ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று பார்க்கின்றோம். நம் கண்கள் காட்டுகின்றது.
கெடுதல் செய்யும் உணர்வினை உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது,
நம் கண்கள் எதைப் பார்த்து பதிவு செய்ததோ அவனைப் பார்த்தவுடனே “தவறு
செய்பவன்...” என்று நமக்கு உணர்த்துகின்றது. கெட்டவன் என்று தெரியும் போது அந்த உணர்வால்
விலகிச் செல்கின்றோம். கண்கள் நம்மைக் காப்பாற்றுகின்றது.
அல்லது அவன் தாக்க வருகின்றான் என்றால் அதைத் தடுப்பதற்குத்
தக்க ஆயுதத்தை நம்மிடம் வைத்துத் தன்னைப் பாதுகாக்கவும் செய்கின்றது... இதே கண்கள்
தான்.
இருந்தாலும் அவன் நம்மைத் தாக்க வருகின்றான் எனும் பொழுது நாம்
நுகர்ந்த உணர்வோ அவனை நாம் அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.நம் உயிர் என்ன செய்கின்றது...?
2.அதே உணர்வின் அணுவாக மாற்றுகின்றது.
3.அப்போது அவன் அழிக்க வேண்டும் என்ற உணர்வு இங்கே இரத்தத்தில்
கருவாக உருவாகின்றது.
4.இப்படிச் செய்கின்றான்... அவனை விடுவதா… விடுவதா… விடுவதா…? என்று
இதைக் கூட்டுகின்றோம்.
அப்போது கருவுற்ற ஒரு கோழி கேறுகின்ற மாதிரி நமக்குள் அது உருவாக்கி
விடுகின்றது. அது உருவாக்கிய பிற்பாடு என்ன செய்கின்றது?
அவன் எப்படி நமக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று நினைத்தானோ அது
நமக்குள் வந்து நம்மிடமிக்கும் நல்ல குணத்தை இது இடையூறு செய்து கொண்டே இருக்கும்.
நல்லதைச் செயல்படுத்த விடாது.
தவறு செய்பவன் எங்கயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். அவன்
உடலில் விளைந்தது நமக்குள் நரகாசுரனாக அசுர குணங்களாக உருவாக்குகின்றது.
அவன் அசுரன் என்று காட்டுகின்றது. நாம் நுகர்ந்து அறிகிறோம். ஆனால்
நமக்குள் பதிவாகிவிடுகின்றது.
அசுத்தம் என்று தெரிகின்றது. அந்தச் சாக்கடை மேலே பட்டவுடனே அறிகிறோம்
- “கார்த்திகேயா...!” உடனே நல்ல நீரை வைத்துச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.
அதே மாதிரி அசுர குணம் என்று தெரிகின்றது. அதை நிறுத்த வேண்டும்
அல்லவா...?
அதை அடக்குவதற்கு அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துக்
கொள்ள வேண்டும். அந்த அசுர குணத்தை அடக்கி விடுகின்றது. அதை எழுந்திரிக்க விடுவதில்லை.
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்.
2.வைரத்தைப் போல எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்.
3.எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும்... செயல் ஜொலிக்க வேண்டும் என்று
கூட்டிவிட்டோம் என்றால்
4.இந்த வெளிச்சத்திற்குள்ளே அந்த இருள் (அசுர குணம்) மறைந்துவிடுகின்றது.
இந்த வைரம் விஷம் கொண்டது தான். ஆனால் அது ஜொலிக்கின்றது. வைரத்தைப்
போல தன் உணர்வுகளை எல்லாம் ஜொலிக்கச் செய்தவன் துருவன்.
அப்போது நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்போகும் போது துருவ
நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நுகர்ந்தோம் என்றால் இருள் மறைகின்றது.
இல்லை என்றால் நம் அறிவை மழுங்கச் செய்யும் போது நமக்குள் என்ன
செய்யும்..?
எவ்வளவு திறமையாக இருக்கும் கொஞ்சம் விஷம் போட்டால் என்ன செய்யும்...?
நம் எல்லா வலுவும் இழந்து விடுகின்றது. ஐய்யயோ ஐய்யயோ இப்படி ஆகின்றதே.. செத்துப் போய்விடுவோம்
என்ற இந்த உணர்வு தான் வருகிறது. தன்னைக் காப்பாற்றுவதற்கு முடிகிறதோ...?
பதறுவோம்… பதட்டமாவோம்...! காப்பாற்றுவதற்கு முயற்சியும் எடுக்கின்றோம்.
முயற்சி எடுத்தாலும் முடியாத நிலை வரப்போகும் போது அது வீழ்த்தி விடுகின்றது.
1.நம்மால் முடியவில்லை...!
2.பின் வேறு யாராவது தான் வந்து நமக்கு உதவி செய்ய வேண்டும்.
ஆனால் நாம் இருந்த இடத்திலிருந்தே உதவியைப் பெற வேண்டும்
என்றால் யாரிடம் கேட்க வேண்டும்...? எப்படிக் கேட்க வேண்டும்...?
எதிர்பாராத நிலை வந்து விட்டது. ஒருவன் தவறு செய்கின்றான். நம்மால்
முடியவில்லை என்கிற பொழுது
1.“ஈஸ்வரா.....” என்று புருவ மத்தியில் நம் உயிரிடம் கேட்க வேண்டும்.
2.ஈஸ்வரா என்று சொன்னவுடனே கண்ணோட நினைவு நேரடியாக அந்தத் துருவ
மகரிஷியின் பால் செல்ல வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர
வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்
4.இந்த இருட்டை அப்பொழுதே அது வெல்லுகின்றது.
அந்த இரண்டையும் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் அணுவாக உருவாக்கப்படும்
போது வேதனைகளை அடக்குகின்றது.
இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இருந்த இடத்திலிருந்தே உயிரின்
துணை கொண்டு வரும் சிக்கல்களிலிருந்து விடுபட முடியும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேரருள் பேரொளியின் உணர்வுகள்
நமக்குள் வளர்கின்றது.