ஒருவன் ஆக்சிடென்ட் ஆகின்றான். “இப்படி ஆகிவிட்டதே..,”
என்று நாம் வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது “ஓ..ம் நமச்சிவாய..,” பய உணர்வுடன் எடுக்கும்
பொழுது நம் உடலாக சிவமாக ஆகின்றது.
அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது. ஏன்..,
அவ்வாறு ஏற்படுகின்றது? நாம் தவறு செய்யவில்லை.
நம்முடைய உயிர் எவ்வாறு உடலாக மாற்றுகின்றது..?
கண்கள் அவன் செயலை உற்றுப் பார்க்கச் செய்கின்றது. கருவிழி
படமாக்குகின்றது. உணர்வின் அலையைக் கவரச் செய்கின்றது.
உயிரோ “ஓ..,” என்று பிரணவமாக்குகின்றது.
உணர்வினை உனக்குள் உணர்த்துகின்றது.
உணர்வின் தன்மை உடலாக உறையச் செய்கின்றது
என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டப்படுகின்றது.
யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒரு ஆக்சிடென்ட்
ஆகின்றது என்றால் “வேண்டும் என்றே விழுகின்றார்களா..,?” இல்லையே.
அவனுடைய வாழ்க்கைக்காகச் சென்றான். எதிர்பாராது ஒரு வண்டி
மோதுகின்றது. அடிபட்டு அவன் துடிக்கின்றான். அவன் உடலிலிருந்து துடிக்கும் உணர்வலைகள்
வெளிப்படுகின்றது.
சூரியனின் காந்தப் புலனறிவோ அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
கண்களோ துடித்தவணின் உணர்வை உற்றுப் பார்க்கின்றது. உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்குகின்றது.
ஆனால், அவனிடமிருந்து வெளிப்பட்ட அலைகளைக் கண்ணின் காந்தப்
புலனறிவு தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. நம் உயிரோ அதை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை
உணர்த்துகின்றது. ஜீவ ஆன்மாவாக மாற்றுகின்றது.
யாரும் தவறு செய்யவில்லை. நமக்குள் இருக்கும் புலனறிவு
தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது. அந்தத் தீமை என்ற நிலையை அந்தந்தச்
சந்தர்ப்பங்களில் உணர்த்துகின்றது.
ஆனால், தீமையிலிருந்து விடுபடும் ஆறாவது அறிவு கொண்டு விடுபட
வேண்டுமே..,!
இதற்குத்தான் இந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் “ஈஸ்வரா..,” என்று உயிருடன் ஒன்றி அந்த
அருள் சக்திகளைச் சுவாசித்தல் வேண்டும்.
அப்படிச் சுவாசித்தால் “ஓ..ம் நமச்சிவாய..,” “ஓ..ம் நமச்சிவாய..,”
ஏனென்றால், அந்த மகரிஷிகள் தீமையை அகற்றியவர்கள் நஞ்சை
வென்றவர்கள். உணர்வை ஒளியாக மாற்றியவர்கள்.
“சிவாய நம ஓ..ம்..,” “சிவாய நம ஓ..ம்..,” - நான் பார்ப்போருக்கெல்லாம்
அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும். அவர்கள் அறியாது இருள்கள் நீங்க
வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள்
கண்டுணரும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்சுதல் வேண்டும்.
ஏனென்றால், இன்றைய விஞ்ஞான அறிவால் வளர்த்துக் கொண்ட நிலைகளில்
பல நஞ்சான உணர்வுகள் பரவிக் கொண்டுள்ளது. உலகில் நடக்கும் பல கொடுமையான நிலைகள் இன்டெர்னெட்
மூலமும், டி.வி. மூலமும், பத்திரிக்கை மூலமும் வந்து கொண்டே இருக்கின்றது.
அதில் எதையெல்லாம் மனித உடலில் படைத்தோமோ அவையெல்லாம் “சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது”. அதை நுகர்ந்தால் நம்மை அறியாமலே
பல தீமைகளை உருவாக்கும் நிலைகள் உருவாகின்றது.
“வேடிக்கைதான்..,” பார்க்கின்றோம். ஆனால், உற்றுப் பார்க்கும்
உணர்வுகள் நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது. அதைத் தடுக்க வேண்டும், சுத்தப்படுத்த
வேண்டும்.
ஆகவே, நாம் தவறு செய்யாமலே.., நம்மையறியாமல் வரும் பல கொடுமையான
தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.