ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 22, 2017

“பூஜைக்கு நேரமாகிவிட்டது...” என்று இராமன் சொல்கின்றான்...!

இராமேஸ்வரத்தில் இராமன் செல்லப்படும்பொழுது சிவலிங்கத்தைப் பூஜிக்க லிங்கத்தை எடுத்து வருவதற்கு ஆஞ்சநேயனை அனுப்பினான்.

ஆனால் அவன் வரக் காலதாமதமாகிவிட்டது. ஆகவே “இராமன் மணலைக் குவித்தான்”. அதைச் சிவலிங்கமாக வைத்து வணங்கினான் என்று காட்டுகின்றார்கள்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் உட்பொருள் என்ன?

இராமன் என்றால் நம் எண்ணங்கள். ஆக, எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமேஸ்வரம். நம் மனதைக் குவிக்கும் இடம்தான் “இராமேஸ்வரம்”.

கடைசியில் நேரமாகிவிட்டது..,” என்று இராமன் என்ன செய்கின்றான்? மணலைக் குவித்து பூஜித்தான்.

எல்லோரும் அன்போடு இருக்க வேண்டும் என்று (நம் எண்ணங்களை) நம் மனதைக் குவித்துப் பழக வேண்டும். மனதைக் குவிக்கவில்லை என்றால் என்னவாகும்?

இரண்டும் சேர்த்து சண்டைப் போட்டுக் கொள்ளும்.

“சிறிது காலமே.., இந்த மனித உடலில் வாழ்கின்றோம்..!” அதற்குள் இந்த மனித உடலில் மனதைக் குவித்தல் வேண்டும். அதாவது எல்லாக் குடும்பங்களும் நல்லது பெறவேண்டும் என்று மனதில் எண்ண வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கின்றார்கள்? விஷ்ணு பக்தர்கள் சிவனை வணங்க மறுக்கின்றனர்.

சிவனை வணங்குவோர் இராமனை வணங்கினால் அது பாபம் என்றும் இராமனை வணங்குவோர் சிவனை வணங்கினால் அது தோஷம் என்றும் இப்படியெல்லாம் நம்மைப் பிரித்து விட்டனர்.

மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உண்மைகளின் இயக்கத்தை நாம் அறிய முடியாது அரசர்கள் ஆண்ட நிலையில் காலத்தால் தடைப்படுத்தப்பட்டுள்ளது.

ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை நாம் அறிய முடியாதவண்ணம் காலத்தால் அழிந்தே போய்விட்டது.

இன்று அதை யாம் வெளிப்படுத்தினால்.., இது என்ன? “புதிதாக இருக்கின்றது…!” இவர் கடவுளே இல்லை.., என்று சொல்கிறாரே.., என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமேஸ்வரத்தில் மனிதனுடைய பொக்கிஷம்” அத்தனையும் உண்டு.

இராமாயணத்தில் இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின், “பூஜைக்கு நேரமாகிவிட்டது..,” என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

நேரமாகிவிட்டது..,என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர். ஆனால் இந்த உடலில் காலதாமதமாகி விட்டது.., என்பது தான் அதனுடைய பொருள்.

நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு இராமர் மணலைக் குவித்து  (மனதைக் குவித்து)  சிவ பூஜை செய்தார். சிவலிங்கத்தை பூஜித்தார்.., சிவலிங்கமாக மாற்றினார்.., என்று காண்பித்தார்கள்.

எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

நாம் எண்ணத்தால் பல தீமைகளை அகற்றி உணர்வின் எண்ணங்களைக் குவித்தால் அத்தகைய எண்ணங்களால் உருவானது தான் “உயிரின் ஒளிகள்..,” என்பதை “இராமலிங்கம்..,” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

எதனின் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றதோ அதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை அணுவாகி அந்த உணர்ச்சியின் செயலாக நாம் செயலாக்கி அந்த “உணர்ச்சிக்கொப்ப உடலின் ரூபங்கள் ஆனது..,” என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே சந்தர்ப்பத்தால் பல தீமையான உணர்வுகளை நுகர்ந்தறிந்தாலும் அதை நீக்கிட வேண்டும். நம் எண்ணங்களெல்லாம் ஒன்று சேர்ந்து பகைமையில்லா உணர்வுகளை நமக்குள் வளர்த்து “ஏகாந்த நிலையை” அடைய வேண்டும்.

“இந்த உடலிலிருக்கும்போதே..,” அந்த ஒளியின் உணர்வைச் சேர்த்து அதை வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும்.

இதுதான் கடைசி நிலை.