ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2017

முருகனின் தத்துவம் - 13

பஞ்சாபிஷேகம் – பஞ்ச அமிர்தம் (பஞ்சாமிர்தம்) 
உதாரணமாக, கருணைக் கிழங்கை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள விஷம் நம்மை வீழ்த்திவிடும். அதை ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றியமைக்கக்கூடிய சக்தி பெற்ற நாம் என்ன செய்கின்றோம்?

கருணைக் கிழங்கில் விஷம் இருக்கிறதென்றால் “வேக வைத்து” விஷத்தின் தன்மை தணிக்கின்றோம்.

தொக்கியுள்ள இதனுடன் ஒன்றிய நிலைகளை “புளியைக் கரைத்துச்” சேர்த்து அந்த விஷத்தின் தன்மைகளைத் தணிக்கின்றோம்.

மிளகாயைத் கலந்து புளியுடன் சேர்த்து “உணர்ச்சியைத் தூண்டும்” சக்தி பெறச் செய்கின்றோம்.

உப்பைக் கலந்து அதனுடன் பல சரக்குகளைச் சேர்த்து இணைத்துச் “சுவையாக..,” மாற்றுகின்றோம். இதைத்தான் “முருகு” மாற்றியமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.

1.கருணைக் கிழங்கில் “விஷம் இருக்கின்றது..,” என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.
2.மிளகாயில் “கார உணர்ச்சிகள் உண்டு..,” என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.
3.புளியைக் கரைத்தால் விஷத்தின் நேர்முக இயக்கத்தை அடக்குகின்றது என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.
4.உப்பைச் சேர்த்தால் சுவையின் உணர்ச்சிகளைத் தூண்டும் என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.

இவை அனைத்தையும் தன் உணர்வால் சுவையுள்ளதாக மாற்றி பல சரக்குகளைச் சேர்த்த பின்
1.கருணைக் கிழங்கைக் குழம்பாக வைத்து “ருசித்துச் சாப்பிடும்போது..,”
2.அந்த உணர்ச்சிகள் “பஞ்ச அபிஷேகமாக..,”
3.மகிழ்ச்சியான நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
4.அப்பொழுது அந்த விஷத்தை வென்ற உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு..,
5.அந்த உணர்வின் “(ஊறும்) அமிலங்களை” உருவாக்குகின்றது.
6.அந்த அமிலங்கள் நம் “உமிழ்நீராக..,” மாறுகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் “மகிழ்ச்சியூட்டும் உணர்வை ஊட்டப்படும் பொழுது..” அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.

அப்பொழுது அந்த அணுக்களின் மலமாகி நம் உடலே நல்லதாகி நம் உடலை “ஆரோக்கியமான நிலைகளில்” உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

விஷத்தை அடக்குகின்றது. இதுதான் ஆறாவது அறிவாக மகிழ்வாகனா. மயிலைக் காட்டி அது தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுகின்றது என்று சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம் காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் சூடத்தையும் பஞ்சாமிர்தத்தையும் அங்கே கொடுத்தால் “முருகன் செய்வார்..,” என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

1.“பஞ்சாபிஷேகம்” என்றால்..
2.விண்ணிலிருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைக்
3.கண்களாலே காதாலே வாயாலே உடலாலே சுவாசத்தாலே எடுத்து
4.நமக்குள் சேர்க்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல புலனறிவில் கவர்ந்து கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இவை அனைத்தும் அந்தப் புலனறிவின்
1.“பஞ்ச அமிர்தம்… பஞ்சாமிர்தம் என்ற நிலை அங்கே வருகின்றது.
2.அதுதான் “காயத்ரி..,” என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் அந்த எண்ணத்தை ஏங்கினால் அதன் உணர்வுகள் நம் உயிரிலே படும் பொழுது “அந்த உணர்ச்சியின் இயக்கமாக..” நம்மை இயக்குகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் செல்லப்படும் பொழுது அந்த “அகஸ்தியன்” எப்படித் தீமைகளை வென்றானோ.., “அந்த உணர்வின் தன்மை…, தீமையை  மாற்றியமைக்கும் உணர்ச்சிகள்” நம் உடலிலே வருகின்றது.


அப்படிச் சேர்த்துக் கொண்டால் அது ஒளியின் சுடராக நமக்குள் மாறி, உயிருடன் ஒன்றிடும் நிலையாகப் பெறமுடியும். அதன் வழி கொண்டு அந்த மெய்ஞானிகள் சென்றடைந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அனைவரும் எளிதில் அடையலாம்.