ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2017

“ஓ..ம் நமச்சிவாய.., ஓ..ம் நமச்சிவாய.., ஓ..ம் நமச்சிவாய..,”

நாம் எதை எதை எப்படிச் செய்தாலும் “நம் உயிரிடமிருந்து மட்டும்..," யாரும் தப்பவே முடியாது.

நாம் எண்ணியது எதுவோ அதை ஒவ்வொரு நிமிடமும் “ஓ..ம் நமசிவாய..,..ம் நமசிவாய”..,” என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எண்ணிய உணர்வுகள் நல்லவை - கெட்டவை..,” அனைத்தும் நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இதைத்தான் “ஓ..ம் நமசிவாய..,..ம் நமசிவாய”..,” என்பது. அப்படியென்றால் நம் உடலை.., சதா சிவமாக்கிக் (சதாசிவம்) கொண்டயுள்ளோம்.

எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த மணத்தின் தன்மை வருகின்றது. அந்தச் சொல்லின் தன்மை வரப்படும் பொழுதுதான் “சிவாய நம ஓம்”.

நாம் நுகர்ந்தது ஜீவனாகி நமக்குள் அணுவாகி சிவமாகின்றது. எது ஜீவனாகி அணுவாக சிவமாக ஆனதோ நமக்குள் இருந்து அதனின் சொல்லாக, செயலாக வெளிவரும்..,” - “சிவாய நம ஓம்”.

வெறும் வாயில் “ஓ..,ம் நமச்சிவாய.., “ஓ..,ம் நமச்சிவாய.., என்றால் அதில் பொருள் இல்லை. அது வெறும் சொல்லே.

“ஓ..,ம் நமச்சிவாய…, என்று சொன்னால் அந்தச் சிவன் இறங்கி வந்து “என்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்…,” என்று எதையாவது ஓடி வந்து செய்வான் என்ற இந்த நம்பிக்கையைத்தான் ஊட்டியுள்ளார்கள். 

சாஸ்திர சாங்கியங்களின்படி “ஓம் என்றால்.., பிரணவம்”. இப்படிச் சொல்லி அதையே ஜெபித்தால் எனக்குள் ஜீவன் வந்து விடும் இன்று தவறான வழிகளில் நாம் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.

மந்திரத்தை “ஜெபிக்கத்தான்..,” (ஒலியை எழுப்பத்தான்) சொல்லியிருக்கின்றார்களே தவிர அந்த ஒலிக்குள் உள்ள மூலக் கூறை அறிந்து அந்த அருள் உணர்வைச் “சுவாசிக்கும்படி..,” யாரும் சொல்லவில்லை

வெறுமனே “ஓ..,ம் நமச்சிவாய.., “ஓ..,ம் நமச்சிவாய.., என்றால் எதை நீ “ஓ..,ம் நமச்சிவாய.., ஆக்க வேண்டும்? எதைச் “சிவாய நம ஓ..ம்” ஆக்க வேண்டும்?

ஆகவே, “நீ எதைச் சிவமாக (உன் உடலாக) உனக்குள் ஆக்கவேண்டும்..,?” என்பதைத் தெளிவாக உபதேசித்தருளினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெறவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நாங்கள் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும். எங்களைப் பார்ப்போர் அனைவரும் உடல் நலம் பெறவேண்டும். எங்களைப் பார்ப்போர் தீமைகள் அகல வேண்டும்.

“இதை நமக்குள் வினையாக்கச் செய்யவேண்டும்…,” மூஷிகவாகனா.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைச் சுவாசித்து அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் கண்டுணர்ந்த மெய்ஞானிகளின் அருள் சக்தி திறன் அனைவரும் பெறவேண்டும். அனைவரும் பொருள் கண்டுணரும் திறன் பெறவேண்டும். அவர்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். அங்கே அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

“இப்படி எண்ணி.., இதை வினையாக்கச் சொன்னார்கள்..,” ஞானிகள்.

ஏனென்றால், வாழ்க்கையில் பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது “இப்படித் தவறு செய்கின்றானே..,” என்று எண்ணுகின்றோம்.

ஆனால், அச்சமயம் அவன் அந்தத் தவறு செய்யும் நிலைகளிலிருந்து “மீள வேண்டும்..,” என்று எண்ண முடியவில்லை.

ஆகவே, அதற்காக வேண்டிச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். நாம் அன்றாட வாழ்க்கையில் “உடல் அழுக்கைப் போக்குவது போல” நாம் வாழ்க்கையில் கேட்டுணர்ந்த தீமையின் தன்மைகளைப் போக்கிட “வானை நோக்கி..,” எண்ணும்படிச் செய்தார்கள்.

“விண்ணிலிருந்து வரும்” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி நாம் கேட்டறிந்த “தீமைகளைத் துடைக்கும்படி.., நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும்படி..,” செய்தனர்.

இதை வழிப்படுத்தி நம் வாழ்க்கையில் யாரை யாரையெல்லாம் சந்தித்தோமோ.., அவர்கள் எல்லாம் இத்தகைய நிலைகள் பெறும்படி “பல முறை செய்தல் வேண்டும்”.

அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை.

இருப்பினும் அவர்கள் “எல்லோரும் அருள் உணர்வுகள் பெறவேண்டும்”, அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்.

அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெறவேண்டும் அவர்கள் குடும்பமெல்லாம் நலம் பெறவேண்டும் “ஈஸ்வரா..,” என்று நமக்குள் ஆண்டு கொண்டிருப்பவனிடம் இதைக் கேட்டால் அது “ஓ..,ம் நமச்சிவாய.., “ஓ..,ம் நமச்சிவாய..,”

நாம் எத்தகைய உணர்வினை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது “ஓ..,ம் நமச்சிவாய..,”

“அனைவரும் நலம் பெற வேண்டும்” என்ற இந்த உணர்வினை நமக்குள் இதைச் “சதா சிவமாக்க வேண்டும்”.

தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்று அதை நாம் எண்ணும் பொழுது நமது உயிர் ஓ.., என்று பிரணவமாக்கி “ம்..,” என்று நமது உடலாக்கும். ஞானிகள் சொன்ன உட்பொருளே இது தான்.
“இதை உனது உடலாக்கு..,
“உனக்குள் இதை ஜீவ அணுவாக மாற்று..,”
என்று தான் காவியத்தைப் படைத்துள்ளார்கள் ஞானிகள்.