ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2018

இந்த வாழ்க்கையில் எதை நம் குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும்...?


உதாரணமாக இரண்டு பேர் நம்மைக் கடுமையாகத் திட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நமக்கு எரிச்சல் வருகின்றது... வேதனையும் வருகின்றது...!

அப்போது அந்த எரிச்சலும் வேதனையும் வரும் போது அவனை நினைக்கும் போதெல்லாம் “என்னை இப்படிக் கேவலாமாகப் பேசினான்… பேசினான்.. பேசினான்…! என்று நாம் அதிகமாகப் பேசுகின்றோம்.

எரிச்சலையும் வேதனையையும் அதிகமாகச் சுவாசிக்கும் போது நம் ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் இரத்தமாகக் கலக்கப்படும் போது கை கால் குடைச்சல் தலை வலி மேல் வலி இடுப்பு வலி அஜீரணக் கோளாறு  இதைப் போல நிலைகளெல்லாம் உரு பெற்று விடுகின்றது.

ஆகவே இதைப் போன்று வேதனைப்படும் சந்தர்ப்பம் வந்தால் அடுத்த கணம் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் இரத்தத்தில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் நினைவைச் செலுத்திச் சிறிது நேரம் தியானிக்க வேண்டும்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் வெள்ளி பித்தளை ஆவியாகப் போவது போன்று எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ அப்போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்துத் தீமைகளைப் பிரிக்க வேண்டும்.

நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. பத்திரிக்கைகளைப் பார்க்கின்றோம். பயங்கர ஆயுதங்கள் கொண்டு ஒரு குடும்பத்தைத் தாக்கிவிட்டு வீட்டிலுள்ள பொருளை எடுத்துச் சென்றான் என்று படிக்கின்றோம்.

அந்த நினைவுகள் நம்மை இயக்கி இரவிலே அந்த நினைவுகள் வந்து “சறுக்...!” என்று சத்தம் கேட்டாலே நம்மை அலறச் செய்கின்றது...! பதட்டமாகின்றோம். ஏனென்றால்
1.நமக்குள் எதைப் பதிவு செய்கின்றமோ
2.அந்தப் பய உணர்வுகளும் "இப்படி ஆகிவிட்டதே…" என்ற வேதனை உணர்வுகளும்
3.உமிழ் நீராகச் சேர்த்து நம் உடலுக்குள் வித்தாகின்றது.

பதிவானதை நீக்க வேண்டும் என்றால் மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் எடுத்து அதைச் சுவாசித்து அந்த உமிழ் நீரை நம் உடலுக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

தங்கத்திற்குள் திரவகத்தை விட்டதும் அழுக்குகள் ஆவியாக ஆனது போன்று எவ்வளவு கொடிய வேதனையோ எரிச்சலான நிலைகள் இருந்தாலும் அதை அகற்றிட முடியும். மனதைச் சமப்படுத்த முடியும்

கெட்டதைச் சந்திக்கின்றோம் என்றால் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அப்போதைக்கப்போது சேரும் அழுக்கை துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படிக் கற்று கொண்டால் தான் நாம் மனிதன் என்ற நிலைகளில் முழுமை அடைந்து எங்கே ஒளியாகச் செல்ல வேண்டுமோ அந்தப் பாதையிலே செல்ல முடியும்.

மீன் தனக்குள் இருக்கும் காந்தம் குறையும் பொழுதெல்லாம் வெளியில் வந்து தனக்குத் தேவையான காந்தத்தை எடுத்துக் கொண்டு தான் அடைய வேண்டிய நிலைகளுக்குச் செல்கின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்த பின் விண் செல்ல வேண்டும் என்பதே ஞானியர்கள் அறிந்துணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மையின் நிலைகள்.

ஆகவே
1.”விண் செல்ல வேண்டும்...!” என்ற நினைவு ஒன்றைக் குறியாக வைத்து
2.அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் நடந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெறும் நல்ல சந்தர்ப்த்தை இந்த வாழ்க்கையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.