
“விதி…” உண்டு…! என்றால் அது எப்படி…?
தாய் கருவிலே சிசு வளரப்படும்போது தாய்
எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வினைப் பதிவாக்குகின்றதோ அதுவே அந்தக்
குழந்தைக்குப் பூர்வ புண்ணியம் ஆகிறது.
1.அந்த உணர்வே விதியாகி வளர்ச்சியாகிக்
கொண்டிருக்கும்.
2.அந்தத் தருணம் வரப்படும் பொழுது அதன் பயனாக
இயக்கிவிடும்.
உதாரணமாக… ஒரு தாய் நோயாளியை உற்றுப் பார்க்கிறது… அந்த உணர்வுகள் பதிவானது. நோயாளியின் உணர்வுகள் தாய்
இரத்தத்தின் மூலமாகக் கருவிலே வளர்ச்சியடைந்து குழந்தையாகப் பிறக்கப்படும் பொழுது அந்த விதிப்படி அவனுக்கு நோய் வந்தே தான் தீரும்.
அதை மாற்ற ஜோதிடம் பார்த்தேன் அதைச்
செய்தேன் மருத்துவரிடம் சென்றேன் என்றாலும் விதிப்படி நடக்கத் தான் செய்யும்.
மருத்துவர் கொடுக்கக்கூடிய மருந்துகள் ஒட்டாது. அந்தத் தருணம் வந்தபின்
அந்த மருத்துவர் கொடுத்த மருந்தில் உள்ள நஞ்சைத் தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும்
பெருகி அவனை வீழ்த்திய தீரும்.
1.சிறிது நாளைக்கு வலியிலிருந்து
வேண்டுமென்றால் தப்பலாம்.
2.அந்த விஷத்தைத் தனக்குள் எடுத்து… மற்ற உறுப்புகளை வீழ்த்தி விதிப்படி அவன் மடிந்தே தீருவான் – விதி…!
விதி என்ற ரூபம் இப்படித்தான் வருகிறது.
பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது…! தாய் கருவிலே
வளர்க்கப்படும் பொழுது அது எதை எதையெல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ “இந்த விதியின் பலனே நடக்கும்…”
தாய் கருவுற்றிருக்கும் போது ஒரு தத்துவத்தைப் பேசி
உயர்ந்த ஞானத்தைப் பேசி அதன் வழி “இந்த மகான் உயர்ந்தார்…” என்ற ஏக்கத்துடன் ஏங்கி இருக்கலாம்.
சந்தர்ப்பத்தில்… குடும்பத்திலே சிக்கல்கள்
அதிகமாகும் பொழுது
1.தாய் மகான்களை எண்ணி அந்த மகானின் உணர்வு
தன் குடும்பத்தில் படர வேண்டும் என்று
2.அந்த எண்ணத்தைத் தாய் ஓங்கிச் செயல்படுத்தி
இருந்தால் அந்த உணர்வுடன் இருக்கும் நிலையில்
3.யாரோ ஒரு சாது அன்று அந்த வீட்டிற்கு
வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெற வேண்டும் என்று எண்ணும் நிலையில்
4.அவருக்குச் சக்தி இருக்கின்றதோ இல்லையோ…
5.அவரை மகானாக எண்ணி அந்த உணர்வைப் பெற
வேண்டும் என்று எண்ணும் பொழுது “அந்த உயர்ந்த உணர்வு…” பதிவாகி விடுகிறது.
யாசகத்திற்கு இந்த தாய் அவருக்கு உணவு
கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். “நீ நன்றாக இரம்மா…
உன் குடும்பம் நன்றாக இருக்கும்…” என்று அவர் சொல்லி அதை
இவர் பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வின் தன்மை கருவில் இருக்கக்கூடிய
குழந்தைக்கு “அது விதியாகின்றது…”
2.அந்த விதிப்படி அதனின் வளர்ச்சிகள் அவன்
வளர வளர எதிர்பார்க்காதபடி குடும்பத்தில் காரியங்கள் சித்தியாகும்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும்
ஒருவன் செல்வங்களைத் தொலைத்துக் கொண்டிருப்பான். ஒருவன் வளர்த்துக் கொண்டிருப்பான்.
குடும்பம் தரித்திரமான நிலையில் இருக்கும். தாய் கருவுற்றிருக்கும் போது
நோயாளியைப் பரிவுடன் பார்த்து.. அவர் உணர்வை எடுத்துக் கொண்ட
பின் குழந்தை பிறந்த பின் நலிந்து கொண்டேயிருப்பான்.
அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டு
கொண்டிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும்
மாற்றிக் கொண்டேயிருக்கும்.
ஆனால்…
1.மகானின் உணர்வு பதிவாகி வளர்ச்சி பெற்ற குழந்தை தீமைகளை வென்றிடும் சக்தியாக அவன் வருவான்
2.இது எல்லாம் விதிப்படி நடப்பது என்று சொல்வது.
அதனால் தான் மதி கொண்டு விதியை மாற்ற
வேண்டும்.
உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒரு தீமையைப் பார்க்கின்றோம் அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக உருவாகிறது. அந்த வித்து முளைக்காதபடி
தடுப்பது மதி.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மதி கொண்டு அதைத் தன் உடலுக்குள்
செலுத்தப்படும் பொழுது
2.அந்தத் தீமையின்
உணர்வு தனக்குள் வளராதபடி “முளையிலேயே கிள்ளி எறிந்து
விடுகின்றது…”
புளியங்கொட்டையை நாம் தூக்கிப் போட்டாலும் அது குப்பையில் தான் விளையும். பின்… அது வளர்ச்சி அடைந்து வீட்டின் அருகில் வந்து
விட்டால் விழுதுகளைப் பரப்பிப் அது
பெரும் விருட்சமாக மாறுகின்றது.
வளர்ந்த பின் அதை அப்புறப்படுத்த
வேண்டும் என்றால்…
வெட்டுவதற்கு நிறைய பந்தோபஸ்து செய்ய வேண்டும் பெரிய கோடாலி எல்லாம்
வேண்டும்.
வெட்டும் பொழுது தெரியாமல் வீட்டிலே சாய்ந்து
விட்டால் கட்டிடத்தை நொறுக்கிவிடும். ஆகவே அதைச் சிறுகச் சிறுக வெட்ட வேண்டும். அதாவது… நாம் மதி கொண்டு வீடு இடியாமல் நாம்
வெட்ட வேண்டும்.
மதி கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் சிறுகச்
சிறுகப் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.
1.அதை நீங்கள் எந்த நேரமும் எண்ணி எடுத்து
2.அவ்வப்போது தீமைகள் உங்களுக்குள் புகாது… அது உடலில்
விதியாக வளர்ந்திடாது மாற்றிட முடியும்.
விதியை மதியால் மாற்ற முடியும்…!