இயற்கையில்
இந்த மண்ணிலே விளைந்த தாவர இனச் சத்துக்களைப் பிழிந்து அதை உட்கொண்டே பழகியவர்கள்
தான் நாம். நாம் அந்த விண்ணுலக ஆற்றலை நேரடியாக எடுத்து நமக்குள் அதை ஜீரணித்துச் சத்தாக
மாற்றும் பழக்கம் வர வேண்டும்.
1.மெய்
ஞானியின் அருள் உணர்வை எண்ணத்தாலே நாம் சுவாசித்து
2.அந்த
உணர்வின் ஆற்றலை நமக்குள் சேர்த்து அதைக் கொண்டு
3.விநாயகர்
சதுர்த்தி என்று முற்றுப் புள்ளி வைத்துவிட்டு
4.நாம்
விண் செல்வதே மனிதனின் கடைசி நிலை
மெய்
ஒளியின் தன்மையை அந்தப் புதுமையான வித்துக்களை நமக்குள் சேர்த்து விண்ணுலகம் சென்று
அடைவதே விநாயகர் சதுர்த்தி.
1.இந்த
மனித வாழ்க்கையில் பெற்ற இந்த நிலையை மாற்றி
2.விண்ணுலகின்
ஆற்றலைப் பெறும் தகுதிக்கே இந்த உபதேசம்.
மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி யாம் (ஞானகுரு) உபதேசமாகக் கொடுக்கும் உணர்வின்
வித்துக்கள் அனைத்தும் உங்கள் புலனறிவுக்குள் ஈர்க்கப்படும் பொழுது உங்கள் உமிழ் நீரெல்லாம்
சுவையாகச் சுரந்திருக்கும்.
1.அந்த
உமிழ் நீரே நீங்கள் விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதியாக
2.அமுதாக
உங்கள் உடலுக்குள் இணைகின்றது.
நீங்கள்
தினசரி அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தால் அந்த வித்தின் தன்மை வளர்ச்சி அடைந்து
மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாகின்றது.
அதன்
மூலம் உங்கள் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி குலதெய்வங்களான மூதாதையர்களின் உயிராத்மாக்களை
விண் செலுத்த இது உதவும்.
மூதாதையர்கள்
சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின் விண்ணின் ஆற்றலை நீங்கள் எளிதில் பெற்று
1.வாழ்க்கையில்
வரக்கூடிய எத்தகைய துன்பமாக இருந்தாலும்
2.அதை
நீக்க உங்களுக்கு ஆற்றல் கிடைக்கும்.