“தூபஸ்தூபி” – விண் செல்லும் மார்க்கம்
பழனி மலைமேல் இருக்கக்கூடிய தூபஸ்தூபி முன்
நின்றபின் நாம் என்ன செய்ய வேண்டும்?
அதற்கு நேராக.., “சன்னதி” தெரியும். சன்னதி
தெரிகிறதென்றால் அதை எண்ணி வானை நோக்கி நினைவினைச் செலுத்த வேண்டும்.
நாம் மேலே பார்த்தவுடன் அந்தத் தெய்வ குணத்தைப்
பெற வேண்டும். இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை
நோக்கி ஏங்கவேண்டும்.
தூபஸ்தூபிக்கு முன் அப்படி அந்த அருள்
உணர்வுகளை ஒவ்வொருவரும் சுவாசிக்க வேண்டும்.
“கிரி வலம்” வரும்
பொழுது அந்தத் தெய்வ குணங்களை எந்த மெய்ஞானி நமக்கு உணர்த்தினாரோ.., அங்கு எந்த
உணர்வு கொண்டு நாம் வந்தோமோ அந்த அருள் உணர்வுடன் சுற்றி வரவேண்டும்.
வந்து, சன்னதிக்கு முன் நின்று அந்தச் சிலையை
உற்று பார்த்து.., “சிலையிலிருந்து வெளிப்படும்..,” மணத்தைச்
சுவாசிக்க வேண்டும்.
பின் இதையெல்லாம் அருளிய அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கிப் பார்த்து ஏங்கித்
தியானிக்க வேண்டும்.
அதே சமயம், நம் குடும்பத்தில் யாரேனும் உடலை
விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் இதே முறைப்படி எண்ணும் பொழுது அந்த உயிரான்மாக்களை
மகரிஷிகளின் உணர்வின் ஒளிகள் கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.
அங்கே இணைந்து இந்த உயிரான்மா சுழலும் போது அது
வளர்ச்சி பெறுகின்றது. அழியா ஓளிச்சரீரம் பெறுகின்றது.
இந்த மனித வாழ்க்கையிலிருந்து தனக்கொத்த
நிலைகள் கொண்டு அந்த எண்ணத்தில் ஒருவர் அது உந்தும் பொழுதுதான் இந்த உணர்வின்
ஆற்றல் கொண்டு உடலை விட்டுப் பிரியும் உயிராத்மாக்கள் “விண் செல்ல முடியும்”.
அதற்குத்தான் அந்த மெய்ஞானிகளும் மகரிஷிகளும் அவர்கள்
அவ்வளவு பாடுபட்டாலும் “எவ்வளவு பெரிய சக்தி பெற்றாலும்.., சாதாரண மனிதனைத் தேடி
வருகின்றார்கள்”.
ஒரு விஷம் கொண்ட மனிதன் அவன் அறியாத மூடனாக
இருந்தாலும் மூட நம்பிக்கை கொண்டு தவறான செய்கை செய்பவனாக இருந்தாலும் “அவனிடத்தில்
நல்ல நிலைகள் வளரவேண்டும்.., அவர்களுடைய துன்பங்கள் நீங்க வேண்டும்…,” என்று
தவமிருந்தார்கள் மெய்ஞானிகள்.
இவ்வாறு உயர்ந்த உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை
அன்றைய மெய்ஞானிகள் ஏற்படுத்தினார்கள். அப்பொழுது அந்த எண்ணத்தால் அவன் விண்
செலுத்தும் நிலையை நினைக்க வேண்டும்.
இவன் நினைத்த நினைவு கொண்டு உயிராத்மாக்களை விண்ணிலே
அனுப்ப வேண்டும் என்ற இந்தத் தத்துவத்தைத்தான் அங்கே
தூபஸ்தூபியாக வைத்துக் காட்டினார்கள்.
“விண் செல்லும் மார்க்கங்களை” எல்லோரும்
பெறவேண்டும் என்பதற்காக அன்று மெய்ஞானி அதைச் செய்து வைத்துள்ளான்.