ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2018

தீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் போட்டு” நாம் ஒளியாக மாற வேண்டும்


வைத்தியர்கள் தங்கத்தைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். இரும்பைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். செம்பைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள்.

பல சரக்கை அதனுடன் சேர்த்து அதனின் வீரிய உணர்வை மாற்றிவிட்டுப் பவுடராக்கி விடுகின்றார்கள். அதனின் சத்து கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிலிருக்கின்ற கடினமான நிலைகளைப் பஸ்பமாக்குகின்றார்கள்.

1.அதனுடைய சத்தை எடுத்துச் சாப்பிடச் சொல்லும் போது அது தண்ணீராகக் கரைந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய கெட்டதை இது பஸ்பம் செய்து
3.நல்ல இரத்தமாக மாற்றுகின்றது.
4.நம் உடலில் இருக்கக்கூடிய வியாதிகளைப் போக்குகின்றது.
5.வைத்திய முறையில் இவ்வாறு செய்கின்றோம்.

ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போல வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் தான். தன் வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கெட்டதையெல்லாம் பஸ்பம் செய்து விடுகின்றார்கள்.

தனக்குள் வந்த நோயை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை தனக்குள் வளர்த்து இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வை ஒளியாக மாற்றி
1.அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உடலுக்குள் வந்த அத்தனையுமே புடம் போட்டு
2.அது பூராத்தையும் மாற்றி உயிரோட சேர்த்து
3.உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டார்கள்
4.அப்படி ஆன அகஸ்தியர் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.

அதற்குப் பின்னாடி வந்தவர்கள் அவர் உடலில் விளைய வைத்த அந்தக் குணத்தை எடுத்து அவரின் மூச்சலைகளைச் சுவாசித்து தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டார்கள்.

தங்கள் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான நிலைகளுக்குள் எல்லாம் இதைக் கலந்து அதைப் புடம் போட்டுச் சங்கடத்தையும் சலிப்பையும் மாற்றி தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் தான் இன்று சப்தரிஷி மண்டலமாக இருக்கிறார்கள்.

ஏனென்றால் தன்னிச்சையாகவே “துன்பத்திலிருந்து மாற்றி… விண் செல்ல வேண்டும்…!” என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படிப் போனார்கள்.

அவர்கள் மனிதனாக இருக்கும் போது பேசிய உணர்வின் சத்துக்கள் அனைத்தும் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டடு நம் பூமியில் அலைகளாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அந்த மெய் ஞானிகள் எப்படித் தீமைகளைப் பஸ்பமாக்கி விட்டு மெய் ஒளியைத் தன் உயிரான்மாவில் புடம் போட்டு ஒளியாக மாற்றிக் கொண்டார்களோ அதைப் போல நாமும்
1.இந்த வாழ்க்கையில் நாம் சுவாசிக்க நேரும் எந்த உணர்வாக இருந்தாலும்
2.அது அனைத்திற்குள்ளும் மெய் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து அதைப் பஸ்பமாக்கி
3.நம் உயிராத்மாவைப் புடம் போட்டு “மெய் ஒளியாக நாம் மாற முடியும்….!”