ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2017

விநாயகர் தத்துவம் -- 5

1. விநாயகன் “ஞானவான்
கடலைச் செடியில் வீழ்ந்த ஒரு உயிரணு கடலைச் செடியின் மணத்தை நுகர்ந்து தனக்குள் உறைப்படும் பொழுது ஒரு புழுவாக உருவாகின்றது.

கடலைச் செடியில் உருவான புழு கடலைச் செடியின் சத்த்தை உணவாக எடுத்து வாழ்கின்றது. இருப்பினும் அதன் சந்தர்ப்பம் அந்தச் செடியில் கீழே விழுந்து விட்டால் தன் உணவுக்காக நுகர்ந்து பார்க்கின்றது.

அப்படி நுகரும் பொழுது தன் அருகிலே இருக்கக்கூடிய மற்றொர் செடியை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது “தனக்கு வேண்டாம்.., என்று ஒதுங்கிச் செல்கின்றது.

ஆனாலும், இது நுகர்ந்து பார்த்த மற்றொரு செடியின் உணர்வுகள் புழுவின் உயிரிலே “ஓ.., என்று மோதி ஜீவன் பெற்று, “ம்.” என்று உடலுக்குள் கடலைச் செடியின் மணத்துடன் சேர்ந்து விடுகின்றது.

அடுத்தடுத்து மற்றதை நுகரும் பொழுது அதை அறிந்தபின் “இதற்கும் அதற்கும்.., சேரவில்லை.

இப்பொழுது எப்படி வேப்ப மரமோ கடலைச் செடியோ தன் அருகிலே மற்ற செடியின் மணத்தை விடுவதில்லையோ அதைப் போல இந்த உயிர் கடலைச் செடியின் மணத்தை நுகர்ந்ததினால் “மற்ற செடியின் மணத்தை.., உணவாக உட்கொள்ள விடுவதில்லை.

இது “நுகர்ந்து பார்த்து.., உயிருக்குள் பட்டவுடனே.., அது ஞானம் – அறிவு.., அதனால்தான் விநாயகன் “ஞானவான்”.

ஆக கடலைச் செடியின் மணம் இந்த உயிருக்குள் பட்டு அது வினையாகச் சேரும் தருணத்தில் “அதை அறிந்து கொள்ளும் மணம்.., ஞானம்.., வருகின்றது.

“இது வேண்டாம்.., என்று ஒதுக்கி அது சுவாசித்த நிலைகள் கொண்டு தன் உணவை எடுத்துக் கொள்ள அந்தக் கடலைச் செடி இருக்கும் பக்கம் அது நுகர்ந்தறிந்து நகர்ந்து செல்கின்றது.

இவ்வாறு நகர்ந்து செல்லும் பொழுது அருகிலே செல்லும் மற்ற மணங்கள் சிறுகச் சிறுக நுகர்ந்து இந்த உணர்வின் சத்து அதற்குள் சேர்த்து இந்தக் “கடலைச் செடியின் மணத்தையே.., நுகர முடியாது போய்விடுகின்றது.

“கடலைச் செடி தன் அருகிலே இருந்தாலும்.., மற்ற மணங்கள் அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது கடலைச் செடியைப் பார்க்கும்போது “வெறுப்பாகின்றது.

இதைப் போல உணர்வுகள் அதிகமாகச் சேரும் பொழுது எலி எப்படி வளை அமைத்துக் கொள்கின்றதோ இது நுகர்ந்து பார்த்த அனைத்தும் வளையிலிட்டுக் “கடலைச் செடியின் மணத்தையே.., அறியாத தன்மை.., ஏற்படுகின்றது.

பொழுது இந்தக் கடலைச் செடி “நாயகனாக இருந்த மணம் சிந்திக்க முடியாது “தனக்குள் உணவு எது..,?” என்று தெரியாது கலக்கமாகி இதற்குள் “நோயாக.., உருவாகின்றது.
2. விநாயகருக்கு முன் எலியை ஏன் வைத்துள்ளார்கள்?
விநாயகருக்கு முன் எலியை வைக்கின்றார்கள்? தான் குடியிருக்க எலி வங்கு போட்டு அதில் வாழுகின்றது.

நீங்கள் நல்ல மனதோடு இருக்கின்றீர்கள். வேதனைப்படும் மனிதனை நுகருகின்றீர்கள். நுகர்ந்த அணுக்கள் உங்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களில் விஷமாகச் சேருகின்றது.

நல்ல அணுக்களில் விஷம் கலந்துவிட்டால் குணங்கள் மாறிவிடும். இதுதான் ஓமுக்குள்.., ஓம்.., என்பது.
பிரணவத்தை மாற்றுகின்றது.
உணர்ச்சிகளை மாற்றுகின்றது.
எண்ணங்களை மாற்றுகின்றது.
செயல்களை மாற்றிவிடுகின்றது
என்பதனைக் காட்டுவதற்குத்தான் எலியைப் போட்டுக் காட்டுகின்றார்கள்.

இதுவெல்லாம் இயற்கையின் நியதிகள். அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள்.