
“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி... “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”
வேதனயான உணர்வை நாம்
நுகர்ந்தால் அது நமது இரத்த நாளங்களில் கலந்து
விடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்களில் விஷத்தின் தன்மை கலந்தபின் உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.
1.அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது
உடலில் வலி வருகின்றது.
2.வலி வந்தால் உடல் நலிகின்றது… எண்ணம் குறைகின்றது.
நம் ஊர்களில் திரும்பும் பக்கமெல்லாம்
மாரியம்மன் கோவில் இருக்கும். ஏன்…?
மனித வாழ்க்கையில் அடிக்கடி சலிப்பு வருகிறது சங்கடம் வருகிறது. ஒருவர் தவறு செய்கின்றார் என்றால்
1.அந்தத் தவறான நிலைகளை உற்றுப்
பார்க்கும் பொழுது
2.அந்த உணர்வு தனக்குள் மாறித் (மாரி) தன்னை அறியாமல்
ஆட்டிப் படைக்கின்றது.
நிவர்த்திப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…?
மாரியம்மன் கோவிலில் நெருப்புச்சட்டி வைத்திருப்பார்கள். நெருப்பு என்ன செய்யும்…? சுட்டுப் பொசுக்கும்.
அதாவது நாம் நுகர்ந்த தீமைகள் அனைத்தையும் அதில் போட்டுச் சுட்டுப் பொசுக்க வேண்டும்
என்று காட்டுகிறார்கள்.
1.நாம் எடுத்துக் கொண்டது விஷம்… நமக்குள் வந்தால் பதறச் செய்கிறது.
2.மாரியம்மனின் கோவிலில் அக்கினிச் சட்டியைக்
கண்டு தீயதைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.
அந்த மாரியைத் தடுப்பதற்கு என்ன செய்கிறோம்…? நெருப்பு…!
1.யாராவது அதைக் காட்டியிருக்கிறார்களா…? யாராவது சொல்லி இருக்கிறார்களா…? இல்லை.
2.அந்த நெருப்பு யார்…? அந்த
மகரிஷிகள்.
3.மனித வாழ்க்கையில் வந்த இடைஞ்சல்களை எல்லாம் நீக்கிப் பழகியவர்கள்.
‘’ஓம் ஈஸ்வரா…’
என்ற’ இந்த நெருப்பைக் கூட்டி ‘’மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு…’ மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள்
ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.
அவ்வாறு ஏங்கிவிட்டு நமக்குத் தீங்கு செய்தவர்கள் நாளை அறியாமையிலிருந்து விடுபடவேண்டும். நல்லதைச்
செய்யும் எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் சுவாசிக்க வேண்டும்.
அதற்குத் தான் மாரியம்மன் கோவிலில் மத்தியில்
அக்கினிச் சட்டி வைத்திருப்பார்கள்.
கோவில்களெல்லாம் தப்பல்ல…! நாம் வழிபடும் முறைதான்
தப்பாக இருக்கும்.
ஆகவே நாம் தியானிக்க வேண்டும்… எதை…?
இந்தத் தெய்வம் நல்லது செய்திருக்கிறது.
1.இந்தத் தெய்வ குணத்தை
நாங்கள் பெற வேண்டும்
2.நாங்கள் செய்வதனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்,
3.எங்கள் பேச்செல்லாம் பிறருக்கு நல்லதாக இருக்கவேண்டும்.
4.இந்தத் தெய்வ குணத்தின்
சக்தி எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
5.இதை உணர்த்திய மெய் ஞானிகளின் அருள் ஒளி
வளர வேண்டும்.
6.அந்த அருள் ஒளியால் எல்லாம் நல்லதாக இருக்க
வேண்டும் என்று தியானித்துப் பாருங்கள்.
இது தான் உண்மையான அர்ச்சனை…! இதைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.
1.“அத்வைதம்…!”
சூட்சுமமாக இருப்பதை உனக்குள் எடுத்து உன் சுவாசமாக்கு.
2.அந்த உயர்ந்த சக்தியை
உனக்குள் கூட்டு என்று அன்றைக்கு ஆதிங்கரர் சொன்னார்.
அவர் காட்டிய அருள் வழியில் காற்றில் மறைந்துள்ள அருள்
ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அனைவரும் மகிழ்ந்து வாழ்வோம். பிறவியில்லா நிலையெனும் அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறுவோம்.