
உயிரின் துடிப்பைக் கூட்டித் தீமைகளை நீக்க வேண்டும்
நமக்குக் கஷ்டகாலமாக
இருந்தால் கோவிலுக்குப் போய் காசைக் கொடுத்து அர்ச்சனை செய்து விட்டால் கஷ்டம்
தீர்ந்து போகும் என்று சந்தோசப்படுகிறோம்.
பணம் கொடுத்தால் அர்ச்சகர்
முதலில் கூப்பிட்டு விபூதி கொடுப்பார். கொடுக்கவில்லை என்றால் தட்டே
இந்தப் பக்கம் திரும்பாது. ஆக ஆண்டவனுக்குக் காசு கொடுத்தால்தான் அவனுடைய வாக்கு
இங்கே வரும். அந்த நிமிடத்தில் உங்களை ஆள்பவன் யார்…? நம்
உயிர்.
இப்பொழுது உதாரணமாக குழந்தை
என்ன செய்கிறது…? கீழே விழுந்து அவஸ்தைப் பட்டுத் துன்பப்படுகின்றது. நீங்கள் காக்கின்றீர்கள். அடுத்த நிமிடம் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?
ஓ…ம்
ஈஸ்வரா என்று உங்கள் உயிரை நினையுங்கள். உங்களை ஆள்பவன் அவனாக இருக்கிறான்.
1.அப்பொழுது
“ஓ…ம்” என்று
சுவாசிக்கும்போது காந்தம் அதிகமாகின்றது. அப்போது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
2.ஈஸ்வரா
என்று எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி
அந்தச் சுவாசத்தைக் கொண்டு வாருங்கள்.
அவன் கீழே விழுந்தான்... வேதனையான எண்ணம் வந்துவிட்டது. ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள்
சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சுவாசிக்கிறீர்கள்.
1.உயிரான
ஈசன் என்ன செய்கின்றது…?
2.அந்த
மகரிஷிகள் எப்படி மகிழ்ந்து உறவாடி அந்த உணர்வை எடுத்தார்களோ அங்கு பட்டவுடன்
ஈசனுக்கு அப்படியே மகிழ்ச்சியாகின்றது.
நீங்கள் இந்தக்
குழந்தை மேல் பாசம் கொண்டு இப்படி விழுந்துவிட்டானே என்ற வேதனையை உணரச் செய்து அந்த
வேதனை உணரக்கூடிய நிலை இருந்தாலும் ஈசனுக்கு வேதனையாகிறது.
இந்த உணர்வின் தன்மை
அங்கு பட்டவுடன் உடலுக்குள் இருக்கும் சக்திகளெல்லாம் சிவமாகி விடுகின்றது. உடலான
சிவம் என்ன செய்கின்றது…? உடல் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றது.
நீங்கள் ஆடவில்லை
என்றாலும் சிவன் நர்த்தனமாட ஆரம்பித்து விடுகின்றான். கை கால் எல்லாம் ஆடும். உடல்
சிவம்… சிவ நடனத்தைப் பற்றிக் காட்டியிருக்கிறார்கள்.
வாசுகி நீ சுவாசித்த
உணர்வின் சக்தியே அது உனக்குள் சக்தியாக இருந்து ஆட்டிப் படைக்கின்றது என்ற
தத்துவத்தைத் தெளிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். யார் படித்திருக்கின்றோம்…? அதை
யாரும் படிப்பதில்லை தெரிந்து கொள்வதுமில்லை.
ஆகையினால் நாம்
ஒவ்வொருவரும் இந்த நிலையை எடுத்து
1.எப்பொழுதெல்லாம்
நமக்கு அந்தக் கஷ்டமான நிலைகள் வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம்
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து
3.உள்முகமாக
நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த சக்தியைப் பாய்ச்சி சர்வ தீமைகளிலிருந்தும்
விடுபட வேண்டும்.
இன்றைய நிலையில் சாதாரண மக்களினுடைய நிலைகள்
வியாபரத்திலேயோ மற்ற நிலைகளிலோ பல உணர்வுடன் கஷ்டப்பட்டுக் கொண்டும் அவர்கள் எடுத்த
சுவாசத்தாலோ எத்தனையோ இன்னல்கள் பட்டுக் கொண்டு இருப்பார்கள்.
அவர்களைச் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய
வேலை என்ன…?
அவர்கள் மேல் இரக்கப்பட்டு அந்த இரக்க உணர்வுடன்
மட்டும் இருந்துவிடக் கூடாது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள்
உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் தியானித்துவிட்டு “இனி உங்களுக்குத் துன்பங்கள் இல்லை… நன்றாக இருப்பீர்கள்…!”
என்று சொல்லுங்கள்.
1.ஆனால் இதை வெளியிலே இருப்பவர்களுக்குச்
சொல்லிவிடுவார்கள்.
2.குடும்பத்திற்குள் இந்தச் சிக்கல்
வந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம்தான் ஜாஸ்தி வரும்.
ஏனென்றால் ஒருவருக்கொருவர் பழகியிருக்கிறோம். பார்த்தவுடன்
ஆத்திரம்தான் சீறி எழும். சந்தோசமாக இருந்திருப்போம்.
ஏதாவது எண்ணியிருப்போம். ஏதாவது சந்தர்ப்பங்களில்
இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்து விட்டால் நாம் நம்மையறியாமலேயே இந்த நிலைகளைப் பேசி
குடும்பத்திற்குள்ளே ஒவ்வொரு உடலிலும் வெறுப்புணர்வுகளை வளர்த்து விடுகின்றோம்.
அப்படி அந்த வெறுப்பாலே நாம் சுவாசிக்கும்
இந்த உணர்வுகள் நோயாக மாறி நம்மையே நாம் வெறுக்கும் நிலையையும் இந்த உணர்வலைகள் ஏற்படுத்தி
விடுகின்றன.
இதைப் போன்ற சந்தர்ப்பங்களிலிருந்து தியானமெடுக்கும்
ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் சிறிதளவு
பிழைகள் ஏற்பட்டாலும் உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
2.தீமை செய்பவர்கள் நாளை செய்வது
எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பாய்ச்சிப் பழகுங்கள்.