ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2026

உங்கள் வீட்டை மகாலட்சுமி குடிபுகும் வீடாக மாற்றுங்கள்

உங்கள் வீட்டை மகாலட்சுமி குடிபுகும் வீடாக மாற்றுங்கள்


எத்தனையோ பேர் நம் குருநாதருடன் பழகினார்கள். அவர் ரசமணி செய்து கொடுத்தால் சக்தி கிடைக்கும்…. அவரிடம் சித்துகள் பெற்றால் நானும் சக்தி பெறுவேன் என்று அந்த ஆசையில்தான் வந்தார்கள்.
 
அவர் யாரிடமெல்லாம் பழகினாரோ அவர்களெல்லாம் சாமி எங்கள் வீட்டில் தான் படுத்திருந்தார்நான் சோறு போட்டேன்…! என்று சொல்லுவார்கள்.
 
அதே சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தால் மலம் இருந்து வைத்து விடுவார்துணியைக் கிழித்து வைத்து விடுவார்…! என்று சொல்கிறவர்களும் உண்டு.
 
எங்கள் வீட்டிற்கு வந்தாலும் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரில் தவிடை எடுத்துப் போட்டுஅனைத்தும் அசிங்கமாயிடுச்சு…” என்று சொல்லி அனைத்தையும் கொட்டிவிடச் சொல்வார்.
 
குடத்தில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் ஊற்றிவிட்டு வீடு அசிங்கமாக இருக்குஅதைக் கழுவுகின்றேன்…” என்று சொல்வார். வீட்டிற்குள் சின்ன ரூமில் சிறுநீர் கழித்துவிட்டு எவனோ அசிங்கம் பண்ணி வைத்திருக்கான்அதைக் கழுவ வேண்டும்…! என்பார்.
 
சாமி அம்மாவோட அம்மா… அதாவது எனது மாமியார்பைத்தியத்தை வீட்டுக்குள் விட்டு இந்த மாதிரிச் செய்கின்றான்…” என்று சொல்லி என்னைத் திட்டும்.
 
ஒரு நாள் இங்கே வந்துஇந்தச் சொத்து போய்விடும்இந்த வீடு போய்விடும்எல்லாமே போய்விடும்…” என்று குருநாதர் சொல்கிறார்.
 
ப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அந்த அம்மா அருளாட ஆரம்பித்து விட்டது. உடம்பெல்லாம் எரிகிறது… தண்ணீர் ஊற்று…! என்று சொல்கிறது.
 
குருநாதர்எனக்குத் தெரியாமல் எப்படி இந்தச் சாமி வருகிறது…? என்று சொல்கிறார். எரியுதா…? உனக்கு இன்னும் எரியும் பார்…! என்கின்றார். அக்கினியாகின்றது…!
 
அந்தக் கிழவனை போகச் சொல்…! என்கிறது அந்த அம்மா.
 
குருநாதர் என்னிடம்… தண்ணீரை எடுத்து அடி…! என்றார். அடித்தவுடன் கீழே விழுந்துவிட்டது. அது உடலில் இருந்த பேய் போய்விட்டது .
 
1.கழுவிவிட வேண்டும் என்று குருநாதர் சொன்ன நிலைகள்இந்த வீட்டில் அந்த அம்மா பாதங்களால் பதிவானது.
2.சாமி அம்மாவோட சின்னம்மா அது சாபமிட்ட அலைகள் இங்கு இருக்கின்றது…!
3.அதனால்தான் தண்ணீரை ஊற்றிக் கழுவச் சொன்னேன் என்றார் குருதேவர். துணியைப் போட்டுத் தேய்க்கின்றார்,
 
எல்லாம் போய்விட்டது என்றேன்.
 
உன் கண்களுக்குத் தெரியவில்லை நீ முட்டாள்டா…! என்கிறார். உற்றுப் பார்…! என்றார்.
1.பார்க்கும் பொழுது அந்தம்மா திட்டியது பேசியது எல்லாம்
2.டேப் ரிக்கார்டரில் பதிவான மாதிரிச் சுழன்று கொண்டு இருக்கின்றது.
 
இதுவெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள். 
 
வீட்டில் வாழ்ந்தவர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று நாம் நினைக்கிறோம்.
1.அவர்கள் உடலில் எந்தெந்த எண்ணங்களை வேகமாக எண்ணினார்களோ
2.பூமியில் இருக்கின்ற காந்தம் அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது.
 
சில பேர் நல்லவர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுகாரர் நம் வீட்டிற்குள் வந்து… குடும்பக் கஷ்டங்களைப் பேசினால் நிம்மதியாக இருக்கின்றது என்று சொல்லிப் பேசிக் கொண்டிருப்பார்.
 
அவர் எந்த இடத்தில் உட்கார்ந்து பேசினாரோ அந்த இடத்தில் பதிவாகி விடும். அந்த அலைகள் எல்லாம் சேர்ந்துவிடும். 
1.நிம்மதியாக இருந்த வீட்டிற்குள் அடுத்தாற்போல் சண்டையும் சச்சரவுமாக வந்து விடும். 
2.நாங்கள் என்ன பாவம் செய்தோமோ…? என்பார்கள்.
 
காரணம்இரண்டு பேரும் கலந்து உறவாடிய உணர்வுகள் சுவரிலும் பதிவாகி விடுகின்றது. சங்கடமாக இருந்தால் வேறு எங்கும் போக மாட்டார்கள்  சங்கடமாக எங்கு பேசினார்களோ அங்கு போய்த் தான் உட்காருவார்கள்.
 
சாதரணமாக சுற்றுலா மையங்களில் பார்த்தால் சில பேர் ஒதுங்கித் தனியாகப் போவார்கள். உட்காருவதற்கே இடமிருக்காத இடங்களில் ஒற்றைக் காலில் நிற்பார்கள். ஊரில் இருக்கின்ற குறைகளெல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்கள். இவை அனைத்தும் அந்த இடங்களில் பதிவாகும்.
 
குறைகளைப் பேசப் பேச அவர்கள் தொழில் நலிந்துவிடும். உலகத்தில் எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள்
ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள்நம் தொழில் மட்டும் நலிந்து கொண்டே இருக்கின்றது…! என்று சொல்வார்கள்.
 
நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலை நிமித்தமாக வெளியில் செல்லும் பொழுது பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டு அந்த உணர்வாலே நல்லவரின் எண்ணங்களையும் மாற்றி அது நம் குடும்பத்திற்குள் ஊடுருவி நமக்குள் பாய்ச்சும் பொழுது தீய வினைகளை உண்டாக்கி விடுகின்றது.
 
இதைப் போன்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றியபின் இந்த உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது சுவர்களிலும் பதிவு செய்து கொள்ளும்.
 
அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பூமியிலேயும் பதிந்து விடுகின்றது. அப்படிப் பதிந்தபின்
1.நம் உடலிலிருந்து வரும் இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு
2.அந்தக் கடுகடுப்பும் வெறுப்பான எண்ணங்களையும் ஒருவருக்கொருவர் தோற்றுவித்து விடுகிறோம்.
3.அதனாலே நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைப்பட்டு வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் குடிகொண்டு இருப்போம்.
 
ஆகவே… நாம் எதற்குள்ளே இருக்கின்றோம்…? இந்த விஷத்தின் அறைக்குள்ளே நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வை நாம் சுவாசித்து நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். 
 
நம் உடலுக்குள்ளும் சேருகின்றது… நம் உடலுக்குள்ளும் இயக்கி விடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமென்றால்
1.வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுத் தியானமிருந்து
2.உங்களின் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்யுங்கள்.
3.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை வீட்டிற்குள் பாய்ச்சிச் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபடுங்கள்.