இன்று கணவன் மனைவியாக வாழ்பவர்களில் எந்த அளவிற்கு ஒன்றுபட்டு
வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
குடும்பங்களில் எடுத்துக் கொண்டால் சில நேரங்களில் கணவரை
எதிர்த்துப் பேசும் நிலைகளும் சில நேரங்களில் மனைவியை அடிமையாக்கும் உணர்வுகளும் தான்
“பெரும் பகுதி” இன்று வருகின்றது.
கணவன் மனைவியை அடிமையாக்கும் இந்த உணர்வின் தன்மை வந்துவிட்டால்
“வெகுண்டெழுந்து.., சீறிப்பாயும் உணர்வுகள்.., பெண்கள் மத்தியில் உருவாக்கிவிடுகின்றது”.
இதைப் போன்ற “சீறி பாயும் உணர்வுகள்” பெரும்பகுதி வீடுகளிலும்
சரி சொந்தபந்தங்களிலும் சரி இதைப் போன்ற எத்தனையோ இடங்களிலும் சரி கடுமையான சந்தர்ப்பங்கள்
ஏற்பட்டுக் கொண்டே தான் உள்ளது.
இத்தகைய விஷமான உணர்வலைகள் சூரியனின் காந்தப்புலனறிவினால்
கவரப்பட்டு காற்றிலே அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது.
அத்தகைய கருக்கள் அதிகமாகிவிட்டால் அந்தக் குடும்பத்திலேயே
விஷத் தன்மைகள் பரவி சிந்தித்துச் செயல்படும் செயல்களையே இழக்கச் செய்துவிடுகின்றது.
ஒன்றி வாழும் நிலையை இழக்கச் செய்கின்றது. மன அமைதியைக்
குலைக்கின்றது.
இது நம்மை அறியாமல் குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர்
சண்டை இட்டுக் கொண்டாலும் இந்த உணர்வுகள் நமக்குள் நுகரப்படும் பொழுது அங்கிருப்போர்
அனைவருக்கும் வெறுப்பின் உணர்வுகளும் வெறியான உணர்வுகளுமே உடலுக்குள் பெருகத் தொடங்கிவிடுகின்றது.
அதே சமயத்தில் வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் பொழுது “சண்டையிட்ட
உணர்வுகளும்.., வெறுப்புடன் பேசிய உணர்வுகளும்” வீட்டில் உள்ள தரைகளிலும் சுவர்களிலும்
மற்ற இடங்களிலும் “பதிவாகிவிடுகின்றது”.
இவ்வாறு ஒருவருக்கொருவர் வெறுப்பான செயல்களைச் செய்யப்படும்
பொழுது கடைசியில் வேதனை அதிகமாகிவிடுகின்றது.
வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது “கடும் வாத நோய்களை”
உருவாக்கிவிடுகின்றது. மனிதனின் உறுப்புக்களைச் சீர் குலையச் செய்து சிந்திக்கும் தன்மை
அனைத்தும் இழந்து “ஏங்கித் தவிக்கும் நிலையே” உருவாகிவிடுகின்றது.
கை கால் அங்கங்கள் செயல்படவில்லை என்றால்.., “யார் கொடுப்பார்..,?
எவர் கொடுப்பார்..,? யார் நமக்கு உதவி செய்வார்கள்..,? என்ற உணர்வினை ஏங்கிப் பெறும்
நிலையே வருகின்றது.
ஏங்கிப் பெறும் நிலைகள் வந்தாலும்.., “ஏங்கும் பொழுது கிடைக்கவில்லை
என்றால்..” மீண்டும் எல்லை வேதனையே அதிகமாகின்றது.
இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமா வேண்டாமா. கணவன் மனைவியாக
வாழ்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
“எப்பொழுதுமே.., கணவன் மனைவிக்குள்.., பகைமை உணர்வே வரக்கூடாது”.
இதை இருவருமே உறுதியாக்கிடல் வேண்டும்.
எப்பொழுதும் சந்தர்ப்பபேதங்கள் வருகின்றதோ அடுத்த கணம்
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள்
பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள்.
நாங்கள் கணவன் மனைவி இருவருமே வசிஷ்டரும் அருந்ததியும்
போன்று ஒரு மனமும் ஒரு மனமாகி நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப்
போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்ற உணர்வை இழுத்துச் சுவாசியுங்கள்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொண்டால் “அது எப்படி.., ஏகாந்த நிலைகள் கொண்டு.., எதிர்ப்பே
இல்லாது..,” வளர்ந்து கொண்டுள்ளதோ இதைப் போல நாமும் கணவன் மனைவி இருவரும் “அந்த வளர்ச்சி”
பெறமுடியும்.
அந்தத் துருவ மகரிஷி எப்படிக் கணவனும் மனைவியும் இணைந்து
வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தனரோ அதே போல நாமும் இந்த வாழ்க்கையில் நிச்சயம்
வாழ முடியும்.
இந்த உணர்வுகளைப் பதிவாக்கிவிட்டால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள்
நாம் சிக்காது “ஏகாந்த நிலைகள் கொண்டு..,” பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.
உங்களால் நிச்சயம் முடியும், உங்களை நம்புங்கள். மகிழ்ந்து
மகிழ்ந்து வாழுங்கள், பேரானந்த நிலையை அடையுங்கள்.