ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2018

பாம்பு சட்டையை உறிக்கின்ற மாதிரி மனித உடலை மாற்றிக் கொள்ள வேண்டும்...!


நம் வாழ்க்கையில் அடிக்கடி என்ன நினைக்கின்றோம்…? அவன் அப்படிப் பேசுகிறான். அவர்களுக்கு நான் அதைச் செய்தேன்… அடுத்து இதைச் செய்ய வேண்டும். நம் வியாபாரத்தை இப்படிச் செய்ய வேண்டும் என்று பல நிலைகளை நாம் எண்ணுகின்றோம்.

அது தடைபட்டது என்றால் நாம் என்ன செய்கின்றோம்…? உடனே வேதனையைத் தான் எடுக்கின்றோம்.
1.நாம் நல்லதை நினைக்கின்றோம். அது நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.
2.நம் பையனுக்கு நல்லது செய்கிறோம். அவன் நம் சொன்னபடி வரவில்லை என்றால் அதற்காக வேண்டி வேதனைப்படுகின்றோம்.
3.ஒருவருக்குக் கடன் கொடுக்கின்றோம். பணம் திரும்ப வரவில்லை என்றால் நாம் வேதனைப்படுகின்றோம்.

அப்போது எந்த ஆசை வருகின்றது…? இந்த உடலின் இச்சை தான் வருகின்றது…! ஞானிகள் காட்டிய வழியில் நாம் எதை ஆசைப்பட வேண்டும்…?

என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிர் மீது ஆசைப்பட வேண்டும்.

நீ உயிராக இருக்கின்றாய்.. ஒளியாக இருக்கின்றாய்…! இருளை அகற்றுகின்றாய்… பொருளைக் காட்டுகின்றாய். நீ ஒளியாக இருந்து எப்படி இயக்குகின்றாயோ அதைப் போல
1.என் உணர்வெல்லாம் அந்த ஒளியாக இருக்க வேண்டும்.
2.இருளை அகற்றும் அந்த அருள் சக்தியாக இருக்க வேண்டும்.
3.உன்னைப் போல் என்றுமே ஒளியாக இருக்கும் “அந்த ஆசை தான்” எனக்குள் வர வேண்டும்.

நீ உயிராக ஒளியாக இருக்கின்றாய். உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி அந்த ஒளியின் சரீரம் தான் நான் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும். மனிதனுடைய கடைசி நிலை இது தான்.

உதாரணமாக ஒரு தட்டான் பூச்சி அது என்ன செய்கின்றது…? ஒரு பூவில் அமர்ந்து முட்டை இட்டு விடுகின்றது. அந்தப் பூவின் உணர்வைக் கவர்ந்து அந்த முட்டையிலிருந்து பட்டாம் பூச்சியாக மாறி வெளி வருகின்றது.

எந்தப் பூவில் முட்டையிட்டதோ அதே நிறம் கொண்ட பட்டாம் பூச்சியாகத் தான் மாறுகின்றது. பட்டாம் பூச்சியாக மாறியவுடனே அதிலிருக்கும் தேனைச் சாப்பிட்டு விட்டு வேறொரு இலை மேலே உட்காருகின்றது.

அந்த இலை மீது அமர்ந்தவுடனே வெயில் அதிகமாக அடிக்கும் பொழுது அந்த இலையின் உணர்வுகள் ஆழமாகப் பதிவாகின்றது. அதை அதிகமாகச் சுவாசிக்க நேருகின்றது.

அந்த இலையின் உணர்வுகளைச் சுவாசித்தவுடனே அதே உணர்வு ஆகி அந்த இலையிலேயே ஒட்டிக் கொள்கின்றது. பார்க்கலாம் நீங்கள்.

அந்த இலையிலேயே ஒட்டிக் கொண்ட பிற்பாடு உணர்வின் துடிப்பு கொண்டு அந்த இலையின் உணர்வுகள் எல்லாம் சேர்ந்த பிற்பாடு பட்டாம் பூச்சியே ஒரு வண்டாக உருவாகின்றது. அதாவது
1.அந்த உடலே பாம்பு தன் சட்டையை உறித்த மாதிரி
2.அந்த உடலுக்குள் இருந்தே கருவாகின்றது.
3.அப்போது வேறொரு பூச்சியாக மாறுகின்றது.

பூச்சிகளின் நிலைகளில் இப்படித்தான் மாறி மாறி வரும். பின் ஒன்று இந்தப் பூச்சியை ஒரு குருவி கொத்தித் தின்றது என்றால் பூச்சி குருவியின் உடலாக ரூபம் மாறுகின்றது.

நாம் ஒரு ஆட்டை ருசித்துச் சாப்பிடுகின்றோம் என்றால் ஆட்டின் உணர்வு நமக்குள் வருகின்றது. ஆட்டின் மணமே நமக்குள் வரும். அப்புறம் இந்த உடலை விட்டுப் போனவுடனே ஆட்டிடம் தான் போய் ஆடாகப் பிறப்போம்.

நாம் எதை எதைச் சாப்பிடுகின்றமோ அதற்குத் தகுந்த மாதிரி அது வேலை செய்து கொண்டே இருக்கும். நாம் எதை எதையோ நினைக்கிறோம்… ஆனால் அந்த உயிருடைய வேலை அது தான். வேறு எதுவும் இல்லை.
1.நாம் சேர்க்கின்ற உணர்வை எல்லாம் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
2.ஆகையினால் நாம் எதை மாற்ற வேண்டும்…? எதுவாக ஆக வேண்டும்..,?
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து
4.இந்த உடலிலிருந்து ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.
5.(மனித உடலைச் சட்டையைக் கழற்றுவது போல் உறித்து ஒளி உடலாகப் பெற முடியும்)
6.பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஒளியைப் பெறவேண்டும்.

ஆக அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்றால் பொறுமை தேவை.

குடும்பத்திலேயோ வாழ்க்கையிலேயோ அந்த வெறுப்பினுடைய நிலைகள் வந்தால் நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு மனதை உறுதிப்படுத்தி நல்லதை நமக்குள் சேமிக்கும் நிலையும் நல்லதை நமக்குள் உருவாக்கும் நிலையும் நமக்குள் கொண்டு வர வேண்டும்.

என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா என்று சொல்லி எப்பொழுதுமே அந்த உயிரின் நிலைகளை எண்ணி…..
1.நீ எப்படி இருக்கின்றாயோ… அதைப்போல
2.என் உணர்வெல்லாம் ஒளியாக மாற வேண்டும்…! என்று வேண்டிடல் வேண்டும்.