ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2018

இயந்திரத்தின் மூலம் இயக்கங்களைச் சமப்படுத்துவது போல் (ELECTRONIC CONTROL) ஆறாவது அறிவால் தீமைகளை நிறுத்தி “நம் வாழ்க்கையைச் சீராக்க முடியும்...!”


வெளியிலே பார்த்தீர்கள் என்றால் எத்தனையோ பேர் தவறு செய்கின்றார்கள். உங்களுக்கு யாரும் தீங்கு செய்ய வேண்டாம்.

ஒருத்தன் ஒருவன் உதைக்கின்றான் என்று பார்த்தீர்கள் என்றால் என்ன ஆகின்றது...? அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்துடன் சேர்த்து கெட்டதாகி விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு நடப்பதைப் பார்த்ததும் “ஜிர்ர்ர்...” என்று நமக்குக் கோபம் வருகின்றது. அதை எப்படிச் சமப்படடுத்ததுவது அல்லது மாற்றுவது...?

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்கி ஆணையிட்டு (PROGRAMMING) வைத்து விடுகின்றார்கள். எதன் வலு இருக்கின்றதோ அதற்குக் கீழே மாற்றமானால் அந்தத் தணிந்ததை அதை அடக்குகின்றது.

அதாவது அடக்கக்கூடிய ஒலியின் அறிவைக் கொடுத்தோம் (ELECTRONIC CONTROL) என்றால் அது இதை அடக்குகின்றது. இயந்திரத்தையோ அல்லது அதனின் செயல்பாடுகளைச் சீராக்கி இயக்குகின்றது.

மழை காலமோ குளிர் காலமோ வருகிறதென்று சொன்னால் அந்தந்தப் பருவ காலத்தில் வெப்ப நிலை மாற்றமாகின்றது.

தன்னிச்சையாக (AUTOMATIC) கம்ப்யூட்டரில் போட்டுப் பதிவு செய்து ஆணையிட்டு வைத்திருக்கின்றார்கள். வெப்பம் குறைகிறது என்று சொன்னால் அது அந்தக் குளிர்ச்சி ஆனவுடனே “டக்…” என்று மாற்றி சமமான வெப்பத்தைக் கொடுக்கின்றது. (AIR CONDITIONER, FRIDGE)

வெப்பம் அதிகமானால் இதை நிறுத்துகின்றது. மீண்டும் குளிர்ச்சியைக் கொடுக்கின்றது. வெப்பத்தைச் சமப்படுத்துகின்றது.

இயந்திரம் இந்த வேலையைச் செய்கின்றது. ஆனால் அந்த இயந்திரத்தை உருவாக்கியதே மனிதன் தான். இது இந்த வேலை தான் செய்ய வேண்டும் என்று கட்டளை இடுகின்றான். அந்த ஆணைப்படி அது இயக்கிச் சீராக்குகின்றது.

புற நிலைகளுக்கு இதை விஞ்ஞானிகள் செய்தாலும் அக நிலைக்கு நம்முடைய மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி ஆறாவது அறிவு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும். அப்படிப் பழகிக் கொண்டால்
1.தீமைகள் வரும் சமயம் உடனடியாக அதை அறிந்துணர்ந்து அடக்க முடியும்.
2.எந்தெந்த உணர்வுகளை எப்படி எப்படிச் சமப்படுத்த வேண்டும் என்ற
3.அறிவின் ஞானம் நமக்குக் கிடைக்கும்.

ஒரு சப்... என்று இருக்கின்ற மாவில் காரத்தைப் போட்டால் காரம் ஒடுங்குகின்றது. சுவை வருகின்றது.

இதே மாதிரித் தான் நம் வாழ்க்கையில் தீமைகள் வரும் சமயம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை அதனுடன் இணைத்து அதை அடக்கிப் பழகுதல் வேண்டும்.

ஒரு தீபத்தைக்  காட்டியவுடனே வழி (பாதை) தெரிகின்றது. இது தான் தீப வழி. அதாவது
1.வெளிச்சத்தில் நாம் வாழ வேண்டும்
2.தெளிவாக வாழ வேண்டும்.... தெளிந்து வாழ வேண்டும்
3.நாம் எதிலும் “தெளிவாக இருக்க வேண்டும்” என்பது தான் அதனுடைய பொருள்.

தீபம் என்றால் வெளிச்சம். தீபம் இருந்தால் தானே வெளிச்சமாகின்றது. அதன் வழியில் நாம் நடக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துக் கொண்டே வந்தால் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.