1. மகிழ்வாகனா
நமது
ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்றும் முருகா என்றும் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
நம்
வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அந்த நேரத்தில் மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று அந்த அருள்
சக்திகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.
இப்படிச் செய்தால்
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தீமைகளை வேக வைத்துவிடும். தீமைகள் நமக்குள் வளராமல்
தடுக்க முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.
அதனால்
தான் நம் ஆறாவது அறிவை “மகிழ்வாகனா” என்று உணர்த்தியுள்ளார்கள். தீமைகளை நீக்கினால்.., “மகிழ்ச்சி” என்ற
நிலைகள் உருவாகின்றது.
ஒரு
குழம்பில் காரத்தைப் போட்டால் காரத்தின் உணர்ச்சியைத்தான் தூண்டும். விஷத்தைக் கலந்து
விட்டால் விஷத்தின் செயலாக்கம்தான் வருகின்றது.
ஆனால், தீமையை
நீக்கி மகிழச் செய்யும் வாகனமாக இருக்கின்றது ஆறாவது அறிவு. நமது
ஆறாவது அறிவின் செயலாக்கத்தை மகிழ்வாகனா என்று தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள் ஞானிகள்.
முருகனுக்கு வாகனமாக
வைத்திருப்பது மயில் (மகிழ்ச்சி) மகிழும் தன்மை (மயில்) என்று காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவின் தன்மையாக முருகனை வைத்துப் படைக்கத்
தெரிந்தவன் என்ற நிலையில் மயிலும் அதன் காலடியில் விஷமும் வைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது கருணைக்
கிழங்கை வேக வைத்து ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அதனுடன் பல பொருள்களை இட்டு நஞ்சினை
அடக்கிச் சுவைமிக்கதாகச் செய்து உணவாக உட்கொள்கின்றோம்.
ஆக கெட்டதை
நீக்கி நாம் மகிழ்ச்சியான நிலையில் உணவை உட்கொள்கின்றோம்.
ஆனால் அந்தக் கருணைக் கிழங்கில் இருக்கக்கூடிய
நஞ்சு அது அடக்கப்படுகின்றது
என்ற நிலையை உணர்த்துவதற்காக இந்த
ஆறாவது அறிவை முருகன் என்று அதை வைக்கின்றனர்.
இவ்வாறு முருகன்
உருவாக்கத் தெரிந்தவன் நஞ்சினை அடக்கத்
தெரிந்தவன் என்ற நிலையைக் காட்டுவதற்காக மயிலையும்
பாம்பையும் வைத்தது.
2. சக்திவேல்
முருகனுக்கு
சக்திவேல் என்றால் முனை
கூர்மையாக இருக்கின்றது. அதாவது “அடி பெருத்து.., நுனி சிறுத்து” தன்னுடைய
கூர்மையான எண்ணத்தின் ஆற்றல் கொண்டு தீமைகளை எவ்வாறு அகற்றிடல் வேண்டும் என்று நிலையைத் துவைதம் -- உருவ
நிலைகளாக அமைத்துக் காட்டினார்கள் மெய்ஞானிகள்.
அதைப் பார்க்கும் பொழுது அத்வைதம் – சூட்சமமாக அந்த ஆற்றல்மிக்க சக்திகளை
எல்லோரும் பெறுவதற்காக இவ்வாறு காட்டியுள்ளார்கள்.
3. சேவற்கொடியோன்
“முருகனை சேவற்கொடியோனே” என்று அழைக்கின்றோம்.
நாளை வரக்கூடிய நிலைகளை தெரிந்து
கொள்ளும் சக்தி பெற்றது ஆறாவது அறிவு. இதற்குத்தான் சேவற்கொடியோனே என்று அழைத்தார்கள் ஞானிகள்.
காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப்போன்று
ஆறாவது அறிவு பெற்றவர்.., “உண்மையின் உணர்வை அறியக்கூடியவர்” என்று “சேவற்கொடியோனே..,” என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.
மனிதரை அறியாமையிலிருந்து
விடுபடச் செய்து
உண்மையை அறிந்துணர்ந்து தெளிந்து வாழச் செய்யும் நிலைக்கே ஆலயங்கள் ஞானிகளால் உருவாக்கப்பட்டன.
இதனின் உண்மைளை அறிந்த நாம் ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் பொழுது கனியின் சுவையின்
சுவையின் இனிமை என் சொல்லிலும், செயலிலும் நான் பெற வேண்டும், மலரைப் போன்ற மணம் நாம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
தெய்வச்சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்
தங்க நகைகளைக் காணும் பொழுது, தங்கம் போன்று மனம் மங்காத நிலை நாம் பெறவேண்டும்.
இந்த ஆலயம் வருவோர் அனைவரும்
இதன் நிலைகள் பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரது குடும்பங்களிலும், அருள் சக்தி படரவேண்டும். அவர்களது குடும்பங்களில் உள்ள அனைவரும் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து
வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இதன் நிலைகள் கொண்டு நம்முள்ளும்
அருள் ஞான சக்தி பெருகுகின்றது. நமது வாழ்க்கையும் அருள் ஞான வாழ்க்கையாக அமைகின்றது.