1.”சூட்சும இரகசியங்கள்” செயல்படுகின்ற காரியத்தன்மைகள் அகம் புறம் இரு நிலைகளிலும்
2.நாவின் சூட்சமம்… ஒலி நாத செயலாகச் சிரசின் உச்சியில் நடிக்கின்ற (இயக்கம்) சிவ நடனம் காட்டுவதன் மறைபொருள் என்ன…?
அஷ்டமம் என்பது எட்டாம் இடத்தின் நிலை. எட்டு என்பதே பூரண சந்திரனைக் குறிக்கும். சந்திரன் வியாபகமாக “நீல வண்ண ஒளித்தன்மை நிலைபெற்றிடும் வாழ்வு...”
இதையே இன்றைய காலகட்டத்தில் ஜோதிட விற்பனர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அஷ்டமத்தில் சனி என்றும்… செவ்வாய் என்றும்… சித்தன் காட்டிய பேருண்மைகளை வேறு பொருள் காட்டிவிட்டனரப்பா.
“சரீரத்தின் ஆதிக்க நிலை” - சூரிய சக்தியின் ஒளி பெறும் சந்திரன்… தன் சுயப்பிரகாச நிலையை அதனுள் உள்ளிட்டு (தனக்குள் எடுத்து) வெளிப்படுத்துதல் போல்… அனிமாது (அஷ்டமாசித்து) சித்துக்கள் கொண்டு உயர் நிலை வளர்ச்சி பெறுதல் என்பதில் கடைப்பிடிக்க வேண்டிய காரிய நிகழ்வுகளும் உண்டு.
அறிந்து தெளிந்திட… சிந்தனையை அதன் ஓட்டத்தைச் செலுத்திடத் தான் வேண்டும். பிரம்மத்தின் நின்று சித்து கிளைத்த விந்தையாம் “விந்தை அடக்கு…” என்பார் வேதாள மகரிஷி.
ஓர் கனியினைச் சுவைக்கின்றோம். சுவைத்து அந்தக் கனியின் சுவையின் பொருள் அறிகின்றோம். அந்தக் கனியின் சுவை உண்டான முறையை உணர்தல் என்பதே சூட்சுமம்.
கனிவு என்பது நாம் உரையாடும் வார்த்தைகளினால் வெளிப்போந்து வந்து… உள்ளத்தின் தன்மைகளை உணர்த்துகின்றோம்.
1.இந்நிலை உருவாகின்றதே… உள்ளத்தில் அங்கு இருக்கின்றது சூட்சமம்.
2.உயர் ஞான சக்தியை உணர்ந்து கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பக்குவங்கள் அதனில் அடங்கும்.
“விந்தையாம் விந்தை அடக்கு” என உரைத்ததில் பொருள் உண்டு. சித்துக்களின் செயல்பாடு ஒவ்வொரு நிலையைக் காட்டும்.
ஓசை என ஓர் கலை உண்டு.
1.ஓங்காரப் பொருள் காட்டும் அதன் தத்துவம் “நாவின் அடி சூட்சுமம்…” இந்நிலை பிரம்மம் என உரைப்பர்.
2.அதனைச் செயல்படுத்துகின்ற சக்தியானது கண்டத்தின் சூட்சுமத்தில் உள்ளது.
3.நாபிக் கமலத்திலிருந்து மேல் எழுகின்ற பிரம்ம இலய நாதம்
4.கண்டத்தின் சக்தியைத் தூண்டி நாவின் பிரம்ம நிலையில் வியாபித்து
5.ஆக்ஞா சக்கரம் என்ற அறுகோணக் கருவறைரை நெற்றியினுள் எண்ண சிவம் நடிக்கும் (இயக்கும்).