
கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!
குருநாதர் ஒரு சமயம் ஒரு வேடிக்கையைக் காட்டுடா…! என்று சொன்னார். ஒரு வாழை மட்டை குப்பைத் தொட்டி
அருகே நல்ல பாம்பு படம் எடுத்தது போன்று இருந்தது.
ஐயோ…
நல்ல பாம்பு…! என்று நீ சொல் என்றார். சொன்னேன்…! எல்லோரும் பார்த்து ஆமாம் என்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி.
1.மனிதனின் உணர்வுக்குள் எதை ஏற்றுகின்றோமோ அந்த உணர்ச்சியின் இயக்கங்கள் எப்படி ரூபமாகக் காட்டுகிறது…?
2.வாழை மட்டை தான்…! நாகப்பாம்பு போன்று தெரிகின்றது.
இதை ஏற்றுக் கொண்ட பின் மனிதனுக்குள் இந்த உணர்வு எப்படி
இயக்குகின்றது…? பாம்பின் ரூபமாக எப்படிக் காட்டுகிறது…?
என்று காட்டுகின்றார்.
ஐயோ பாம்பு…! என்று சொன்னேன் எல்லோரும் ஆமாம் என்கிறார்கள். அது அந்தி நேரம். வாழை மட்டையிலே லேசாக மினு
மினு என்று மின்னிய பின் அந்த நேரத்திலே அப்படித் தெரிகின்றது. சுருக்கம் சுருக்கமாக இருப்பதால் நிஜமாகவே அது நாகப் பாம்பு போலவே
தெரிகின்றது.
எல்லாம் விழுந்து அடித்து ஓடுகின்றார்கள். பாம்பை அடிக்க வேண்டும்
கட்டையை எடு… கம்பை எடு…! என்கிறார்கள். ஒருவன் பெரிய
கம்பால் அதை அடிக்கின்றான். கம்பிலே அடித்தவுடன் சுற்றி எங்கேயோ சென்று விட்டது… தெரியவில்லை.
காலுக்குள் சென்றது… இல்லை அங்கே போய்விட்டது என்று அலறிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அடித்தவுடன் சுற்றி மேலே சென்று தூரத்தில் விழுந்து விட்டது.
ஆனால் அந்தப் பக்கம் போனால் அது வாழை மட்டையாகத் தான்
இருக்கின்றது. அவன் அதை அடிக்கவில்லை. எங்கேயோ போய்விட்டது… இல்லை
இந்தப் பக்கம் போய்விட்டது…! என்று தேடிக்
கொண்டிருக்கின்றார்கள்.
அந்த உணர்வுகள்… “நாம் சமைத்த உணர்வுகள் கண்ணிலே எதைக் காட்டுகின்றது…?” என்று இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
வேறு ஒன்றும் வேண்டியதில்லை. ஒரு பொருளை உங்களுக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
1.கண்ணிலே சிறிது நேரம் அப்படியே உற்றுப் பாருங்கள்.
2.பார்த்துவிட்டுத் திரும்பி வேறு பக்கம் பாருங்கள்.
3.அந்தப் பொருள் சுவரிலே தெரியவரும்.
புள்ளிப் புள்ளியாக ஓட்டையிட்டு ஒரு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்...
அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…! சிறிது நேரம்
அதை உற்றுப் பாருங்கள்
பார்த்துவிட்டு அந்தப் பக்கம் பாருங்கள்
அதே ஓட்டை அந்தப் பொருள் எல்லாம் தெரிய
வரும்.
1.அதே பொருளைப் பார்த்து விட்டு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
2.சுவரிலே பார்த்தால் அப்படியே தெரியும்.
இந்த உணர்வுகள் நம் கண்ணிலே அதனுடைய பிரதி பிம்பமாக அப்படித் தெரிய வருகிறது.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வார்கள்.
1.அந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் போது
2.குவித்து… உணர்வின் இயக்கமாக நம்மை
இயக்குகின்றது.
பல கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனான பின்
1.உணர்வின் நோக்கங்கள் கவர்ந்து கொண்டது எதுவோ…
2.அந்த உணர்ச்சிகளைத் தனக்குள் நுகரச் செய்து
3.இந்த உணர்வுக்கொப்பவே “ரூபத்தைக் காட்டுகின்றது…”
இதையெல்லாம் அனுபவித்துச் சொல்லுகின்றேன். குருநாதர் கொடுத்த சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.