ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2017

விநாயகர் தத்துவம் - 7

1.கணங்களுக்கு அதிபதி கணபதி
நாம் பலபல சரீரங்கள் பெற்று அதில் தன் உணர்வின் தன்மை காத்திடும் உணர்வுகளாகி எல்லாக் கணங்களுக்கும் அதிபதியாகி எல்லாவற்றையும் அடக்கி ஆட்சி புரியும் "மனித உடல்" பெற்றிருக்கின்றோம்.

நம் உடலில் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்தும் எதையும் அடக்கி ஆட்சி புரியும் அதிபதியாக.., உணர்வின் எண்ணங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன".

அதைத்தான் "கணங்களுக்கு அதிபதி.., கணபதி" என்று காரணப்பெயர் வைக்கின்றாரகள்.
2. கண ஹோமம்
கண ஹோமம் எது என்றே தெரியாது இருக்கின்றோம். 

ஆகவே ஒவ்வொரு பொருளையும் நெருப்புக்குள் இடப்படும் பொழுதும் சொல்லித்தான் போடுவார்கள்.

ஏன் போடுகிறோம்..,? எதற்குப் போடுகின்றோம்..,? என்று தெரியாது, புறத்தீயிட்டு அல்ல.

அகத்தீயில்.., போடவேண்டும்".

கண ஹோமம் என்பது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள். நம் உயிர் ஒரு நெருப்பு,

நாம் உயர்ந்த குணங்களை எண்ணும் நிலையில்  "பிறருக்கு உதவி செய்யவேண்டும்..," என்று எண்ணுகின்றேன்.

அந்த உணர்வின் தன்மை எனக்குள் வரப்படும்பொழுது உயிரான இயக்கத்திற்குள் (நெருப்புக்குள்) உணர்வு பட்டவுடனே அந்த உணர்வுகள் என் உடலுக்குள் பரவுகின்றது,

என் சொல்லின் "அலைகள்" வெளிப்படுகின்றது. வெளிப்பட்ட நிலைகள் மீண்டும் எனது உடலில் உள்ள காந்தப்புலன் எனது ஆத்மாவாக (காற்று மண்டலமாக) மாற்றிக் கொள்கின்றது. 

இதற்குப் பெயர் தான் "கண ஹோமம்".

 

நம் உயிர் ஒரு நெருப்பு. நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியைத்தான் அது இயக்கும்.

நாம் நஞ்சினை நெருப்பிலே போட்டால் நஞ்சின் வாசனை வரும். ஆனால், அதிலே நல்ல மணத்தின் தன்மை போட்டால் நல்ல மணத்தைக் காணலாம்.

அதே சமயத்தில் நல்ல மணத்தை நம் உயிரில் போடும்போது நல்ல மணமாக எண்ணங்களாக வருகின்றது.

 

புற நிலைகளில் யாகம் செய்பவர்கள் ஹோமத்தில் பலவிதமான பொருள்களைப் போடுகின்றார்கள். பின் மலரைப் போட்டுவிட்டு நெய்யை ஊற்றுகின்றார்கள்.

 

நெய்யை ஏன் விடுகின்றார்கள்?

 

பாலில் இருந்து தயிரைக் கடைந்து வெண்ணையாக்குகின்றோம். அந்த வெண்ணையை உருக்கி நெய்யாக்குகின்றோம்.

 

இதைப் போல உயிரினங்களிலிருந்து மனிதனாகி மனிதனாக உருவான நிலைகளிலிருந்துமிகச் சக்தி வாய்ந்த உணர்வின் தன்மையை.., நெய்யாக..," மாற்றிச் சென்றவர்கள் மகரிஷிகள்.

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறவேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இதுதான் யாகம். அதுதான் வேள்வி.

அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வைப் “புருவ மத்தியில் உள்ள உயிரிலே இணைத்தால் ஒழிய..,” நாம் எந்தத் தீமைகளையும் மாற்ற முடியாது.