ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2017

விநாயகர் தத்துவம் – 10

விநாயகருக்கு அருகில் இரு பாம்புகள் பிணைந்திருப்பதாகப் போட்டுள்ளார்கள், ஏன்?
நான்கு நாட்களுக்குத் தியானிப்பார்கள். அதனால் எனக்கு எல்லாக் காரியமும் நடந்தது என்று சொல்வார்கள். “ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் சென்றேன்.., என் காரியம் நல்லபடியாக நடக்கின்றது என்று கூறுவார்கள்.

ஆக, தீய உணர்வுகளைச் சுத்தம் செய்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால், “ஒருவன் எதிர்த்துப் பேசினான்.., என்றால் அவன் உணர்வு நமக்குள் வந்து, “பாருடா.., நான் இவ்வளவு ஆத்ம சுத்தி செய்கின்றேன்.., தியானம் செய்கின்றேன்.., என்னை எதிர்க்கிறான் பார்”, என்ற உணர்வை எடுத்துக் கொள்வார்கள்.

“எடுத்தவுடன் ஆத்ம சுத்தி செய்ததைக் காட்டிலும் அவன் உணர்வு அதிகமாகிவிடும். நமக்குள் “மறைந்த ஊழ்வினையுடன் சேர்ந்து.., நாம் ஆத்ம சுத்தி செய்த நிலையே மாற்றிவிடும்.

பாலுக்குள் விஷம் பட்டால் எப்படி மறைக்கின்றதோ அதைப் போல அவனின் உணர்வுகள் ஆன்மாவிலே கலந்துவிடுகின்றது.

அந்த உணர்வின் சத்து நமக்குள் இருந்தாலும் “ஊழ்வினை.., என்ற நிலைகளில் இதுவும் மறைக்கின்றது. இவன் பாய்ச்சிய நிலைகளும் வருகின்றது.

இதற்குத்தான், விநாயகர் ஆலயங்களில் இரண்டு பாம்பினைப் போட்டிருப்பார்கள்.

ஏற்கனவே வினை இருக்கின்றது, விஷம். அதில் பிறிதொருவர் சொல்லும் பொழுது, “இரண்டும் பிணைந்து.., நஞ்சின் தன்மை ஆன்மாவில் பெருகிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை நமக்குள் வந்தவுடன் நமக்குள் என்னதான் நல்ல குணங்கள் இருந்தாலும் செயலற்றதாக இந்த ஆன்மாவிற்குள் சேர்ந்து நம் உணர்வினை நஞ்சாக மாற்றுகின்றது.

முதலில் தியானம் செய்தேன். இப்பொழுது “தியானமே செய்யவிடமாட்டேன் என்கிறதே.., என்பார்கள்.

அதற்காகத்தான் உங்களுக்குத் திரும்பத் திரும்ப உபதேசம் செய்து கொண்டிருக்கின்றேன்.

உங்களை அறியாமல் எந்த உணர்வுகளெல்லாம் இயக்குகின்றதோ எல்லாவற்றிற்குள்ளும் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கச் செய்து உங்களுக்குள் அதை ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றோம்.

ஊழ்வினையாகப் பதிவு செய்ததை நினைவு கொண்டு தீமை புகாது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், “எங்கள் தீமைகள் விலக வேண்டும்.., விலக வேண்டும்.., என்ற எண்ணங்களை எடுத்தால்தான் இது சிறுகச் சிறுகச் சேர்ந்து எல்லா உணர்வுகளிலும் சேரும்.

இப்படி நம் ஆன்மாவில் பட்ட தீய உணர்வுகளைக் குறைக்க வேண்டும். அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற நிலைகளை மெய்ஞானிகளின் ஆற்றலை ஊழ்வினையாக பதிவு செய்கின்றோம்.

இருந்தாலும் முந்தைய பதிவுகள் உங்களுக்குள் இருக்கின்றது. உதாரணமாக, CDக்களில் ஏதோதோ பாடியிருப்பார்கள். அதிலே பாடிய நிலைகளை “அழிக்காதபடி.., மீண்டும் பதிவு செய்தால் என்னாகும்?

முதலில் ஒன்றைப் பதிவு செய்திருந்தாலும், அடுத்து ஒன்றைப் பதிவு செய்யும் பொழுது “முதலில் பதிந்ததை அழித்துவிட்டுத்தான் மறு பதிவு செய்வார்கள் விஞ்ஞான அறிவின் துணையால்.

இதைப் போல நாம் நல்ல குணங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றால் முதலில் இருக்கக்கூடிய தீய குணங்களைத் துடைக்க வேண்டும்.

துடைத்துப் பழகி அந்த அருள் ஞானியின் உணர்வைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று தீய உணர்வைத் துடைக்க வேண்டும்.

ஒரு முறை துடைத்து மீண்டும் எண்ணம் வந்தால் “ஓம் ஈஸ்வரா..” என்று மீண்டும் உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று தீய உணர்வைத் துடைக்க வேண்டும்.

அதிலே நினைவு குறைந்தால் மீண்டும் மீண்டும் நினைவுகளைச் செலுத்தி அதைத் துடைத்துப் பழகுதல் வேண்டும்.

பின், யார் நம்மை ஏசினாரோ என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும், என் உணர்வுகள் அவரை நல்லவராக்க வேண்டும்  அவர் என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று “அவரிடமிருந்த வினைகள்.., நமக்குள் வராதபடி அதை நிறுத்த வேண்டும்.

இதுதான் விநாயக சதுர்த்தி.

நமக்குள் தீய வினைகள் வராது நிறுத்த வேண்டும் என்ற நிலைக்குத்தான் அன்றைய ஞானிகள் தான் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு “விநாயரை மேற்கே பார்க்க வைத்து..,, நம்மைக் கிழக்கிலிருந்து வணங்கும்படிச் செய்தார்கள்.

அந்த சூட்சம நிலைகளில் விண் சென்ற அருள் ஞானியை நினைவு கூர்ந்து நமக்குள் ஊவினையாகப் பதிவு செய்யவும், நம் நினவாற்றலை சக்திவாய்ந்ததாக மாற்றும்படி செய்தார்கள்.


அந்த அருள் உணர்வுகளை நமக்குள் எண்ணும் பொழுது பிரணவம். அதை ஜீவன் பெறச் செய்யவும் “மெய் உணர்வுகளை.., நமக்குள் வினைக்கு நாயகனாக ஆக்கிடவும் இதை மெய்ஞானிகள் செய்தார்கள்.