ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2018

ஐகிரி நந்தினி... நந்தித மேதினி... விஸ்வ விநோதினி...!


நாம் பூமியினுடைய இயக்கத்தில் இருக்கின்றோம். பூமி நம்மை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்கிறது.
1.சூரியனுடைய ஈர்ப்பில் பூமி இருக்கும் பொழுது பூமியினுடைய வட பகுதி தென் துருவம்.
2.பூமி விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றலை வட துருவத்தின் வழியாக அது இழுக்கிறது.

தென்னை மரம் பூமியின் ஆற்றலை எடுக்கிறது, இது தென் துருவம். இந்தப் பூமிக்குள் இருக்கக்கூடிய வெப்பத்தின் தணல்களை இழுக்கின்றது.

கீழே தென் துருவமாக இருக்கின்றது. ஆனால் அதே சமயம் வட துருவம் அது மேலே இருக்கக்கூடிய அலையின் தன்மையைத் தனக்குள் ஆகாரமாக எடுத்து வளர்கின்றது. அது இல்லை என்றால் தனக்குள் வேறொன்றுமில்லை.

இதைப் போன்றுதான் ஒவ்வொரு உயிரணுவும் தெற்கு விட்டம் இருந்து தான் இயங்கும். அதாவது
1.காந்தப் புலன்கள் வடக்கும் தெற்கும் அல்லது தெற்கும் வடக்கும் ஒன்றை ஒன்று ஈர்க்கும்.
2.வடக்கும் வடக்கும் அல்லது தெற்கும் தெற்கும் வைத்தால் இழுக்காது விலக்கிவிடும். அல்லது மிதக்கச் செய்யும்.

இதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே நாம் எந்தப் பிடிப்பில் இருக்கின்றோம்…? பூமியின் ஈர்ப்பலைகளுக்குள் இருக்கின்றோம். இங்கு காந்த சக்தி இல்லை என்றால் என்ன செய்வோம்…? மிதப்போம்...!

சந்திர மண்டலத்தின் ஈர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் மனிதர்கள் அன்று அதற்குள் இறங்கும் பொழுது எப்படி உருண்டார்கள்...! என்று பார்த்திருப்பீர்கள்.

ஆகவே எத்தகைய நிலைகள் விண்ணிலே படர்ந்தாலும் ஆவியினுடைய தன்மைகளாகத் தான் அது பரவி இருக்கின்றது. ஏகமாக இருக்கும் அதனின் நிலைகளில் “தனித்த திசை இல்லை...!” அதே போல
1.நம் உடலுக்குள் எண்ணிலடங்காத பல உணர்வுகள் இருந்தாலும்
2.எந்தத் திசையினுடைய நிலைகளில் நாம் இருந்தாலும்
3.நம் உடலுக்குள் சுவாசத்தின் வழியாக எடுக்கும் நிலைகள் கொண்டு அது கிழக்காகின்றது.
“ஐகிரி நந்தினி…!” என்கிற போது ஒரு அணுவின் தன்மைக்குள் ஐந்து உணர்வின் இயக்கம்.
1.வெப்பம் – உருவாக்கும் சக்தி
2.காந்தம் – ஈர்க்கும் சக்தி
3.விஷம் – இயக்கும் சக்தி
4.மணம் – 1,2,3 சேர்ந்து பிறிதொன்றைக் கவர்ந்தது
5.உணர்வு – 1,2,3 கவர்ந்த மணத்தை அங்கே இயக்கமாக்குகின்றது... உணர்ச்சி.

உதாரணமாக நாம் சூரியனிலிருந்து வருவதை அந்த வெயிலாகக் காண்கின்றோமே அது எல்லாமே பாதரசம் தான். அதாவது வெப்ப காந்த அலைகள்.

அதிலே காந்தம் என்பது ஈர்க்கும் சக்தி கொண்டது. அதாவது ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் சக்தி. எதிர் நிலையான மரபுகளைச் சேர்த்தவுடன் சூடாகும். அவ்வாறு சூடாகும் பொழுது ஒரு பொருளின் தன்மையை தனக்குள் வளர்க்கும்.

அதை வளர்த்தபின் இந்தப் பாதரசம் ஆவியாக மாறும். வெப்பத்தின் தன்மை ஒரு பொருளுக்குள் சூடானவுடன் அது ஆவியாக மாற்றிச் செல்கின்றது.

ஒரு வெப்ப காந்தத்தினுடைய நிலைகள் காந்தம் தனக்குள் ஈர்த்து ஒரு பொருளின் தன்மையை எடுத்துக் கொண்டாலும் நீருக்குள்ளும் அந்தக் காந்த சக்தி உண்டு. காந்த சக்தி இல்லையென்றால் நீரைத் தனக்குள் அணைத்துக் கொள்ளாது. (அதாவது காந்தம் இல்லை என்றால் அந்த நீரும் நீரும் சேராது)

அதைப் போல வெப்பம்... “நெருப்பு” ஒன்றை உருவாக்கவும் ஒன்றை மறைக்கவும் செய்யும். இந்த வெப்பத்திற்கு இரு நிலை. ஒரு செடியிலிருந்து வரக்கூடிய மணத்தை இந்த வெப்ப காந்தம் தனக்குள் எடுத்து அந்த மணத்தை வெளிப்படுத்துகின்றது.

அதே சமயம் செடியின் மணத்தை நாம் சுவாசிக்கும் பொழுது (அதற்குள் இருக்கும் வெப்ப காந்தம் கவர்ந்த உணர்வின் சக்தி) நம் உடலுடன் இணைந்து வெப்பமாகும் பொழுது உணர்வின் தன்மை நம்மை இயக்குகின்றது.

ஒரு அணுவின் தன்மை இயக்கம் ஐந்து. ஒரு மனிதனுடைய ஐந்து புலனறிவு கண் காது மூக்கு வாய் உடம்பு. இந்த பூமிக்கும் புலனறிவு ஐந்து தான்.

ஆனால் புத்தக வடிவில் சாஸ்திரத்தைக் கற்றுக் கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்…? அண்டம் பிண்டம் அது இது என்றெல்லாம் சொல்வார்கள்.

அன்றறைய ஞானிகள் நாதத்தினுடைய நிலைகள் ஒவ்வொன்றையும் அவர்கள் பிரித்துக் காட்டினார்கள். ஆதிசங்கரர் ஐகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ விநோதினி என்றார்.
1.ஒரு அணுவிற்குள்ளும் அந்த ஐந்து தான்.
2.நீ எடுத்துச் சுவாசிப்பதும் ஐந்து புலனறிவுதான்.
3.நீ சுவாசித்த உணர்வின் தன்மை உயிருக்குள் பட்டவுடன்
4.சூடான நிலைகள் கொண்டு திருப்பி அதை இயக்குவதும் ஐந்து தான்.

“ஐகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ விநோதினி நந்தினிதே”
என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள் எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ அதே உணர்வின் தன்மை தன் உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வ விநோதினி”

“ஐகிரி நந்தினி” நம் உடலைச் சுற்றி வருகின்ற சுவாசத்தை நாம் சுவாசித்தவுடன் நாம் உயிரின் நிலைகளில் சுவாசித்து நம் உயிரில் பட்டவுடன் அதே ஐந்து உணர்வுதான் அது ஒன்றுக்குள் ஒன்று சேர்த்தவுடன் இந்த உணர்வின் தன்மை தனக்குள் இயக்குகின்றது என்று பாடினார்.

இவர்கள் என்ன செய்தார்கள்..? ஆதிசங்கரர் பராசக்தியைப் பற்றிப் பாடினார். ஆதிசக்தியைப் பற்றிப் பாடினார் என்று அவருக்குப் பின்னாடி வேள்விகளையும் யாகங்களையும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பதைக் கார்த்திகைப் பெண்கள் என்று ஆறு சக்தியாகக் காட்டப்பட்டு ஒவ்வொரு சக்தியினுடைய நிலைகள் மனிதருக்குள் எவ்வாறு செயல்படுகிறது..? என்று ஞானிகள் காட்டினார்கள்.

மனிதனுடைய ஆறாவது அறிவின் இயக்கத்தையும் தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சக்திகளையும் அது எவ்வாறு என்று உணரச் செய்வதற்காக ஞானிகள் காட்டியிருந்தாலும்
1.ஆறு பெண்களுக்குச் சக்தியாக குழந்தைகளாகப் பிறந்து
2.அது ஒன்றாகச் சேர்த்து அது கார்த்திகேயனாக வளர்ந்தான் என்பதைத்தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர
3.மெய் உணர்வின் அலையை அந்த ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை எடுத்துக் கொள்ளவில்லை.

அந்த உண்மைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) இப்பொழுது இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.