1. சரவணபவா குகா கந்தா
கடம்பா கார்த்திகேயா
புழுவிலிருந்து மனிதனாகத்
தோன்றும் வரையிலும் ஒவ்வொரு உணர்வின் தன்மையில் மாற்றங்களாகி அறியக்கூடிய சக்தியும்
தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய உணர்வும் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உருவாகி அதற்குண்டான
உடலாக வளர்ந்தது.
மனித உடலாக வளர்ந்தபின் எல்லாக் கழிவையும் கழிவாக்கக்கூடிய ஆற்றல் வரும்போது, நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் மறைந்துள்ள நஞ்சினைக் கழித்துவிட்டு நல்ல உடலாக
நமக்குள் சேர்த்து அந்த “ஆற்றல் மிக்க மணமாக வருவதுதான்.., ஆறாவது அறிவு”.
இந்த ஆறாவது அறிவால் நாம்
சுவாசித்து உயிரிலே பட்டவுடன் எதை எண்ணுகின்றோம்?
கருணைக் கிழங்கில் விஷம் இருக்கின்றது. அதை அறிந்து அந்த விஷத்தை நீக்கிவிட்டு நாம் சுவைமிக்கதாக மாற்றிச் சாப்பிடுகின்றோம்.
இந்த ஆறாவது அறிவின் பெயர்தான், சரவணபவா, குகா, அதாவது எதையுமே சரணமடையச்
செய்யக்கூடிய சக்தியாக உடலான இந்தக் குகைக்குள் நின்று இயங்குகின்றது.
கந்தா, சிறுகச் சிறுக வருவதை அறிந்து தனக்குள் அணைத்து நம் எத்தனையோ
குணங்கள் கொண்டு எத்தனையோ வகையான உணர்வுகளை நமக்குள் எடுத்தாலும், கடம்பா இதையெல்லாம் உருவாக்கத் தெரிந்து கொண்டவன்
உருவாக்கி கார்த்திகேயா எனக்குள்
அறியும் அறிவாக ஒளியாகத்
தெரிந்து செயல்படும் தன்மை.
சரவணபவா – சரணமடையச் செய்யும்
சக்தி
குகா – இந்த உடலான
குகைக்குள் நின்று
கந்தா – வருவதை அறிந்து
கடம்பா – உருவாக்கத் தெரிந்தவன்
கார்த்திகேயா – அறியும் அறிவு
ஒளியான வெளிச்சம்
ஆக, எத்தகைய தீய நிலைகள் வந்தாலும் இந்த உடலில் விஷத்தை மலமாக மாற்றி
உடலை நல்லதாக மாற்றி அறிந்து செயல்படும் ஆற்றல்மிக்க சக்தியான இந்த ஆறாவது அறிவின் தன்மை நமக்குள் உண்டு
இந்த ஆறாவது அறிவை சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா. பின் முருகா என்கிறோம். கருணைக் கிழங்கை வேக வைத்து அதனுடைய விஷத்தை நீக்கிவிட்டு நாம் சாப்பிடும் பொழுது
மகிழ்ச்சி அடைகின்றோம்.
2. வேலும் மயிலும் துணை
சக்திவேல் நமது கூர்மையான
எண்ணம், ஞானவேல் கருணைக் கிழங்கில்
உள்ள விஷத்தை நீக்கிய நிலை.
“வேலும் மயிலும்..,” என்றால் கருணைக்கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கிவிட்டு நாம் சாப்பிட்டவுடன்
அந்த ஞானத்தால் சாப்பிட்டவுடன் உடலில் மகிழ்ச்சியாகின்றது.
மயில் எப்பொழுதுமே தோகை விரித்து
ஆனந்தமாக ஆடுகின்றது. மயிலின் காலடியிலே என்ன இருக்கின்றது? பாம்பு,
நாம் கருணைக் கிழங்கை வேகவைக்கும்
பொழுது விஷமெல்லாம் நீங்கினால் மிஞ்சுவது கொஞ்சம் விஷம்தான்.
வேகவைத்த அந்தக் கருணைக் கிழங்கை
நாம் சாப்பிடும் பொழுது நம் உடலிலிருக்கக்கூடிய மூல வியாதிகள் கை கால் குத்தல் மூட்டுவலி, போன்றவைகள் எல்லாம் மிஞ்சிய விஷத்தன்மையால் நீங்கிவிடும்.
இந்த விஷத்தை நீக்கக் கூடிய
நிலைகள் அதனுடைய சக்திகள் நமக்குள் அடங்கி, நமக்குள் வரும் துன்பத்தை நீக்கக்கூடிய நிலைகளாக நமக்குள் வரும்.
அதுதான் சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, இந்த ஆறாவது அறிவின் தன்மை. இதையெல்லாம் நாம் சமைத்து உட்கொள்ளும் நிலைகள்.
முருகன் யார்? ஆறாவது அறிவு. மயிலின் காலடியில் பாம்பு விஷம், அதற்குக் கதை எழுதியிருப்பார்கள்.
அசுரனுடன் முருகன் போர் செய்தான். போர் செய்யப்படும் பொழுது, அசுரன் இறக்கப்படும் பொழுது.., “முருகா.., நான் உன் காலடியிலே இருக்கின்றேன்.., எனக்கு வரம் கொடு” என்றான்.
நம் வாழ்க்கையில் எந்த நிலை
இருந்தாலும் ரோட்டிலே போனாலும், ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அந்த ஆத்திரமான உணர்வுகள் நம்மைத் தூண்டும். அப்பொழுது அது நமக்குள் போராகின்றது.
ஆனால், போருக்குக் போகும் பொழுது மனிதன் இந்த உணர்வைத் தடுத்து அதை
மாற்றி அமைக்க வேண்டும்.
“தீமையான உணர்வை மாற்றக்கூடிய சக்தி..,” வரப்படும் பொழுதுதான் அதை “அசுரனை வென்றான்.., முருகன்” என்று சொல்கின்றோம்.
கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கும் பொழுது அந்த அசுரச் சக்தியை நீக்குகின்றோம். அப்பொழுது நாம் கருணைக் கிழங்கைச் சாப்பிட்டவுடன் அது நம் காலடியில் இருக்கின்றது.
எனக்குள் இருக்கும் விஷத்தின்
தன்மை ஆக்கபூர்வமான சக்தியாக இருக்கின்றது. ஆகையினாலேதான் அதை இங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்
ஞானிகள்.