1. பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்..,
ஏன்?
பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன். முருகன்
யார்? பிரம்மாவை ஏன் சிறைப்பிடித்தான்?
இப்பொழுது சூரியனிலிருந்து
வரக்கூடிய ஒரு வெப்ப காந்தம் ஒரு ரோஜாப்பூவிலிருந்து வரக்கூடிய மணத்தை அது இழுத்துக்
கவர்ந்து கொள்கின்றது.
அப்படிக் கவர்ந்து கொண்டபின் அந்த மணத்தை வீசி அலைகளாக
அது வீசுகின்றது. சந்தர்ப்பத்திலே அந்த நிலை உருவாகின்றது.
ஆகவே, ஒவ்வொரு சந்தர்ப்பம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் சேர்க்கப்படும்
பொழுது மற்றொரு பொருளினுடைய தன்மைகள் உருவாகின்றது.
இதைப் போன்று “ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்.., நாம் உருவாக்க வேண்டும்”.
இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ செடி கொடிகளை மாற்றி இருக்கிறோம். எத்தனையோ
மாடு ஆட்டின் இனங்களை மாற்றி இருக்கிறோம்.
இந்த இயற்கையில் விளையக்கூடிய அத்தனை சக்தியையும் இந்த
மனித உடலுக்குள் நாம் சிருஷ்டிக்கும் தன்மை அதுதான்.., “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்”.
நான் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமென்று எண்ணுகின்றேன். அப்பொழுது
அந்த எண்ணத்தை நான் சுவாசித்து “என் உயிரிலே பட்டவுடன்.., பிரம்மம்”.
அந்த பிரம்மத்தின் தன்மைகள் என் உடலுக்குள் செல்கின்றது.., “பிரணவம்”. என் உடலுக்குள்
சென்றவுடன் அதன் நிலைகள் கொண்டு “நான் செயல்படுத்துகின்றேன்”. பிரம்மா உருவாக்குகின்றான்.
நம் உயிரின் தன்மை பிரம்மம். இந்த ஆறாவது
அறிவின் தன்மையால், சிருஷ்டிக்க வேண்டுமென்று எண்ணுகின்றேன்.
இந்த உணர்வின் தன்மையை என் உணர்வுக்குள் செலுத்தி “அந்தச் சந்தர்ப்பத்தை
நிகழ்த்தி.., நான் அதைச் செயல்படுத்துகின்றேன்”.
மனிதன் உருபெறும் சக்தி பெற்றவன் என்ற நிலைக்கு அங்கே
மெய் ஒளியின் தன்மையைக் காட்டினார்கள் ஞானிகள். இதைத்தான் முருகன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று காட்டினார்கள் ஞானிகள்.
2. “ஒளி..,” என்ற நிலையைச் சிருஷ்டிக்கும் பிரம்மனாக நாம்
ஆக வேண்டும்
உயிர் பிரம்மம். நாம் யாரிடத்தில் ஏமாற்றினாலும், நம் உயிரான ஈசனிடம் ஏமாற்ற முடியாது. நாம் கொடுத்ததை பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டித்துவிடுகின்றது.
ஆக அதே பிரம்மனிடத்திலே மகிழ்ச்சியை
ஊட்ட வேண்டுமென்றால், அதைக் காட்டிலும் உயர்ந்த மெய்ஞானியின் அருள் ஒளியைச் செலுத்தினால் ஒழிய இந்த உணர்வை
நமக்குள் மாற்ற முடியாது.
சந்தர்ப்பத்தில் நாம் சோர்வோ
சஞ்சலமோ வேதனையோ பட்டுவிட்டால் அனைத்துமே விஷம்.
அந்த விஷமான உணர்வுகளை நாம்
எடுக்கப்படும் பொழுது இந்த விஷத்திற்குள் வேதனை கொண்டு இறந்தவர்களுடைய உயிராத்மா அதிர்ச்சியின் நிலை வரப்படும்
பொழுது நமக்குள் அந்த உயிராத்மா ஊடுருவ சந்தர்ப்பம் ஏதுவாகின்றது.
ஆக, இன்னொரு உடலிலே வேதனையாக, அவன் எந்த நிலையில் இறந்தானோ எந்த வெறியின் தன்மையில் வெறுப்பின்
உணர்வுகளினால் ஆனானோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து நம்மை இயக்கத் தொடங்கிவிடும்.
இதைப் போன்று நம்மை அறியாமேலேயே சந்தர்ப்பங்கள் நம்மை இயக்கிவிடுகின்றது.
ஏனென்றால், பலவீனமாகும் பொழுதுதான் இந்த விஷத்தின் தன்மை ஊடுருவுகின்றது. உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் பொழுது அதை அப்புறப்படுத்துகின்றது.
இப்பொழுது நாம் கோபிக்கும்
பொழுது இந்த உணர்வலைகள் நம் உடலிலே கோப அலைகளாக மாறுகின்றது.
அப்படிக் கோப அலைகள் வரும்
பொழுது யாராவது சந்தோஷமாகப் பேசினாலும் அதை நெருங்கவிடாது. கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சோர்வான நிலையில்
இருக்கும் பொழுது மற்றவர்கள் எந்த நிலையில் பேசினாலும் இந்தச் சோர்வான அலையே உங்களுக்குப்
பாதுகாப்பாக இருந்து அதையேதான் பேசச் செய்து மற்றவற்றை எடுக்க விடாது.
நீங்கள் நல்லதை மகிழ்ச்சியான
நிலையில் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது விஷமான அலைகள் தாக்கியவுடன், “சுர்..” என்று பட்டவுடன் திடீரென்று வெடித்துவிடும்.
சோர்வு, சஞ்சலம் இவை எல்லாம் விஷம். நல்லதையே எண்ணும் பொழுது, “சுருக்..,” என்று ஒருவர் சொன்னால், இது உடனே ஊடுருவி அந்த “நல்லது கலைந்து” அதை உணவாக உட்கொள்கின்றது.
இதைப் போன்ற நிலைகளை நாம்
மாற்ற வேண்டுமென்றால், அதனுடைய ஆற்றலைக் குறைக்க வேண்டுமென்றால், “ஓம் ஈஸ்வரா..,” என்று நம் உயிரிடமே வேண்ட
வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், அதை எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்ற இந்த அலைகளைச் செலுத்தும் பொழுது நமக்குப்
பாதுகாப்புக் கிடைக்கும்.
யார் சங்கடமான நிலைகளைச் சொன்னாலும்
பரவாயில்லை.
அந்த துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியை நாம் சுவாசித்து இந்த ஒளியினை நாம் பாய்ச்சும் பொழுது பிறருடைய
உணர்வுகள் தீயதாக இருந்தாலும் அதை மாற்றும் ஆற்றல் கிடைக்கின்றது.
இவையெல்லாம் இயற்கையினுடைய
நிலைகளை நாம் சிருஷ்டிக்கும் நிலைகள்.
அதாவது மனிதன் பிரம்மாவைச்
சிறைப்பிடித்தான். மனிதனுடைய ஆறாவது அறிவு “எதையுமே சிருஷ்டிக்கும் தன்மை” கொண்டது.
நமக்குள் வரக்கூடிய துன்பத்தை
அகற்ற அந்த மெய் ஒளியின் தன்மையை “நமக்குள் பிரம்மாக்கி.., பிரணவமாக்கி..,” நம்மை தீயது அணுகாத நிலைக்கு அந்த உடலிலேயே உணர்வை ஒளியாக மாற்றிடல் வேண்டும்.
நம் உணர்வின் தன்மையை ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும். இதுதான் கடைசி நிலை அது தான்.