ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2018

கௌரவர்கள் – “நம்முடைய கௌரவ குணத்தின்” இயக்க நிலைகள்

மகாபாரதத்தில் அர்ச்சுனனின் குரு எதிரிகளுக்குப் பக்கபலமாக இருக்கின்றார்.
1.குரு பீஷ்மர் சகல வித்தைகளையும் கற்றுணர்ந்தவர்.
2.பாண்டவர்கள் நற்குணங்கள் படைத்தவர்கள்.
3.கௌரவர்கள் “தான் பிழைக்கவேண்டும்” என்ற நிலை பெற்றவர்கள்.

“தான் பிழைக்க வேண்டும்…,” என்ற உணர்வு வரும் பொழுது அதன் வலிமையே அதிகமாகின்றது. அதனுடைய தாக்குதலே அதிகமாகின்றது.

தனது…, எனது…, என்ற நிலைகள் வரும் பொழுது இது கௌரவம். நமக்குள் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான உணர்வுகளிலும் அந்தக் “கௌரவப் பதிவு” உண்டு.

ஒன்றை எடுத்து கொண்டால் அது செயலாக்கப்பட வேண்டும் என்ற நிலை வருகின்றது.

கௌரவம் என்ற நிலை வரும் பொழுது மற்றவற்றைச் செயல்படுத்தாதபடித் தன் காரியத்தைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இதைத்தான் மஹாபாரதத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள். குரு பீஷ்மர், பல வித்தைகளைக் கற்றுக் கொண்ட நிலைகள் இருந்தாலும் கௌரவருடன் இணைந்து செயல்படுகின்றார்.

இவர் (பீஷ்மர்) கொடுத்த குருவின் வலுவை கௌரவர்களுக்குள் செயல்படுத்தும் பொழுது அவர்களுக்குக் கௌரவம் என்ற நிலைகள் கொண்டு “தன்னைக் காத்திடவேண்டும்…” என்ற நிலைகள் வருகின்றது.

கௌரவர்களுடைய நிலைகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றாலும் சூழ்ச்சியின் நிலைகள் கொண்டு தனது குடும்பத்திலும் சகோதரர்களைப் பாதிக்கும் நிலைகளுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றனர் அதை ரசிக்கின்றனர்.

குரு பீஷ்மர் அவர்களின் தாத்தா பாண்டவர்களுக்கும் குருவாக இருக்கின்றார். அர்ச்சுனன் தனது நிலைகளில் சகோதரர்கள் ஐந்து பேர். கௌரவர்கள் நூறு பேர் என்கின்றபோது வலு அதிகமாகின்றது.

1.தன் தாத்தாவின் வித்தைகளை இருவருமே பெற்றாலும்
2.கௌரவர்கள் தவறு செய்யும் உணர்வுடனேயே
3.தாத்தாவின் வித்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.

அதே சமயம் பாண்டவர்களுக்குத் தர்மத்தையும் தன் வழி கொண்டு தாத்தாவின் வித்தைகளையும் சீரான வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைகள்தான் வருகின்றது.

கடைசிப் போர்க்களத்தில் அர்ச்சுனன் தன் குருவை எண்ணித்தான் அதிகமான வித்தைகளைக் கற்றுக் கொள்கின்றான்.

1.”குரு…” என்ற நிலைகளை எண்ணி
2.தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை பெறும் பொழுதுதான்
3.”குரு பலத்தால்…” அவன் எண்ணும் வலிமையும்
4.அண்ட சராசரத்தின் உணர்வையும் அறியும் ஆற்றல் வருகின்றது.

மனித உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு கௌரவ குணமும் எப்படி இயங்குகின்றது? அதன்வழி நம் வாழ்க்கை எப்படி இயங்குகின்றது? என்று மகாபாரதப் போருக்குள் காட்டப்பட்டது.