ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2017

இன்று நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்

இந்த வாழ்க்கையில் “இனி.., நாம் எப்படி வாழ வேண்டும்? என்று சிந்தித்தல் வேண்டும்.

இந்த உடலே நமக்குச் சதமில்லாத பொழுது தேடி வைத்த செல்வங்கள் நமக்குச் சதமாகுமா..? நிலம், பூமி, காடு, கரை எல்லாம் சதமாகுமா..?

ஏனென்றால், அன்று வாழ்ந்த அரசர்கள் மற்ற நாட்டின் மீது போர் புரிந்து எத்தனையோ கொள்ளையடித்தார்கள். கொள்ளை அடித்த செல்வங்களை அவன் பித்ருக்கள் வைத்துள்ளார்களா..,? சந்ததிகள் வைத்துள்ளார்களா..,?

இல்லை. அனைத்தும் மடிந்துவிட்டது. கட்டிய கட்டடங்கள் நகரங்கள் அழிந்து விட்டது.

“எவரோ ஆண்டார் என்றும்.., இதனை எக்காலத்தில் “எவன் ஆண்டான்..,” என்றும் பூமிக்குள் பல இயற்கையின் நிலைகள் சீற்றமாகி அடக்கமில்லாத நிலை வரும் பொழுது நீர் நிலைகள் பரவப்பட்டு “நாட்டையே அழித்துச் சென்றபின்..,” அந்த மண் மேட்டிற்குள் அனைத்தும் அடங்கிவிடுகின்றது.

அவன் கலாச்சாரம், அவன் செய்த நிலைகள் எல்லாம் மறைந்தது. அரசனும் மடிந்தான். அவன் மீண்டும் மிருக நிலையையே அடைந்தான்.

அதைப் போன்ற நிலைகள் “மனிதனுக்குள் தீவிரவாதம்..,” என்ற நிலைகளில் அதீதமாக வளர்ந்து இன்றும் மனிதன் சிந்தனை இழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளான்.

கடும் விஷத் தன்மைகளைப் பரவச் செய்துள்ளார்கள். அந்த விஷத் தன்மைகள் அனைத்தும் நம் பூமியின் மையைப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

அதனால், நம் பூமி கூடிய சீக்கிரம் நீர் நிலை அடையப் போகின்றது. நீர் நிலை அடைந்தால் நாம் மீனின் நிலை தான் அடைவோம்.

ஆக, சூரியனைக் கடந்து செல்லப்படும் பொழுது வியாழன் கோளைப் போன்று பனிப் பாறைகளாகி இந்தப் பூமி நகர்ந்து சென்றாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விஷத்தன்மைகள் சூரியனுக்குள் சென்று “சூரியனே மடியப் போகின்றது”.

அதிலே கதிரியக்கப் பொறிகள் வரப்படும் பொழுது அந்தச் சூரியனுக்குள் கொதிகலனாகின்றது.

பூமிக்குள் இங்கே எரிமலை கக்குவது போல சூரியன் செயலிழக்கும் தன்மை வந்து கொண்டே இருக்கின்றது. இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் பிரபஞ்சத்தில் பரவப்படும் பொழுது மற்ற கோள்களுக்குள்ளும் செல்கின்றது.

இந்தச் சுழற்சி போய்விட்டால் இனி மனிதன் வாழும் இன்னொரு பூமிக்குள் சிக்கி அங்கே மனிதனான பின் தான் அதிலிருந்து மீண்டிட முடியும்.

ஆனால், அது வரையில் எந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க நேரும். இதிலிருந்து சிறிதளவேனும் காக்க வேண்டும்.

ஆகவே, இன்று மனிதனாக வாழும் நிலையில் “நினைவு இருக்கும் பொழுதே” அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் செல்லும்போது அந்த ஞானிகளின் உணர்வுடன் “என்றும் ஏகாந்த நிலை பெற முடியும்..,” என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே வாழ வேண்டும் என்று அந்த எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடருங்கள்.

யாருடைய துன்பத்தின் நிலைகளைக் கேட்டறிந்தாலும் உடனே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நோயால் வேதனைப்படுபவர்களைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று “அவர்களை எண்ணச் செய்யுங்கள்”. மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று நீங்கள் நலமடைவீர்கள் என்று “செவி வழி.., இந்த உணர்வை ஓதுங்கள்”.

நினைவாற்றலை இதே போல அவரை எண்ணச் செய்யுங்கள்.

அதன் வழி வந்தால் அவர்களுக்குள் வரும் பகைமைகள் மறையும். அவர்கள் நினைவாற்றல் அந்த மகரிஷிகளின் பால் செல்லும். அதே சமயத்தில் அவரின் நோயின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகாது.

அந்த அருள் ஒளியின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது இது நமக்குள் தீமைகள் அடங்கிவிடுகின்றது.

அப்பொழுது அருள் ஒளியின் தன்மையே நமக்குள் வளர்கின்றது. அவர் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. அவர் உடலில் வந்த நோய் நமக்குள் வருவதில்லை.

இதை நாம் அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

உங்களை ஆண்டு கொண்டிருக்கும் உயிரை மதித்துப் பழக வேண்டும். அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அருள் வழியில் இருளை அகற்றப் பழகுங்கள். உங்கள் நினைவின் ஆற்றலைத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்லுங்கள். அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பழகுங்கள்.

இதுவே மனிதனின் கடைசி எல்லை.