ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2018

“தீமை... தீயவர்கள்...” என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொlன்னால் ஏற்படும் விளைவுகள்


நாம் தீங்கே செய்ய வேண்டாம். ஒருவன் ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டான் என்று கேள்விப்பட்டு அதை நாம் வேடிக்கையாகப் பார்க்கின்றோம். நமக்குள் பதிவாகின்றது. பின்... எப்படி ஆக்ஸிடென்ட் ஆனான்...? என்று நாம் கேட்கின்றோம்.

இதை எல்லாம் கேட்டறிந்த பின் நாம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து ஒரு இடத்திற்குப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பஸ் வேகமாகப் போனதென்றால் போதும். ஆக்ஸிடென்ட் ஆன அந்த நினைவு வரும்.

அந்த உணர்வின் தன்மை வந்தவுடன் நாம் டிரைவரைப் பார்ப்போம். ரிமோட் கண்ட்ரோல் REMOTE CONTROL மாதிரி டிரைவரை என்ன செய்யும்...? அதற்குத் தகுந்த மாதிரி ஒதுங்கி நாம் பாய்ச்சிய உணர்வு இயக்கி நாம் இருக்கின்ற பக்கமே உராசுகின்ற மாதிரி ஆக்ஸிடென்ட் ஆகும்.

அதே போல ஒருவன் ரோட்டிலே அஞ்சி விழுந்தான்... அடிபடுகின்றான். தரையில் ஆக்ஸிடென்ட் ஆனது என்று அதைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிகளைப் பதிவாக்கி விட்டோம் என்றால் என்ன செய்யும்…?

நாம் ரோட்டில் நடந்து போகும் போது பஸ் ஹார்ன் அடித்தால்
1.நாம் இந்தப் பக்கம் விலகிப் போவதற்குப் பதில்
2.பஸ் வருகின்ற பக்கம் போய் அடிபடுவோம்.
3.ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் இப்படித்தான் இயங்குகின்றது.

சந்தர்ப்ப பேதங்கள் எது எதுவோ உருவாக்குவதனால் நம் நல்ல சிந்தனையைத் தடைப்படுத்தி இவ்வாறு ஆகின்றது. நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் மனிதனின் நல்ல உயர்ந்த உள்ளங்களை மாற்றி விடுகின்றது.

இதைப் போன்றவைகளை மாற்றியமைக்கக்கூடிய வழியாகத்தான் அக்காலங்களில் இராமயாணம் மகாபாரதம் சிவ புராணம் விநாயக புராணம் போன்ற  காவியங்களை நமக்கு ஞானிகள் கொடுத்தனர்.

அவைகளைச் சீராகப் படித்திருந்தால்... அதன் வழி நாம் நடந்திருந்தால்...! இத்தகைய நிலைகளைத் தவிர்த்து மெய்ப் பொருளை வளர்த்துப் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

ஏனென்றால் அது எல்லாம் இப்போது காலத்தால் போய்விட்டது. உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குருநாதர் காட்டிய அருள் வழியை உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

 வராகன் (பன்றி) சாக்கடையைப் பிளந்து நல்ல பொருளை நுகர்ந்து அது வளர்ந்து நாற்றமான அந்த உடலைப் பிளந்து மனிதனாகப் பிறக்கும் நிலைகள் பெற்றது. அதைப் போன்று
1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைப் பிளந்து
2.தீமைகளைப் பிளந்திடும் உணர்வைத் தனக்குள் எடுத்து
3.நம் அறிவைத் தெளிந்திடச் செய்யும் அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்க்கப்படும் போது
4.இந்தத் தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரம் பெறுவோம்.

பரிணாம வளர்ச்சியில் நாம் மனிதனாக வளர்ந்த முறை இதுதான். அதன் வழியில் நாம் எளிதில் விண் செல்ல முடியும்.

அதைப் பெறுவதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம். அந்த முறைப்படி நீங்கள் எல்லோரும் செய்யுங்கள்.

எப்போது தீமையைக் கண்டாலும் அந்தத் தீமை செய்வோரை
1.”தீமை... தீயவர்கள்...” என்ற வார்த்தை சொல்லாது
2.மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.
3.அவர்கள் அருள் ஞானம் பெற்றுத் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
4.(முதலில் தீமையைச் சொல்லி விடாதீர்கள்..! – இது மிகவும் முக்கியம்)
5.மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் (இந்த எண்ணம் தான் முதலில் வர வேண்டும்)
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் எதிர் காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று இதைச் சொல்லிப் பழக வேண்டும்.

இப்படிச் செய்யாமல் அவர் தீமையை நமக்குள் பதிவு செய்து கொண்டு அதையே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் அந்தத் தீமை நமக்குள் விளைந்து “இது தான் முன்னாடி வரும்....!” நல்ல உணர்வுகளில் தீமை தான் கலக்கும். நல்லதைப் பாதுகாக்க முடியாது.

அதனால் “தீமையை மறந்து...” அருள் ஒளியை எடுத்து அதனின் உணர்வைப் பாய்ச்சப் பழகிக் கொள்ள வேண்டும். சிறிது காலத்திற்குப் பழகிக் கொண்டால் மிகவும் நல்லதாகும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலமாக நான் (ஞானகுரு) கண்டறிந்ததில் கால்வாசியில் ஒரு பாகத்தைத்தான் உங்களுக்குத் துணுக்குத் துணுக்காகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இதெல்லாம் நீங்கள் பூரணமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி ஞானிகளின் உணர்வை இணைத்து இணைத்து அதை நீங்கள் பெறக்கூடிய தகுதியே ஏற்படுத்துகின்றோம்.

அடுத்து...
1.இனி வரும் காலத்தில் நாம் எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வை வளர்க்க வேண்டும்.
2.”எல்லோரையும் காக்க வேண்டும்...” என்ற எண்ணத்தில்
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.