ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2018

என்னுடைய முதல் பிரார்த்தனை

சிலவற்றை ஏன் முன்னால் சொல்லவில்லை? என்று கேட்க வேண்டாம். “கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித்தான்” கொண்டு வரவேண்டியிருக்கின்றது.

முன்பே சொல்லியிருந்தால் சிலருக்குத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கும், சிலருக்கு அந்த உணர்வுகள் ஏற்றுக்கொள்ளாது, அந்த உணர்வுகள் பக்குவப்படாது. அப்போது வெறுக்கும் தன்மை வரும்.

ஏனென்றால், இந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யும். இதைப்போன்ற நிலைகளில் இருந்து மீள்வதற்குத்தான் படிப்படியாக யாம் சொல்வது.

சிலருக்கு யாம் சொல்லிக்கொண்டு வரும்போது இரண்டாவது தரம் திரும்பச் சொன்னால்..,  சாமி  அன்றைக்குச் சொன்னதையே இன்றைக்கும் சொல்கிறார் என்று எண்ணி “டக்”  என்று சொல்லிக் கொண்டுவந்து
1.அடுத்தவர்களை இணைத்துக் கொண்டு வருவதற்கு முன்னால்,
2.அன்றைக்கும் சொன்னார் இன்றைக்கும் சொல்கிறார் சரி சொல்லட்டும்
3.சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கிச் சென்றால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில்
4.”உணர்வைக் கூர்மையாக எண்ணாதபடி” தலையைக் குனிந்து கொள்வார்.

இதைப்போன்ற நிலைகள் ஒன்றல்ல எத்தனையோ உண்டு. இந்த உணர்வின் தன்மையை நாம் மாற்றவேண்டும்.

ஒரு எண்ணத்தில் “எத்தனையோ கோடி” உண்டு.

ஆனால் அதை செருகேற்றுவதற்கும் மாற்றிய இந்த உணர்வின் தன்மையை மாற்றுவதற்கும் நமது குருநாதர் எமக்கு எப்படிப் பக்குவப்படுத்தினாரோ அதைப்போலத்தான் உங்களுக்கும் சாதாரணமாக உபயோகிக்கச் சொல்கிறேன். 

1.நீங்கள் எல்லோரும் அருளாற்றல்களைப் பெறவேண்டும்
2.உங்கள் நல் உணர்வுகள் இங்கே படரவேண்டும் என்றும்
3.நீங்கள் இடும் மூச்சலைகள் இந்த காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை முறியடிக்க வேண்டும் என்று
4.முதலில் பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் யாம் பேசுகின்றோம்.

நம் குருநாதர் காட்டிய வழி கொண்டு எந்தெந்த நட்சத்திரத்தின் தன்மையை, எந்தெந்தக் காலத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எமக்கு உணர்த்தி உள்ளார்கள்.

அதை எடுத்து உங்களிடம் பேசுகின்றபோது, இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது. இதுவே வலுவாகின்றது.

ஆகவே இதைப் போல செய்துவரப் போகும்போது அதை யாம் இப்போது சொல்லித் தெரிவதைக் காட்டிலும் உங்கள் உணர்வுகளே இதை ஒவ்வொரு காலத்திலும் இதை உணர்த்தும் நீங்கள் எதிர்கொண்டு எடுக்கும் உணர்வின் தன்மையை.

1.விஞ்ஞானி எவ்வாறு அணுவைப் பிளக்கின்றனோ அது போல
2.பல உணர்வின் தன்மை நினைவலைகள் வந்தால்
3.உங்கள் எண்ணங்கள் அதைப் பிளந்து,
4.உங்களுக்குள் அந்த உணர்வினை ஊட்டி,
5.நீங்கள் செல்லவேண்டிய பாதையையும்,
6.செயல்படுத்தும் நிலையையும் அதுவே உணர்த்தும்.

அந்த நிலைகள் பெற்றால்தான் இங்கே செயல்படுத்த முடியும்.