ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2026

நாம் விண்ணிலே செலுத்திய உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணந்ததை எப்படி உறுதிப்படுத்துவது…?

நாம் விண்ணிலே செலுத்திய உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணந்ததை எப்படி உறுதிப்படுத்துவது…?


துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.லு ஏற்றிக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண்ணிலே உந்திச் செலுத்த வேண்டும். அவருடைய உணர்வு தான் நம் உடல்.
 
அங்கே சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின் நஞ்சைக் கரைத்த உணர்வுகளில் இந்த ஆன்மாக்கள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
1.உயிரும் உணர்வும் நாம் எடுத்துப் பாய்ச்சிய ணர்வின் தன்மை கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
 
இருந்தாலும்… இதற்கு முன் நாம் செய்யத் தவறி விட்டோம். இன்னொரு உடலுக்குள் அவர்கள் புகுந்திருக்கலாம்.
 
காலை துருவ தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். உடலை விட்டுப் பிரிந்து சென்ற குங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணை வேண்டும் என்று இந்த உணர்வுகளைக் கூட்ட கூட்ட
1.அவர்கள் எந்த உடலில் இருந்தாலும் நாம் செலுத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் சேர்க்கப்பட்டு
2.துரித நிலைகள் கொண்டு அவர்களுக்கு நலம் பெறும்.
 
ஏனென்றால்… இவர் உடலை விட்டுப் பிரியும் போது எந்த நோயின் தன்மை பெற்றாரோ இந்த உணர்வின் இயக்கமாகத் தான் புகுந்த உடலிலே செயல்படுத்தும்.
 
சார்புடையவர்கள் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அவர் உணர்வு இங்கே இருப்பதால் வேறு உடலில் இருந்தாலும் இந்த உணர்வுகள் கலக்கப்பட்டுக் கொண்டே வரும்.
 
நாளடைவில் வெளிவந்த பின் துருவ தியானத்தில் நாம் எண்ணி உந்திச் செலுத்தப்படும் பொழுது ளிதில் அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்…”
 
இதிலே அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்தியது… அதற்குண்டான உணர்வுகள் வரும்.
1.அங்கே சொர்க்கம் அடைந்த உணர்வினை உங்களுக்குத் தெளிவாக உணர்த்துவார்கள்.
2.”நான் சொர்க்கத்தில் இருக்கின்றேன்…” என்ற உணர்வினை கனாக்களில் வந்து சொல்வார்கள் சிலருக்கு அது தெரியும்.
 
சொர்க்கம் அடையவில்லை என்றால் உடலை விட்டு வந்தபின் என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்று உங்களுக்குள் அந்த உணர்வினை ஊட்டி நினைவுபடுத்தும்.
 
ஏனென்றால் உடலின் உணர்வுக்குள் ஆசை என்ற உணர்வின் உணர்ச்சியால் நமக்குள் அறியச் செய்யும் உணர்வின் தன்மையும் உண்டு.
 
அதே போல்… உங்கள் முன்னோர்கள் யாராவது சப்தரிஷி மண்டலம் சென்று விட்டால் அவர் உணர்வு உங்களுக்குள் இருந்தால்
1.இன்னொரு உடலை விட்டு ஆன்மா வெளி வந்தபின்
2.என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்ற உணர்ச்சி உங்களுக்குள் இயக்கப்பட்டு
3.நினைவு கூர்ந்து அவர்களையும் விண்ணுக்குச் செலுத்த முடியும்
 
ஆனால் இதற்கு முன்னாடி நாம் அவர்களை எல்லாம் பேயாகத்தான் மாற்றி வைத்திருக்கின்றோமே தவிர நல்ல வழியில் செயல்படுத்தவில்லை.
 
இப்போது நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மறைந்த நிலைகளைக் காட்டி… விண் செலுத்தும் மார்க்கத்தினைத் தான் உங்களைச் செயல்படுத்தச் சொல்கிறோம்.