இன்றைய வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகையான அலைகளில் மோதிக் கொண்டிருக்கின்றோம்.
பாச அலை… பண்பு அலை… பரிவு அலை… வெறுப்பலை… வேதனை அலை… சங்கட அலை…! என்று இப்படி எத்தனையோ
அலைகள் வந்து மோதிக் கொண்டிருக்கின்றது.
நமக்குள் அவைகள் பதிவாகி இருக்கிறது. “கொஞ்சம் சோர்வடைந்தோம்...!” என்றால் வெறுப்பான அலை தான் இங்கே வரும்.
அந்த வெறுப்பான உணர்வு வந்ததும் நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள்
தாங்க முடியாதபடி “வேதனை” என்ற
உணர்வு வரும். இப்படி மாறி... மாறி... மாறி... மாறி... நமக்குள் அலைகள் மோதிக் கொண்டு
இருக்கிறது.
கடலில் அலைகள் தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது...! அதில் படகில்
போகின்றோம் என்றால் ஒரு எல்லையை வைத்துத் தான் நாம் போகின்றோம்.
எல்லையை வைத்துப் போகும் போது எதிரில் எத்தனை அலைகள் வந்தாலும்
துடுப்பை வைத்துத் தள்ளி நாம் போக வேண்டிய எல்லையை அடைய வேண்டும் என்று விரும்புகின்றோம்.
ஆகவே கடலில் அலைகள் மாறி மாறி வருவது போல் நமது மனித வாழ்க்கையில்
எத்தனையோ வெறுப்பு வேதனை எல்லாம் வந்த பிற்பாடு
1.என்ன வாழ்க்கை இது…? என்ற
2.இந்த வெறுப்பான உணர்வில் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
வேதனை என்ற விஷமான உணர்வை எடுத்தால் இன்றைக்கு மனிதனாக இருப்போம்.
ஆனால் அடுத்தாற்போல இன்னொரு உயிரினத்தின் உடலுக்குள் தான் போக முடியும். மனித உடல்
கூடப் பெற முடியாது.
ஆகவே வாழ்க்கையில் நம்மை வந்து மோதும் அத்தகைய அலையில் இருந்து
தப்ப வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த துடிப்பை வைத்து
எல்லா அலைகளையும் பிளந்து நம்மிடமிருந்து தீமைகளை விலக்கித் தள்ளிவிடலாம்.
அவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வளர வளர
அருள் ஞானத்தின் சக்திகள் பெருகிப் பிறவியில்லா நிலை அடைய முடியும். ஆக இயற்கையின்
நிலைகளை ஞானிகள் கண்டுணர்ந்ததை உணர்த்துகின்றோம்.
ஏனென்றால் யானையைச் செய்கிறோம் பூனையைச் செய்கிறோம் என்று சொன்னவர்கள்
இன்று இருக்கிறார்களா...! என்றால் இல்லை. யாரும் இந்த உடலுடன் இருந்ததில்லை.
1.நமது குருநாதர் இவ்வளவும் சொல்லிக் கொடுத்தார்.
2.அவர் உடலுடன் இங்கே இருக்கின்றாரா...? என்றால் இல்லை.
3.அவர் உயிரோடு சேர்த்து ஒளியாக இருக்கின்றார் நமது குருநாதர்.
4.அவர் வழியைக் கடைப்பிடித்தவர்கள் எல்லாம் ஒளியின் உடலாக அவருடன்
ஐக்கியமாகி இருக்கின்றார்கள்.
நான் (ஞானகுரு) யானையைப் பண்ணித் தருகிறேன் பூனையைப் பண்ணித் தருகிறேன்
என்று சொன்னால் உங்களை ஏமாற்றத்தான் அது உதவும்.
மாய ஜாலங்களைப் போல விளைய வைத்து வெள்ளாமை செய்து உங்களுக்கு அந்தச்
சக்திகளைக் கொடுக்கலாம். அதற்காக இறந்த ஆவியின் தன்மையை எடுத்துக் கொடுக்கலாம்.
1.அந்த ஆவி கெட்ட வேலையைச் செய்யும்.
2.மந்திர ஜாலங்களை வைத்துக் கெட்டது தான் செய்ய முடியுமே தவிர அது
நல்லது செய்யாது.
ஏனென்றால் அதைப் போன்ற ஆவியின் தொடர்பு கொண்டு சொத்தையும் சுகத்தையும்
தேடியவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள்.
1.ஆரமபத்தில் பணம் எல்லாம் நிறைய வரும்.
2.இருக்கிற மாதிரித் தெரிகின்ற அந்தப் பணம் எல்லாம் கடைசியில்
3.எங்கே போனது..? எப்படிப் போனது…? என்ன…? ஏது…? என்று ஒன்றும்
தெரியாது
4.வீடே சூனியமாகும்….! அத்தனை பேரும் நாஸ்தி ஆகி விடுவார்கள்.
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் வாழ்க்கையில் வரக்கூடிய இடைஞ்சலை நீக்குவதற்கு உங்களுக்குச்
சக்தி தேவை. துருவ நட்சத்திரத்தின் உணர்வு இங்கே பரவி இருக்கின்றது. அவ்வப் பொழுது
எடுத்து உங்களுக்குள் அந்தச் சக்தியைக் கூட்டிக் கொள்ள முடியும்.
மெய் ஞானிகள் அருள் உணர்வுகளை நான் எண்ணும் பொழுது என் உயிர் கடவுளாக
இருந்து அதை எனக்குள் உருவாக்குகிறது. அப்படி விளைய வைத்த வித்தைத்தான் உங்களிடம் பதிவு
செய்கிறேன்.
அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் தான் எடுத்து உங்களுக்குள்
வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல வித்தைக் கொடுத்தோம் என்றால் அதைப் பக்குவமாக
வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் நல்ல முறையில் விளையும்.
1.வித்தை ஊன்றிய பின் இருபது நாள் அப்படியே விட்டு விட்டு
2.எங்கே முளைக்கக் காணோம்…! என்று அதற்கப்புறம் தண்ணீர் ஊற்றினால்
என்ன செய்யும்…? முளைக்காது...!
3. நான் (ஞானகுரு) செய்து (வளர்த்துத்) தருவேன் என்றால் நானல்ல.
4.ஞான வித்தைத் தொடர்ந்து நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
5..இந்த நிலையை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
ஒருவர் பலகாரம் செய்து கொடுக்கின்றார் என்றால் அதை வாங்கி உட்கொள்ளலாம்.
தீரத் தீர அதை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் தானே அதைச் செய்வது என்றால் எப்படிச் செய்வது…?
பலகாரம் செய்யத் தெரியவில்லை என்றால் இரவல் வாங்கிக் கொண்டு தான்
இருக்க வேண்டும். இல்லையா…! அப்போது நீங்கள் என்றைக்குச் சமைக்கப் பழகுவது…?
ஆகவே வாழ்க்கையில் வரும் தீமைகளை உங்களுக்குள் சேராதபடி நீங்களே
தான் தடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லாமல் போனால் யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.
1.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.அதை மிகவும் முக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.