ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2018

ஊழ்வினை எது…? ஊழ்வினைப் பயன் என்பது எது…?


விஞ்ஞான அறிவு கொண்டு சாதாரண காகிதத்தில் கெமிக்கல் கலந்த சில நிலைகளைப் பூசி நாடாக்களாக உருவாக்கி அதிலே டேப் ரிகார்ட் (TAPE RECORDER) மூலம் காந்த ஊசி கொண்டு பதிவு செய்கின்றார்கள். இன்று லேசர் மூலம் எலெக்ட்ரானிக் முறைப்படி பதிவு செய்கின்றார்கள்.

அதைப் போல மனிதனுக்குள்ளும் சரி ஒரு மிருகத்திற்குள்ளும் சரி ஒரு புழுவிற்குள்ளும் சரி இதைப் போன்று தான் மற்றொன்றைத் தான் பார்த்துணர்ந்தவைகளைத் தனக்குள் பதிவாக்கி வைத்துக் கொள்ளும்.

மீண்டும் அதை நினைவாக்கப்படும் போது அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த எண்ணங்கள் தன்னைக் காத்திடும் நிலையாக வருகின்றது. அதாவது
1.முதலிலே தான் பதிவு செய்த இந்த உணர்வுகள்
2.மீண்டும் நினைக்கப்படும் போது அதைச் சுவாசிக்கும் போது
3.அது எண்ணமாக வந்து அது இயக்குகின்றது.

இப்படித் தான் புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் வருகிற வரையிலும் ஒவ்வொன்றையும் நாம் பதிவு செய்தவைகளின் வலு அதிகமாகக் கூடி அந்த நினைவின் ஆற்றலை நமக்குள் பெருக்கச் செய்து நம் எலும்புக்குள் ஊழாக நாம் எண்ணியதை அது பதிவு செய்யும் போது “ஊழ் வினை…!”

ஒரு தரம் ஒருவர் நம்மை ஏசுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த உணர்வின் தன்மையை நாம் பதிவு செய்து கொண்டால் அது ரெக்கார்ட் (RECORD) ஆகிவிடுன்றது. அது நம் எலும்புக்குள் ஊழ் வினையாக மாறுகின்றது.

ஒருவருக்கொருவர் சண்டை இடுவதை நாம் உற்றுப் பார்க்கப்படும் போது அது ஆழமாக நமக்குள் பதிவாகி விட்டால் அந்த எண்ணம் மீண்டும் நமக்குள் நினைவு வருகின்றது.

இதைப் போன்று ஊழ் வினையாகப் பதிவு செய்த பின்
1.மீண்டும் நாம் அந்த எண்ணங்களை நினைவு கொள்ளும் போது
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தப்பட்டு
3.காற்றிலே மறைந்து இருக்கும் அச்சக்தியை நம் உடல் ஈர்த்து நம்மைச் சுவாசிக்கச் செய்து
4.நாம் சுவாசிக்கும் போது அந்த உணர்வின் நிலைகளை எண்ணங்களாக உருவாக்கி
5.அந்த எண்ணத்தின் நிலைகளே சொல்லாக வருவதும்
6.அந்த உணர்வின் தன்மை நம் உடலை அதற்கொப்ப அது இயக்கிக் காட்டுகின்றது.

இதைத்தான் ஊழ்வினை என்பது.

இப்பொழுது வாழ்க்கையில் நாம் எதை எதையெல்லாம் ஆழமான நிலைகளில் கருத்தூன்றி அதைக் கேட்டுணர்ந்து அதை நுகரப்படப்போம் போது அந்த உணர்வின் எண்ணங்களாக வந்தாலும் எவ்வளவு கூர்ந்து கவனிக்கின்றோமோ அந்த அளவுக்குப் பதிவாகின்றது.

1.நம் வாழ்க்கையில் நல்லது நடப்பதற்கும் கெட்டது நடப்பதற்கும்
2.நம் எலும்புக்குள் பதிவு செய்த ஊழ்வினையே காரணமாகின்றது.
3.அதைத் தான் ஊழ்வினைப் பயன் என்பது.

அத்தகைய ஊழ்வினையாக இயக்கும் நிலையை எந்த விஞ்ஞானத்தாலும் மாற்ற முடியாது. அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் ஆழமாகப் பதிவு செய்து அதன் அருகிலேயே இதை வளர்த்தால் தான் அந்தப் பழைய ஊழ்வினையின் இயக்கத்தை மாற்றி நல்ல பயனாக நாம் பெற முடியும்.

யாம் (ஞானகுரு) அடிக்கடி உங்களுக்கு மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்குவதே உங்கள் ஊழ்வினையை மாற்றத்தான்…! ஆகவே மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாக உங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழுங்கள்.