பூமியில் உருவான ஓர் கடலைச் செடியின் மீது சூரியனின் வெப்ப காந்தங்கள்
(வெயில்) தாக்குகின்றது. அப்படித் தாக்கப்படும் போது அது கொதிப்பாகி செடி தனக்குள்
உறைந்தது போக மீதத்தை ஆவியாக கடலைச் செடியின் மணங்களாக வெளிப்படுகின்றது.
அத்தகைய மணங்களை இந்த வெப்ப காந்தங்கள் கவர்ந்து அணுக்களாக மாறுகிறது.
அந்த அணு கடலைச் செடியின் மணத்தைத் தாங்கிய இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
அத்தகைய கடலைச் செடியின் மீது சந்தர்ப்பத்தில் ஒரு உயிரணு படுமேயானால்
1.கடலைச் செடியிலிருந்து வெளிவரும் மணத்தை
2.உயிரணுவில் இணைந்த காந்தம் தனக்குள் கவர்ந்து
3.உயிரணுவுடன் இணைக்கப்படும் போது அது ஜீவனாகின்றது.
அந்தக் கடலைச் செடியின் மணம் உயிரணுவிற்குள் மோதும் பொழுது ஜீவனாகி
ஆவியாகி மீண்டும் அதனுடன் உறையும் தன்மை வருகின்றது.
பாலைக் காய்ச்சிய பின் எப்படி அதன் மீது எப்படி ஆடை
விழுகின்றதோ அது போல கடலைச் செடியின் மணம் (சத்து) உயிரணுவிற்கு மேல் ஆடை போன்று உறைந்து
விடுகிறது.
1.ஆகவே அதற்குள் இந்த உயிரின் அறிவு அடைபட்டுவிடுகின்றது.
2.அதனால் தான் சூட்சமமாக இருக்கும் உயிரணுவை (உயிரை) நாம் பார்க்க
முடியவில்லை.
3.மின் அணுவாகத்தான் பார்க்க முடியும்.
4.அதனின் நுண்ணிய நிலைகள் வரப்படும் போது அந்த உயிரின் நுண்ணணுக்களையும்
நாம் காண முடியாது.
5.ஏனென்றால் அதுவும் சூட்சமத்தின் இயக்கத் துடிப்பு கொண்டது.
அதே மாதிரி ஒரு தாவர இனச் சத்தின் மணத்தைச் சூரியனின் வெப்ப காந்தம்
கவர்ந்து கொண்டால் அந்த மணத்தைக் கவர்ந்து கொண்ட அணுக்களின் தன்மை படர்ந்து வரப்படும்
போது அதிலே எதிர்பட்டு நாம் சென்றால் அதைச் சுவாசிக்கும் பொழுது
1.ஏதோ ஒரு மணம் வருகிறது என்று நாம் அறிய முடிகின்றது.
2.அப்படி அறிந்தாலும் ஒரு விஷத் தன்மை கொண்ட செடியிலிருந்து
வந்த மணமாக அது இருந்தால்
3.அதை நாம் சுவாசிக்கும் பொழுது அது நமக்குள் ஜீவன் பெற்று நம் நல்ல அணுக்களைச் செயல் இழக்கச் செய்கின்றது.
5.நாம் மயங்கி விழுந்து விடுகின்றோம்.
ஏதோ கெட்ட வாசனை வருகின்றது என்று அறிந்த நிலையில் மயங்கி விழுந்து
விடுகின்றோம். அதாவது அதனுடைய இயக்கச் சக்தி அதிகமாகி நம் நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது.
இதை நாம் அறிந்து கொள்கின்றோம்.
அதே போல ஒரு நறுமணமான மணத்தை நாம் நுகரப்படும் போது அந்த நிமிடம்
நாம் சுவாசிக்கப்படும் பொழுது ஏதோ நல்ல வாசனையாக வருகிறது...! என்று அறிந்து கொள்கின்றோம்.
இப்படி இத்தனை மணங்களைச் சுவாசித்துத் தனித் தனியாக நாம் உணர்ந்தாலும்
அது எவ்வாறு... எங்கிருந்து வந்தது...? என்று நம்மால் அறிய முடிவதில்லை.
இதைப் போலத் தான் ஒரு உயிரணு தாவர இனச் சத்தின் மணத்தை நுகரப்படும்
போது அது உறைந்து புழுவின் உடலாக உருவாகின்றது. அப்பொழுது உயிர் அந்த உடலுக்குள் மறைந்து
விடுகின்றது.
1.அதாவது சூட்சம நிலைகளில் நாம் காண முடியாத அந்த மணத்தை நுகர்ந்து
2.இந்த உயிரணு தன்னுடன் உறையச் செய்து
3.அதற்குள் உயிர் உள்ளடங்கி விடுகின்றது.
உயிரின் இயக்கம் ஈசன். ஆகவே ஈசன் என்ற இயக்கம் அது உள்ளடங்கி தான்
இழுத்துக் கொண்ட சக்தியை உடலாகப் போர்த்திக் கொள்ளும் போது சிவமாக... உருவமாக நமக்குத்
தெரிகின்றது.
அப்பொழுது உயிரின் இயக்கமான ஒளியின் சக்தி உடலுக்குள் மறைந்து விடுகின்றது.
1.ஒளியான உயிர் இருளான உடலுக்குள் மறைக்கப்பட்டு
2.உடலாகச் சிவமாகத் தோன்றுவதைத் தான் சிவன் இராத்திரி என்று
3.ஞானிகள் காரணப் பெயராக வைக்கின்றார்கள்.
உயிரின் தன்மை உடலான சிவத்திற்குள் ஆகும் போது அந்த உயிரின் தன்மை
அதற்குள் நின்று மறைந்து விடுகின்றது. இது தான் சிவன்ராத்திரி.