ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2018

பாழடைந்த இடத்தில் ஓங்கி வளரும் அரச மரமும் - பேரண்டத்தில் பாழடைந்த இடத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்...!


அரச மரத்தின் பழத்தை ஒரு குருவியோ மற்ற பட்சிகளோ உணவாக உட்கொண்டாலும் அது பறந்து செல்லும் நிலைகளில் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை இட்டால் அந்த மலத்துக்குள் மறைந்திருக்க கூடிய வித்து அங்கே பதிந்துவிடுகின்றது.
1.நீரே இல்லாது வறட்சியாக இருந்தாலும் வித்து அங்கே பதிந்த பின்
2.இரவிலே வரும் குளிரைக் கொண்டு அந்த உணர்வின் தன்மை தனக்குள் பதம் கொண்டு
3.அந்தப் பாழடைந்த கட்டிடத்தில் அந்த வித்து ஜீவன் பெறுகின்றது.

ஜீவன் பெற்றுத் தன் இனத்தின் தன்மை எதுவோ அதைக்  காற்றுக்குள்ளிருந்து நுகர்ந்து அந்த உணர்வின் சத்தாகச் செடியாக மலர்கின்றது.

அது வளர வளரத் தன் விழுதுகளைப் பரப்பி தன் உணர்வின் சக்தியால் ஊடுருவி... “அந்தக் கட்டிடத்தையே பிளந்து...!” பூமியில் நிலத்தின் தன்மையை நோக்கிக் கீழே கொண்டு வந்து தன் உணர்வின் ஆகாரத்தைத் தேடும் நிலை பெறுகிறது.

விண் சென்ற ஞானியர்கள் அனைவரும் இதைப் போன்ற பேராற்றல் பெற்றவர்கள் தான்...!
விண்ணிலே சுழன்று கொண்டு வருவது விஷத்தின் தன்மைகளாக இருந்தாலும் இந்த மனித உடலிலே அந்த விஷத்தை முறித்து விஷத்தை அடக்கி உயிருடன் ஒன்றிய உணர்வின் நிலையை ஒளியாக மாற்றி விண் சென்ற நிலைகள் அது பாழடைந்த இடம் தான்.

அதாவது விண்ணிலிருந்து வரும் பல பல விஷத்தின் தன்மைகளும் பல கோள்களிலிருந்து வரும் நிலைகளும் பேரண்டத்திலிருந்து வரும்  விஷத்தின் துகள்களும்
1.அங்கே வரும் போது எதுவுமே உற்பத்தி ஆகாது.
2.விஷத்தின் தாக்குதலால் பல நிலைகள் மாறிக் கொண்டிருக்கும்.
3.அப்பேர்பட்ட பாழடைந்த இடத்தில் இருளை நீக்கி விஷத்தை முறுக்கி
4.தன் உணர்வின் தன்மையை “ஒளியாக மாற்றி...!” மண்டலமாகவும் நட்சத்திரமாகவும் ஆனவர்கள் மகரிஷிகள்.

பாழடைந்த இருள் சூழ்ந்த அந்த விஷத்தின் தன்மைக்குள் இந்த உயிராத்மா அங்கே சென்றடைந்து அங்கே வரும் விஷத்தின் தன்மையை ஒடுக்கி ஒளியின் சுடராக இன்றும்... என்றும்... வாழ்ந்து கொண்டுள்ளவர்கள் மகரிஷிகள்.

வைரம் எவ்வாறு விஷத்தை உள்ளடக்கி அது எப்படி ஒளிச் சுடராக  வெளிப்படுத்துகின்றதோ அதுபோல ஜீவன் கொண்ட இந்த ஒளியான உயிராத்மாக்கள் (மகரிஷிகள்) விண்ணிலே இருந்து வரக்கூடிய விஷத்தை ஒடுக்கி அந்த உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

1.அந்தப் பாழடைந்த இடத்திலே சூரியனின் ஒளிகளே இல்லை என்றாலும்
2.தனக்கு வேண்டிய ஒளியின் சுடராக
3.தனக்குள் இருக்கும் உணர்வின் ஒளி கொண்டு பிற நிலைகளை ஒளியாக்கும் நிலை பெற்றவர்கள் பேரண்ட மகரிஷிகள்
4.நம் பூமியிலிருந்து அப்படிச் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் “துருவ மகரிஷியாக...” உள்ளான்.

அந்தத் துருவ மகரிஷியைப் பின்பற்றி சென்றவர்கள் அனைவருமே அவனைப் போன்றே ஒளியின் சுடராகச் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள். இந்தப் பேருண்மையை உணர்த்துவதற்குத்தான் விநாயகருக்கு அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.

பாழடைந்த கட்டிடத்தில் அரச மரம் அது எப்படித் தன் விழுதுகளை ஊன்றி காற்றிலே மறைந்திருக்க கூடிய ஜீவ சக்தியின் தன்மையையும் தன் உணவையும் நுகர்ந்து அது தனக்குள் விளைவித்துக் கொள்கிறதோ அதைப்போல
1.இன்று மனிதர்களாக இருக்கும் நாமும்
2.அந்தப் பேரண்ட மகரிஷிகள் எப்படி விண் சென்றனரோ
3.அவர்கள் வழியிலே... அவர்கள் காட்டிய அந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு
4.விநாயகரை நாம் பூஜித்து அணுகினால் அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவருமே அடைய முடியும்.

முதல் மனிதன் அகஸ்தியன் விண் சென்ற அந்த நந்நாளே “விநாயகர் சதுர்த்தி...!’