9/16/2018

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் முதல் முதல் மனிதன் அகஸ்தியன் ஒளியான நிலை தான் “என்றும் பதினாறு… மார்க்கண்டேயன்…!


அகஸ்தியன் அவன் கற்றுணர்ந்து வரவில்லை. சந்தர்ப்பத்தால் தான் ஞானியாக ஆனான்.

அவன் தன் தாய் தந்தையர் விஷத்திடமிருந்து காத்திடும் உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்ட இந்த நிலை தான் இவன் உள்ளத்திலும் பட்டு அதன் துணை கொண்டு பேரண்டத்தின் விஷத்தையும் நீக்கிடும் உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்தது.

பூமி சுழலும் போது பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வின் தன்மைகளைத் தன் துருவத்தின் வழியாக எப்படிக் கவர்கின்றது…? அந்த உணர்வுகள் அனைத்தும் கரைந்து ஆவியாக மாறி பூமிக்குள் படர்ந்து அது எவ்வாறு செயல்படுகிறது..? இந்த உணர்வுகள் பூமிக்குள் எப்படி விளைகிறது..? என்ற நிலையை நுகர்ந்து அறிந்தான்.

“அகம்” - அணுவின் தன்மை அது எவ்வாறு செயல்படுகிறது என்ற இந்த உணர்வின் ஞானத்தை அறிந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் அறியும் பருவம் வரும் பொழுது தான்
1.பதினெட்டு வயது எட்டுவதற்கு முன் விஷத்தின் தன்மையை மாய்த்துத் துருவ மகரிஷியாகி
2.இளமையிலேயே “என்றுமே…. இளமையாக…!” வாழும் நிலைகளைப் பெற்றான்.
3.அதைத்தான் “மார்க்கண்டேயன்” என்று பிற்காலங்களில் நாம் உணர்வதற்காகக் காட்டி
4.“என்றும் பதினாறு…!” என்ற நிலையை அங்கே அடையச் செய்கின்றனர்.

அதன்படி அகஸ்தியன் “என்றும் பதினாறு…!” என்ற நிலையானாலும் விண்ணிலே வரக்கூடிய அந்த விஷத்தின் தன்மையை முறித்துத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றும் பொழுது அது இரண்டு.

ஆகவே பதினெட்டாவது நிலையை அடைந்து விண்ணின் ஆற்றலை நுகர்ந்து என்றும் தான் ஜீவிதமாக வாழும் பெற்றான் அகஸ்தியன். அவன் உடலிலே விளைந்த அந்த உணர்வின் தன்மை தான்
1.பல லட்சம் ஆண்டுகளுக்கு முதன் முதல் முதல் மனிதன்
2.இந்த மனித உடலிலிருந்து முதல் உயிராத்மாவை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
3.பூமியின் வட துருவத்தில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான் அந்த அகஸ்தியன்.

பூமியின் துருவப் பாதையிலே வரும் பிரபஞ்சத்தின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து அந்த விஷத்தின் தன்மையை முறித்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து அவ்வாறு வெளிப்படும் உணர்வலைகள் மனிதர்களாகப் பிறந்த நமக்கும் அந்த ஞானத்தின் ஒளிச் சுடராக ரிஷியின் மகன் நாரதன் என்ற பெயருடன் நம் பூமியிலே படர்கின்றது.

1.இருள் சூழும் விஷத்தை முறித்து இருள் நெருங்காத நிலைகள் கொண்டு
2.ஒளியின் சுடராக தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
3.என்றும் பதினாறு என்ற இளமைப் பருவமாக
3.இன்றும் விண்ணில் இருந்து கொண்டிருக்கும் அவரைத்தான் துருவ மகரிஷி என்றும்
4.அதனின்று வரக்கூடிய உணர்வின் ஒளி அலைகளைத் தான் நாரதர் என்றும் வைத்தது.