ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2026

ஐக்கிய மனோபாவத்தை உருவாக்கத் தான் கூட்டுக் குடும்ப தியானம்

ஐக்கிய மனோபாவத்தை உருவாக்கத் தான் கூட்டுக் குடும்ப தியானம்


பெண்கள் நீங்கள் சமையல் செய்யும் பொழுதெல்லாம் உங்களுக்குச் சந்தர்ப்பம் உண்டு. நீங்கள் ஆத்ம சுத்தி செய்து
1.நான் செய்யும் சமயல் அனைத்தும் அதை உணவாக உட்கொள்வோர் அனைவருமே
2.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அவர்கள் புனித நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் உணவு பரிமாறுங்கள்.
 
பெண்களுக்கு இந்த நினைவலைகள் ஈர்ப்பலைகள் அதிகமாக உண்டு.
 
ஆகவே தாய்மார்கள் ஒவ்வொருவரும் இதை நினைவில் கொண்டு உங்களையறியாமல் துக்கப்படச் செய்யும் உணர்ச்சி வசப்படச் செய்யும் சங்கடப்படச் செய்யும் இந்த உணர்வுகளை மாய்க்க ஒரே வழி இதுதான்.
 
நீங்கள் சமையல் செய்யும் சமையல் அறையில் ஆத்ம சுத்தி செய்யுங்கள். உங்களுக்குத் துன்பமூட்டும் நிலைகள் இருந்தாலும் உங்கள் குடுமபத்திற்குள் துன்பமூட்டும் நிலைகள் இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் நினைவில் வைக்காதபடி, ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஆத்ம சுத்தி செய்துவிட்டு சமையலைச் செய்யுங்கள். ஆகாரம் சாப்பிடும் பொழுதெல்லாம் இதை நினைவில் கொள்ளுங்கள்.
 
உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து
1.நம் வீட்டில் மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.நம் வீட்டில் இருப்போர் அனைவரும் மகரிஷியின் அருளாலே சொல்லாலும் செயலாலும் இனிமை பெறும் ஆற்றல் பெற வேண்டும் என்று
4.வீட்டிலிருந்து ஏங்கி எடுத்தாலே புவியின் ஈர்ப்பிற்குள் வீட்டிற்குள் உங்கள் மூச்சலைகள் படருகின்றதுசுவர்களிலே படர்கின்றது.
 
அங்கு எவ்வளவு பெரிய நிலைகள் இருந்தாலும் உங்கள் சொல்லாலே குடும்பத்தில் புனித நிலைகள பெறச் செய்ய உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு.
 
இந்த முறையில் செய்தீர்களென்றால் ஆச்சரியமான நிலைகளில் உங்கள் வீட்டிலே மகிழ்ச்சியின் நிலைகள் தோற்றுவிப்பதை நீங்கள் பார்க்கலாம்.
 
1.நீங்கள் இட்ட மூச்சலைகள் உங்களுக்குள் நல்ல நறுமணங்களாக வளர்ந்து எப்பொழுதும் மகிழ்ச்சியூட்டும் நிலைகளைப் பார்க்கலாம்.
2.உங்கள் வீட்டில் நல்ல நறுமணங்கள் அடிக்கடி சுழன்று வருவதை நீங்கள் பார்க்கலாம்.
 
யாம் தியானத்தைச் சொல்கிறோம் நீங்கள் கேட்கின்றீர்கள். இதைப் போல நீங்களும் ஒவ்வொருவராகச் சொல்லும் பொழுது கேட்பவர்களுக்கும் இது பதிவாகின்றது. அவர்களுடைய உணர்வுகள் அங்கே பதிவாகி எண்ணத் தொடருடன் நல்லதாகின்றது.
 
இதைப் போன்று ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சரிதியான வழி அன்பர்கள் கூட்டுத் தியானமிருக்கும் பொழுதும் சரி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்குச் சொல்லிப் பழக வேண்டும்.
 
1.வீட்டிலிருக்கும் நம் குழந்தைகளையும் தியானத்தை அவர்களைச் சொல்லச் சொல்லிப் பழக்க வேண்டும்
2.அத்தகைய பக்குவத்திற்கு வரவேண்டும். தியானத்தை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
3.அப்படிச் சொல்லும்போது, கேட்போருடைய செவிகளிலும் அது பதிவாகின்றது.
3.இவருடைய (ஒவ்வொருவருடைய) நல்ல எண்ணம் மற்றவருக்குள் உருவாகும்போது அந்த நல்ல எண்ணம் இவர் மேல் அன்பைப் பாய்ச்சுகின்றது.
 
இப்படி நாம் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருக்கப்படும் பொழுது, ஒவ்வொரு மெம்பர்களும் இன்று ஒருவர் சொன்னாலும், நாளை ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும். நான்கு பேர் தான் என்று இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரும் செய்து பழக வேண்டும்.
 
இதைப் போன்று ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்யும் பொழுதும் ஒருவரே செய்ய வேண்டுமென்பது அல்ல. ஒவ்வொருத்தரும் அதைச் செய்து பழக வேண்டும்.
 
1.இப்படி ஒருவருக்கொருவர் அந்தக் கலப்பு உணர்வினுடைய நிலைகளில் ஒன்று சேர்ந்தோமென்றால்
2.அந்தப் பிரியத்துடன் நாம் சொல்லப்படும் பொழுது அந்தப் பாசம் இங்கே வளர்கின்றது.
3.ஏனென்றால் இந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்வதற்கும் அந்த ஐக்கிய மனோபாவத்தின் நிலைகளும்
4.இந்தப் பற்றுதலுடன் ஒன்று சேர்வதற்கு இதைப் போல் நாம் முறைப்படி செய்ய வேண்டும்… அனவருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.