இன்று பத்திரிக்கைகளிலும் டி,வி.யிலும்
பார்க்கிறோம், அங்கே இவ்வளவு பணத்தைத் திருடிச் சென்றார்கள்… இங்கே இவ்வளவு நகைகளைத்
திருடினார்கள்…! என்றெல்லாம் படிக்கின்றோம்.
ஆசைப்பட்டு செல்வங்களைத் தேடி
வைத்திருந்தாலும் இரவிலே நான்கு பேர் உருட்டைக் கட்டையை வைத்து ஓங்கி அடித்துக் கொன்று
விட்டு இருக்கின்ற சொத்தை எல்லாம் எடுத்துச் செல்கிறார்கள். செல்வமே நமக்கு எதிரியாகி
விடுன்றது.
நகரங்களில் பெண்கள் அலங்காரமாக
நகைகளைப் போட்டு அழகுபடுத்திக் கொண்டு சென்றால் திருடனுக்கு வழி காட்டிச் சில அவல நிலைகளை
ஏற்படுத்தி அவன் வீடு தேடி வந்து கொள்ளையடிக்கும் நிலையை ஏற்படுத்தி விடுகின்றோம்.
அவன் பின் தொடர்ந்து வருகின்றான்.
பகலில் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றான். இல்லை என்றால் இரவு தேடி வந்து வீட்டைக் கொள்ளையடித்துச்
செல்லும் நிலைகள் உள்ளது.
இன்றைய நிலைகள் நாம் திருடனை
கடினமாக வரவழைக்கும் தன்மை வருகின்றது.
1.நமக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள்
தேவையா…?
2.நமக்கு அத்தகைய அலங்காரம் தேவையா…?
3.ஆக நம் மனதைத் தங்கமாக்க வேண்டுமே
தவிர
4.தங்கத்தைப் போட்டு உடலில் அழகைக்
காட்ட வேண்டியதில்லை.
அதாவது அருளுணர்வுகளை நம் ஆன்மாவாகப்
பெற்று மனத் தூய்மை தான் பெற வேண்டுமே தவிர “ஆபரணங்களால் அல்ல….!”
நம்மை அழகுபடுத்திக் கொள்வதில்
தவறில்லை. ஆனால் ஆபரணங்களால் நாம் அழகுபடுத்திக் கொள்ளும் போது அதுவே திருடனுக்கு வழிவகுக்கிறது.
நம்மிடம் நிறைய செல்வம் இருக்கிறது என்ற வழியை அவனுக்குப் போட்டுக் காட்டுகின்றோம்.
பணம் இருந்தாலும் பேங்கில் (BANK)
போட்டால் வட்டி வரும். அந்த வட்டியை வைத்து அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை
வாங்க முடிகின்றது.
ஆனால் அந்த நகை வந்தால் தேய்வு
தான் வரும். அது தேய்வாவது மட்டுமல்ல… நம் உடலிலும் பெரும் மாற்றங்கள் வரும்.
பேங்கில் பணத்தைப் போட்டாலும்
நம் செலவுக்காக அதை எடுத்து வரும் போது அதைத் தெரிந்து கொண்டு பின்னாடியே வந்து திருடும்
நோக்கத்தில் தட்டிப் பறிக்கும் நிலையும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
ஆக மொத்தம் இன்று செல்வத்தால்
“நம் உயிருக்கே ஆபத்து…!” என்ற நிலைகளில் வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து
நாம் மீளுவதற்கும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு சக்தி வேண்டுமல்லவா…!
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய
அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலு பெற்றால்
1.”நமது உணர்வுகள்…” - திருட
வரும் நோக்கத்தில் உள்ளவர்களை
2.நம் அருகிலே வராதபடி மாற்றியமைக்கும்
சக்தி பெறுகின்றது.
3.நம்மைப் பார்க்கும் போது அவன்
உணர்வுகள் மாறி
4.நம்மிடம் வராது தடுக்கவும்
முடிகின்றது.
இதைப் போன்ற உணர்வுகளை உறுதிப்படுத்த
வேண்டும் என்றால் நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த
உயிராத்மாக்களை அந்த சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அழியா ஒளிச் சரீரம் பெறச்
செய்ய வேண்டும்.
முன்னோர்களைச் சப்தரிஷி மண்டலத்தில்
இணையச் செய்த பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எளிதில் பெற முடிகின்றது.
நாம் நமது வாழ்க்கையில் அருள்
ஞானத்தைப் பெருக்கி விஞ்ஞான உலகில் நம்மை அறியாது வரும் இருளை அகற்றி இனிப் பிறவியில்லா
நிலை என்ற நிலையை அடைவோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளைப்
பெற்றுப் பேரொளியாக நாம் அனைவரும் மாறுவோம். நமக்கு அழியாச் சொத்து அது தான்.