பெரிய பெரிய மலைகளை எல்லாம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அதிலே
அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைத் தான் பருகி
அதன் அருகிலே எந்த மலை இருக்கின்றதோ அதறகுள் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது. சில
பகுதிகள் அவ்வாறு உண்டு.
அந்தப் பகுதிகளுக்கு மேலே மேகங்கள் படர்ந்து சென்றால் உச்சி மலையாக
இருப்பது தனது காந்தப்புலனால் அந்த மேகங்களைக் கவர்ந்து அதற்குள் நீராகச் சுரக்கச்
செய்கின்றது.
மலைக்குக் கீழே நீர் இருக்காது. ஆனால் அத்தகைய மலை உச்சிகளில் நாம்
நீரைப் பார்க்கலாம். ஏனென்றால்
1.இவையெல்லாம் இந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும்
2.அதனுள் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்களுக்கொப்ப
3.அதனின் துணை கொண்டு தான் அந்தப் பாறையை அது வளர்க்கின்றது.
அதே சமயத்தில் அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து பாறை மீது
நீர் ஓடினாலும் அதனின் தன்மை ஆவியாகப் பறந்து வரப்படும் போது அதைப் போல மற்ற செடிகளின்
தாவர இனச் சத்துகளின் ஆவிகளும் இது இரண்டும் ஒருக்கிணைந்து அதனின் தன்மை கொண்டு ஓர்
செடியாக ஒரு வித்தாக ஒரு கருவாக உருவாகின்றது.
1.அத்தகைய செடிகளை நாம் வேறு எங்கேயாவது ஊன்றினால்
2.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
3.விண்ணிலே நுண் அணுக்களாகக் கலந்து கொண்டு இருக்கும் நிலையில்
4.துருவப் பகுதியில் இருந்து வரும் அல்லது கடல் நீர்களிலிருந்து
வெளிப்படும் ஆவியின் சக்திகளை
5.சூரியனின் காந்த சக்தி அது கவர்ந்து வைத்திருப்பதைத்
தனக்குள் குவித்து
6.மேகங்களாக கூடச் செய்து நீராக வடியச் செய்து அந்த நீரின் சத்தை
எடுத்து வளர்த்துக் கொள்கின்றது.
இயற்கையில் சந்தர்ப்பத்தால் பல உணர்வின் அலைகள் மோதி மோதி பல உணர்வின்
சக்திகள் கருவாகி இப்படித்தான் பல பல தாவர இனங்களாக உருவாகின்றது.
அன்றைய மெய் ஞானிகள் இதைப் போன்ற தாவர இனத்தின் சத்தை அறிந்துணர்ந்து
அந்தச் செடிக்குள்
1.மனிதனைக் காத்திடும் நிலை எவ்வளவு இருக்கின்றது...?
2.மனிதனுடைய நல்ல உணர்வினுடைய வளர்த்திடும் நிலைகள் எப்படி இருக்கின்றது...?
3.மனிதனுடைய சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் உணர்வின் சத்து செடியிலே
எப்படி இருக்கிறது என்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்து
4.அதை நாம் பக்குவப்படுத்திப் பயன்படுத்தும் நிலைகளுக்குக்
கொடுத்தனர்.
ஆனால் செடியிலிருந்து வித்தா...? வித்திலிருந்து செடியா...? என்று
கேள்விக் குறி போட்டு இன்றும் விஞ்ஞான அறிவில் கண்டு கொள்ள முடியாத நிலையில்
இருக்கின்றார்கள்.
சில பொருள்களை இணைத்து மனிதனுடைய உணர்வுகள் இயக்கப்பட்டு புதுச்
செடிகளை மனிதனால் உருவாக்க முடிகின்றது. உருவாக்கியதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
1.ஒவ்வொரு செடியிலும் என்னென்ன உலோகச் சத்துகள் (கால்சியம்
இரும்பு) அது எந்த இவ்வளவு இருக்கின்றது...?
2.அதில் மற்ற சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றது...?
3.அதே போல மனித உடலின் தசைகளில் கொழுப்புச் சத்து எவ்வளவு
இருக்கின்றது...?
4.உடலில் தாதுக்களும் மற்ற உப்புகளும் எவ்வளவு இருக்கின்றது என்று
இதை எல்லாம் அறிந்து கொள்கின்றது இன்றைய விஞ்ஞான அறிவு.
இருந்தாலும் இயற்கையாக உருவாகும் தாவரங்களிலிருந்து நாம் பெறக்
கூடிய உணவு வகைகளை அன்று ஞானிகள் நமக்குக் காட்டியிருந்தாலும் அதை விடுத்துவிட்டு
செயற்கையாக விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட உணவு வகைகளைத்தான் நாம் இன்று அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்.
அதனால் இயற்கையின் அந்த மெய் ஞானத்தின் அறிவின் வளர்ச்சிகள்
குன்றப்பட்டு மனிதன் சிந்தனைகள் குறைந்து இயந்திரத்தைப் போல இயங்கும் நிலையாக
1.விஞ்ஞானத்தின் வீரியத்தின் செயலாகத்தான் வளர முடிகின்றதே
2.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மை பெற முடியவில்லை.
3.இன்றைய மனிதன் தன்னைக் காக்கும் நிலையும் இல்லை.
இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே
சொல்கிறோம்.