்துக்
கொண்டுதான் உங்களிடம் பேசுகின்றேன்
7.அந்த மாதிரிப் பேசும் போது
உங்களிடம் மகரிஷிகள் அருள் உணர்வவுகள் பதிவாகின்றது.
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
உங்கள் சிரமமெல்லாம் நீங்க வேண்டும். உங்கள் வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்க
வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்... அதை எண்ணுகின்றேன்… அதைச் சொல்கின்றேன்…!
நீங்கள் கேட்கும் போது நான் என்ன
செய்கிறேன்…?
1.நீங்கள் எல்லாம் அந்த மகரிஷியின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகிற போது
2.முதலில் நான் “அதுவாகின்றேன்….!
என் சொல்லும் அதுவாகின்றது….”
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா….!